Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
திருப்பதி என்ற பெயரைக் கேட்டாலே ஏழுமலையான்தான் நினைவுக்கு வருகிறார். வாழ்வில் கஷ்டப்படும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திருப்பதி ஏழுமலையானுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் உள்ளனர். இவ்வாறு எண்ணற்ற பக்தர்கள் வந்து செல்லும் ஒரே கோயில் இதுவாகும். அற்புதமான தெய்வீக சக்தி கொண்ட இந்த பெருமாளின் கோயிலில் சந்திரனின் கதிர்கள் அதிகமாக இருப்பதாக ஐதீகம். அதனால் இங்கு செல்வம் எப்போதும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
பொதுவாகவே ஒருவருடைய ஜாதக கட்டத்தில் சந்திரன் சரியான இடத்தில் அமைந்து விட்டால், அவர் கட்டாயம் யோககாரனாகத்தான் இருக்க முடியும். நம்முடைய இந்தியாவில், சந்திரனின் தாக்கம் அதிகமாக இருக்கும் பகுதி திருப்பதி மலைதான். அதாவது சந்திரனின் ஒளிக்கதிர்கள் அதிகமாகப்படும் இடம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் இங்கு செல்வவளம் எப்போதும் நிறைந்திருக்கின்றது.

மேலும், ராமானுஜரின் எந்திர சக்கரங்களும் இங்குள்ள செல்வத்திற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. இந்த கோவிலுக்கு சென்றால், ஜாதக தோஷம், கிரக தோஷம், புத்திர தோஷம் இருந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் சில ராசிக்காரர்கள் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி செல்லக்கூடாது என்று கூறப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல், வெறும் காலுடன், தலையை உயர்த்திக்கொண்டு திருப்பதிக்கு நடந்தால், நம் உடலில் ரத்த ஓட்டம் சீராக இயங்கத் தொடங்குகிறது. வாழ்வில் பிரச்சனை உள்ளவர்கள், மனவளர்ச்சி குன்றியவர்கள் திருப்பதி மலையில் நடப்பது மிகவும் நல்லது. குறிப்பாக திருப்பதி சென்று திங்கட்கிழமை தங்கினால் அதிக பலன்களைப் பெறலாம்.
பணப்பிரச்சனை உள்ளவர்கள் தமிழ் மாதத்தின் முதல் திங்கட்கிழமையன்று திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தால் வருட இறுதிக்குள் கோடீஸ்வரர்கள் ஆவர் என்பது நம்பிக்கை. திருப்பதி யாத்திரையால் வாழ்வில் வளம் பெருகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கை. ஆனால் இந்த 3 ராசிக்காரர்களும் திருப்பதிக்கு செல்லக்கூடாது என்று சாஸ்திரங்களில் கூரப்பட்டுள்ளது. அப்படி, போனால் கடனாளிகள் ஆகிவிடுவார்கள். அந்த ராசிகள் சிம்மம், தனுசு மற்றும் கும்பம். இந்த ராசியை தவிர மற்ற 9 ராசிக்காரர்கள் எப்போது வேண்டுமானாலும் திருப்பதி செல்லலாம்.
இந்த 3 ராசிக்காரர்களும் பொதுவாக சந்திரனால் பாதிக்கப்படுவதாக சாஸ்திரம் கூறுகிறது. ஜாதகத்தில் சந்திரன் சரியான நிலையில் இருந்தால், அப்படிப்பட்டவர் சந்திரதேவரின் அருள் பெறுவார். திருப்பதி மலையில் நிலவொளியின் கதிர்கள் அதிகமாக இருக்கும். இதனால் இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி செல்லக்கூடாது என்பது ஐதீகம். அப்படிப்பட்டவர்கள் தொடர்ந்து திருப்பதிக்கு சென்றால் கடனாளிகள் ஆகிவிடுவார்கள் என்பது ஐதீகம்.
வருடத்திற்கு ஒருமுறை சென்றால் தவறில்லை. ஒரு வருடத்தில் திருப்பதிக்கு அடிக்கடி சென்றால் வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்படுவது நிச்சயம். இதற்கு முக்கிய காரணம், திருப்பதியில் சந்திரனின் தாக்கம் அதிகமாக இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு பிரச்னை ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை நீங்கள் சந்தித்தால், குடும்பத்துடன் திருப்பதி செல்வதை தவிர்ப்பது நல்லது. எனவே இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி செல்ல வேண்டாம். ஆனால் மற்ற ராசிக்காரர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தரிசிக்கலாம்.
வாஸ்துவின் படி, வடகிழக்குப் பகுதி பள்ளமாகவும் தெற்குப்பகுதி உயரமாகவும் இருந்தால் அப்பகுதி பிரபலம் அடைந்து இருக்கும். திருப்பதி அத்தகைய வாஸ்து அமைப்பில் அமைந்துள்ளதால் புகழ்பெற்றுள்ளது எனலாம். இதனால் திருப்பதியில் பிரபஞ்ச சக்தி அதிகம் ஈர்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேற்கூறிய ராசிக்காரர்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் போகலாம். அடிக்கடி போகக்கூடாது. ஆனால், மற்ற ராசிக்காரர்களுக்கு அவ்வாறு கிடையாது. வருடம் முழுக்க திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்யலாம்.
இன்னொரு விஷயம், திருப்பதிக்குப் பயணப்பட ஆசைப்படுபவர்கள் திருப்பதி ஏழுமலையானை வேண்டி, ஒரு காணிக்கை உண்டியலை சேர்த்து வைத்து அதில் கிடைக்கும் தொகையை வைத்துகூடப் பயணப்படலாம். மீதித்தொகையை கோயிலில் உள்ள உண்டியலில் போடலாம். மேலும் திருப்பதிக்குச் செல்லவேண்டும் என நினைப்பவர்களுக்குத் தடங்கல்கள் வரும். என்னதான் நாம் திட்டமிட்டாலும் அந்த ஏழுமலையான் நினைத்தால் மட்டுமே நாம் திருப்பதி சென்று வெங்கடேச பெருமாளைத் தரிசிக்க முடியும். அதனால் ஏழுமலையானை முழு மனதோடு சென்ரு பார்க்க வேண்டும் என்று நினைக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











