Latest Updates
-
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க..
இந்த 5 ராசிக்காரர்களுக்கு 30 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்ட காத்து வீசும்.. பண மழை பொழியும்...
Lucky Zodiac Signs: ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசியைச் சேர்ந்தவர்களின் குணாதியங்களும் வேறுபட்டிருக்கும். மேலும் ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கைக்கும் இடையே வித்தியாசம் இருக்கும். ஒவ்வொருவருமே தங்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தைக் காண வேண்டும் என்று விரும்புவோம்.
பலருக்கும் பணப் பிரச்சனை இல்லாத ஆடம்பரமான வாழ்க்கையை வாழ ஆசை இருக்கும். ஆனால் என்ன முயற்சித்தாலும், சிலருக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்காது. எவ்வளவு கஷ்டப்பட்டு வேலை செய்தாலும், அந்த கடின உழைப்புக்கான பலன் கிடைக்காமல் இருக்கும். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் அவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும், செல்வம் சேரும்.

ஜோதிடத்தின் படி, குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு 30 வயதிற்கு மேல் தான் அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். சொல்லப்போனால் 30 வயதிற்கு மேல் தான் முன்னேற்றத்தைக் காண்பார்கள் மற்றும் பணக்காரராகவும் செய்வார்கள். இப்போது எந்த ராசிக்காரர்களுக்கு 30 வயதிற்கு மேல் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
ஜோதிடத்தின் படி, மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த செவ்வாய் தைரியம், வீரத்தின் காரணி என்பதால், இந்த ராசிக்காரர்கள் நல்ல தைரியசாலிகளாக இருப்பர். மேலும் மேஷ ராசிக்காரர்களுக்கு பிறவியில் இருந்தே நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆயினும் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் 30 வயதிற்கு பின்னர் தான் பிரகாசிக்கும். அதுவும் 30 வயதுக்கு மேல் இவர்களுக்கு பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். நிறைய சொத்துக்களை சேர்க்கும் வாய்ப்புக்களும் உருவாகும்.
ரிஷபம்
சுக்கிரனை அதிபதியாக கொண்டவர்கள் ரிஷப ராசிக்காரர்கள். இந்த ராசிக்காரர்கள் பிறவியில் இருந்தே நல்ல பணத்தை சம்பாதிக்கும் திறனைக் கொண்டவர்கள். சுக்கிரனின் ஆசியை பிறவியிலேயே பெற்றவர்கள். ஆனால் இவர்களின் உண்மையான திறமை 30 வயதிற்கு மேல் தான் வெளிப்படும். அந்த திறமையால் இவர்கள் 30 வயதிற்கு மேல் பணக்காரராகும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த கடக ராசியைச் சேர்ந்தவர்கள் 30 வயதிற்கு பின் அதிர்ஷ்டத்தின் உதவியால் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். முக்கியமாக 30 வயதிற்கு பின்னர் இவர்கள் நிறைய பணத்தை சம்பாதிப்பார்கள். ஆனால் அந்த பணத்தையும் நிறைய போராட்டத்திற்கு பின்னரே பெற முடியும்.
சிம்மம்
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனின் ராசி தான் சிம்மம். இந்த சிம்ம ராசிக்காரர்கள் நல்ல தலைமைப் பண்புகளைக் கொண்டவர்கள். அடிப்படையாகவே இவர்கள் கடின உழைப்பாளிகள். இவர்களின் கடின உழைப்பால் நல்ல வெற்றியைக் காண்பார்கள். ஆனால் இவர்களின் கடின உழைப்பிற்கான பலன் 30 வயதிற்கு பின்னரே கிடைக்கும். இதனால் சமூகத்தில் உயர் நிலையை அடைவார்கள்.
விருச்சிகம்
ஜோதிடத்தின் படி, விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். விருச்சிக ராசியை சேர்ந்தவர்கள் தைரியமானவர்கள், வலுவான விருப்பத்தைக் கொண்டவர்கள். ஒரு விஷயத்தை செய்ய முடிவெடுத்தால், அதில் வெற்றி பெறாமல் ஓயமாட்டார்கள். மேலும் இவர்கள் மனதில் எப்போதும் ஒரு பெரிய சாதனை புரிய வேண்டுமென்ற எண்ணம் இருக்கும். ஆனால் இந்த ராசிக்காரர்கள் 30 வயதிற்கு பிறகு தான் தங்கள் வாழ்வில் நற்பலனை எளிதில் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications