Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
இன்று மயிலிறகை வாங்கி வீட்டின் இந்த திசையில் வைத்தால் பணப்பிரச்சனை தீருமாம்... உடனே வாங்குங்க..
Peacock Feather Remedies In Tamil: மயிலிறகு என்றதுமே நம் நினைவிற்கு வருபவர் கிருஷ்ண பகவான் தான். ஏனெனில் கிருஷ்ணர் தான் எப்போதும் தனது தலையில் மயிலிறகை வைத்திருப்பார். கிருஷ்ணருக்கு மயிலிறகு மிகவும் பிடிக்கும். இன்று கிருஷ்ணர் பிறந்தநாளான கிருஷ்ண ஜெயந்தி.
இந்நாளில் கிருஷ்ணரின் அருளைப் பெற பக்தர்கள் விரதமிருந்து, அவருக்கு பிடித்த பலகாரங்களை செய்து படைத்து, பூஜைகளை செய்து வழிபடுவர். மேலும் இந்த நன்னாளில் கிருஷ்ண பகவானுடன் தொடர்புடைய பொருட்களை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருவது மிகவும் நல்லது.

குறிப்பாக மயிலிறகை கிருஷ்ண ஜெயந்தி நாளில் வாங்கி வீட்டிற்கு கொண்டு வந்தால், வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காணலாம். ஜோதிடத்தின் படி, மயிலிறகு மிகவும் சக்தி வாய்ந்த பொருளாக கருதப்படுகிறது. இந்த மயிலிறகை ஒருவர் தங்கள் வீட்டில் வைத்திருந்தால், பலவிதமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
சொல்லப்போனால் ஒரு மயிலிறகு சனி பகவானின் கோபம், ராகு தோஷம், வாஸ்து தோஷம் போன்றவற்றை போக்கும் சக்தி கொண்டது. இப்படிப்பட்ட மயிலிறகை வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
செல்வம் அதிகரிக்க...
வீட்டில் செல்வம் அதிகரிக்க வேண்டுமானால், மயிலிறலை வீட்டின் தெற்கு சுவற்றில் தொங்கவிட வேண்டும். அதுவே ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், மயிலிறகை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். தாம்பதிய வாழ்க்கை சிறப்பாக இருக்க, மயில் இறகை படுக்கை அறையில் வைக்க வேண்டும்.
வாஸ்து தோஷம் நீங்க...
வீட்டில் வாஸ்து தோஷம் இருந்தால், அதுவே வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். அத்தகைய வாஸ்து தோஷம் நீங்க வேண்டுமானால், கிருஷ்ணரின் போட்டோ அல்லது சிலைக்கு கீழே மயிலிறகை வைக்க வேண்டும். அதுவும் வீட்டின் வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும்.
கிரக தோஷம் நீங்க...
ஜாதகத்தில் ஏதேனும் ஒரு கிரகம் மோசமான நிலையில் இருந்தாலும், அது பண பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இந்நிலையில் அந்த கிரகங்களை வலுப்படுத்த வேண்டும். அதற்கு ஒரு மயிலிறகு உதவி புரியும். அதற்கு மயிலிறகை வீட்டில் கண்ணில் எப்போதும் படும்படியான ஏதேனும் ஒரு இடத்தில் வைக்க வேண்டும்.
பணப் பிரச்சனை நீங்க..
வீட்டில் பண பிரச்சனை அதிகமாக இருக்கிறதா? அப்படியானால் கிருஷ்ண ஜெயந்தி நாளில் கிருஷ்ணர் கோவிலுக்கு சென்று மயிலிறகை காணிக்கை செலுத்த வேண்டும். அதன் பின் 40 நாட்களுக்கு பின், அந்த கோவிலுக்கு சென்று அந்த மயிலிறகை வாங்கி வைத்து, பணம் வைக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம், கிருஷ்ணரின் ஆசியால் பண பிரச்சனை தீரும்.
சனி பகவானின் கோபம் குறைய...
சனி பகவானின் கோபத்திற்கு ஆளானால், வாழ்க்கையே நரகமாக இருக்கும் வகையில் பல பிரச்சனைகளை தொடர்ந்து சந்திக்க நேரிடும். ஆனால் சனியின் கோபத்தின் தணிக்க 3 மயிலிறகுகளை எடுத்து, அதை கருப்பு நூலால் கட்டி வெற்றி பாக்கு வைத்து, கங்கை நீரைத் தெளித்து, 21 முறை சனி பகவானுக்குரிய மந்திரத்தை சொல்ல வேண்டும். இப்படி செய்வதன் முலம், சனி பகவானின் கோபம் குறையும்.
கெட்ட கனவுகள் நீங்க..
இரவு தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் கெட்ட கனவுகள் வருகிறதா? அப்படியானால் இரவு தூங்கும் முன் தலையணைக்கு அடியில் மயில் இறகை வையுங்கள். இப்படி வைப்பதன் மூலம், கெட்ட கனவுகள் வருவது தடுக்கப்படுவதோடு, நல்ல நிம்மதியான ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
