Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் ஒருடைம் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?
500 ஆண்டுகளுக்கு பின் உருவான பஞ்ச திவ்ய யோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டத்துடன் பண மழை கொட்டப்போகுது..
Panch Divya Yog Made After 500 Years: வேத ஜோதிடத்தின் படி, பஞ்ச திவ்ய ராஜயோகமானது பிப்ரவரி 09 ஆம் தேதி உருவாகியுள்ளது. இந்த ராஜயோகமானது சுமார் 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ளது. அதுவும் இந்த யோகத்தின் போது ஆதித்ய மங்கள யோகம், புதாதித்ய யாக, சதுர்கிரக யோகம், மகாலட்சுமி யோகம் மற்றும் சர்வார்த்த சித்த யோகம் ஆகிய 5 யோகங்களும் ஒரே வேளையில் சனி பகவானின் ராசியான மகர ராசியில் உருவாகியுள்ளது. இதனால் இது இன்னும் சிறப்பு வாய்ந்தது.
இந்த மங்களகரமான யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகத்தால் அதிர்ஷ்ட மழை கொட்டும் மற்றும் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது 500 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள பஞ்ச திவ்ய யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு பஞ்ச திவ்ய ராஜயோகமானது தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைத் தரும். இதைப் பயன்படுத்திக் கொண்டால், வாழ்வில் எதிர்பாராத முன்னேற்றத்தை காணலாம். அதுமட்டுமின்றி, குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் அவர்களின் வியாபாரமும் விரிவடையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பஞ்ச திவ்ய ராஜயோகமானது 9 ஆவது வீட்டில் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை தொடர்பாக வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். அதோடு பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். சமூகத்தில் நற்பெயர் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்கக்கூடும். மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 7 ஆவது வீட்டில் பஞ்ச திவ்ய ராஜயோகமானது உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசியைச் சேர்ந்த வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மேலும் வியாபாரத்தை விரிவாக்கும் பல நல்ல வாய்ப்புக்களும் தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலைகளைத் தொடங்கினால் நல்ல வெற்றியுடன், முன்னேற்றத்தையும் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications