Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
இந்த படத்துல உங்களுக்கு என்ன தெரியுது சொல்லுங்க.. உங்க வாழ்க்கையில் நீங்க எப்படி-ன்னு சொல்றோம்...
Optical Illusion: பொதுவாக நமது குணாதிசயங்களை மற்றவர்கள் கணித்து கூறுவதை தெரிந்து கொள்ள ஒருவித ஆவல் அனைவருக்கும் இருக்கும். உங்களுக்கும் அப்படியொரு ஆர்வம் இருந்தால், ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் உள்ள புதிர்களை கண்டுபிடியுங்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது கண்களுக்கும், மூளைக்கும் வேலையைக் கொடுக்கும் வகையில் இருக்கும் படங்களாகும்.
முக்கியமாக இந்த வகை படங்களானது ஒருவரது குணாதிசயங்களை பிரதிபலிக்கும். மேலும் இப்படங்கள் நமது கவனத்தை சிதறவிடாமல் சிந்திக்கும் திறனை மேம்படுத்தவும் உதவுகின்றன. அதுவும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட நபர் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் கீழே கொடுக்கப்பட்டுள்ள படம் அதை தெரிவிக்கும்.

அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன தெரிகிறது என்று கூறுங்கள். இந்த படத்தைக் கண்டதும், முதலில் உங்கள் கண்களுக்கு என்ன தெரிகிறது என்பதை மனதில் பதித்து வைத்துக் கொள்ளுங்கள். பின் உங்கள் கண்ணில் தென்பட்ட விஷயங்களுக்கான அர்த்தம் என்னவென்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த படத்தில் இரண்டு விதமான விஷயங்கள் உள்ளன. அவை பூனையின் முகம் மற்றும் அடர்ந்த காடு. இந்த இரண்டில் உங்கள் கண்களுக்கு எது முதலில் தெரிந்தது என்பதை மனதில் பதித்து, அந்த படம் என்ன சொல்ல வருகிறது என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
பூனையின் முகம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பூனையின் முகம் தெரிந்தால், நீங்கள் நம்பகமான நபர். உங்கள் இலக்குகளில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள். பெருந்தன்மை மற்றும் கருணை உள்ளம் கொண்டவர். அநீதியை சற்றும் பொறுத்துக் கொள்ளாமல் உடனே தட்டிக் கேட்பீர்கள். மிகவும் அமைதியானவர் மற்றும் நம்பிக்கையான நபர். இதனால் வாழ்க்கையில் சந்திக்கும் எப்பேற்பட்ட சவால்களையும் எளிதில் சமாளிக்கும் திறனைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் மற்றவர்கள் மீது அதிக அக்கறை கொள்வதால், உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை ஒரு முட்டாள்தனமான நபராக பார்க்கலாம்.
காடு தெரிந்தால்...
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் ஒரு காடு தெரிந்தால், நீங்கள் மென்மையான மற்றும் கனிவான உள்ளத்தைக் கொண்ட நபர் என்று அர்த்தம். மேலும் நீங்கள் மிகவும் அப்பாவியாக, ஒன்றும் தெரியாத நபராக இருப்பீர்கள். இதனால் ம்ற்றவர்கள் உங்களை சற்று ஏளனமாக பார்க்கலாம். முக்கியமாக நீங்கள் எதற்காகவும் அதிகம் கவலைப்படமாட்டீர்கள் மற்றும் நீங்கள் இயற்கை விரும்பிகள். இப்படி எதற்கும் கவலைப்படாமல் இருப்பதால், சில சமயங்களில் உங்கள் வாழ்க்கையில் எல்லைகளை அமைப்பதில் சற்று சிரமப்படுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications