Latest Updates
-
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்! -
Purattasi Matha Rasi Palan 2026: புரட்டாசி மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும்?- ஜோதிடர் கணிப்புகள் -
ஆந்திரா ஸ்டைல் முள்ளங்கி சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க... -
செப்டம்பர் 17, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிக்காரங்க பந்தயம் அடிக்கப்போறாங்களாம் -
சூரிய பெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரங்க பண விஷயத்துல ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் இரட்டை ராஜயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நாஞ்சில் புளிக்குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அட்டகாசமா இருக்கும் -
சப்பாத்திக்கு எப்பவும் ஒரே சைடு டிஷ் செய்யாம.. ஒருவாட்டி இந்த பரங்கிக்காய் கிரேவி செய்யுங்க.. அள்ளும்..
இந்த படத்தில் உங்க கண்ணுக்கு முதலில் என்ன மிருகம் தெரியுது-ன்னு சொல்லுங்க.. உங்க சுவாரஸ்யமான குணத்தை சொல்றோம்
Optical Illusion: நீங்கள் உங்களின் மறைமுகமான குணாதிசயங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? அப்படியானால் அதற்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவி புரியும். சமீப காலமாக இப்படியான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் உலா வருகின்றன.
இந்த படங்கள் ஒருவரைப் பற்றி புரிந்து கொள்ள உதவுகிறது. எப்படியெனில், இந்த படங்கள் அனைத்தும் உளவியல் அடிப்படையிலான அசாதாரண படங்களாகும். இப்படியான படங்களை பார்க்கும் போது, ஒருவரது கண்களில் முதலில் என்ன தெரிகிறதோ, அது அந்நபரைப் பற்றி நிறைய விஷயங்களை வெளிப்படுத்தும்.

இங்கு ஒரு சுவாரஸ்யமான ஆப்டிகல் இல்யூஷன் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் 4 விதமான விலங்குகள் உள்ளன. இப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் முதலில் ஒவ்வொரு விலங்கு தெரியலாம். இது அந்நபரின் மூளையின் செயல்பாட்டைப் பொறுத்தது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் என்ன மிருகம் தெரிந்தது என்று கூறுங்கள். உங்களைப் பற்றிய சுவாரஸ்யமான குணத்தை தெரிந்து கொள்ளுங்கள்.
சிங்கம்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் சிங்கம் தெரிந்தால், நீங்கள் வலுவான உள்ளுணர்வைக் கொண்டிருப்பீர்கள். சிக்கலான சூழ்நிலைகளில், உங்கள் உள்ளுணர்வு சொல்வதை கேட்டு நடக்க நினைப்பீர்கள். சிங்கத்தைப் போல வலிமையாகவும், துடிப்பாகவும் இருப்பீர்கள்.
நெருப்புக்கோழி
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் நெருப்புக்கோழி தெரிந்தால், நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடிய நபர். உங்கள் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மிகவும் கடினமான சூழ்நிலைகளில் நெருப்புக்கோழியைப் போலவே உணர்ச்சிகளையும், உள்ளுணர்வையும் கேட்டு நடப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகம் கொண்டிருப்பீர்கள். மேலும் புதிய விஷயங்களை கற்பதில் அதிக ஆர்வம் கொண்டிருப்பீர்கள்.
பறவை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் பறவைகள் தெரிந்தால், நீங்கள் யாரையும் சார்ந்திருக்காமல், சுதந்திரமாக இருக்க விரும்புவீரகள். மிகவும் சிந்தனையுடன் இருப்பீர்கள். எந்த ஒரு விஷயத்திற்கும் விரைவில் நன்கு சிந்தித்து முடிவெடுப்பதில் சிறந்தவர். நீங்கள் மற்றவர்களின் பார்வையில் கவலையற்ற நபராக தெரிவீர்கள். சவாலான காலத்தில் மனம் தளராமல் உயரத்தை அடைய முயற்சிகளை எடுப்பீர்கள்.
யானை
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உங்கள் கண்களுக்கு முதலில் யானை தெரிந்தால், நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு எந்த முடிவுகளையும் எடுக்காமல், ஒன்றிற்கு பலமுறை யோசித்து முடிவெடுப்பீர்கள். யானை தன்னம்பிக்கை, அமைதி, இணக்கம் போன்ற பண்புகளைக் குறிக்கிறது. எனவே யானை தெரிந்தால், இந்த குணங்கள் அனைத்தையும் கொண்டிருப்பீர்கள். மேலும் நீங்கள் மிகவும் நம்பிக்கையான நபர். மற்றவர்களுடன் தெளிவாக தொடர்பு கொள்வதில் வல்லவர்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
