Latest Updates
-
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
சனியின் தீய பார்வையால் இந்த 4 தேதிகளில் பிறந்தவங்க 2024-ல் கவனமாக இருக்கணும்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா?
Numerology: ஒவ்வொருவருமே தங்களின் எதிர்காலத்தைப் பற்றி தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்போம். முக்கியமாக தொழில், ஆரோக்கியம், வியாபாரம், கல்வி போன்றவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவோம். இப்படி ஒருவரது எதிர்காலத்தை அறிய ஜோதிடம் உதவி புரிகிறது.
வேத ஜோதிடத்தின் படி, ஒருவரது ராசிகளின் அடிப்படையில் அந்நபரின் எதிர்காலம் கணித்து கூறப்படுகிறது. அதே வேளையில், எண் கணிதத்தில் ஒருவரது பிறந்த தேதியைக் கொண்டு கணக்கிடப்படும் ஒற்றை இலக்க விதி எண் கொண்டு எதிர்காலம் கணித்து கூறப்படுகிறது. உதாரணமாக, 26 ஆம் தேதி ஒருவர் பிறந்தால், அந்நபரின் விதி எண் 2+6=8 ஆகும்.

எப்படி ராசிகளுக்கு அதிபதிகள் உள்ளதோ, அதேப் போல் 1-9 வரையிலான எண்களுக்கும் அதிபதிகள் உள்ளன. தற்போது 2024 ஆம் ஆண்டில் நுழைந்துள்ளோம். இந்த ஆண்டிற்கு உரிய எண் 8. இந்த எண்ணின் அதிபதி சனி பகவான். எனவே இந்த ஆண்டில் சனி பகவானின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். சனி பகவானின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், விதி எண் 1-க்கு உரியவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு சற்று சிரமமாக இருக்கும்.
விதி எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 2024 ஆம் ஆண்டில் கவனமாக இருக்க வேண்டும். இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கையில் பலவிதமான தடைகளை சந்திக்க நேரிடும். இதனால் மிகுந்த எரிச்சலடையக்கூடும்.
வீட்டில் பிரச்சனைகள் அதிகரிக்கும். வீட்டின் சூழல் அமைதியிழந்து இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே வாக்குவாதங்கள் அதிகரிக்கும். இந்த ஆண்டில் எந்த ஒரு முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் பழைய முதலீடுகளில் இருந்து சிறிது லாபத்தைக் காணலாம்.
இந்த ஆண்டில் பங்கு சந்தையில் பணத்தை முதலீடு செய்தால், அதிலிருந்து பணம் சம்பாதிப்பது கடினமாக இருக்கும். உங்களின் வேலைகளை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் போகும். அரசியலில் இருப்பவர்கள் சிக்கலில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.
செய்ய வேண்டிய பரிகாரங்கள்
2024 ஆம் ஆண்டில் விதி எண் 1-க்கு உரியவர்களுக்கு சனி பகவான் தொல்லையைத் தருவார் என்பதால், இந்த எண்ணிற்கு உரியவர்கள் ஒருசில பரிகாரங்களை செய்தால் அதைத் தவிர்க்கலாம். அந்த பரிகாரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளன.
* ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவான் கோவிலுக்கு செல்வதோடு, சனி பகவான், சிவபெருமான் மற்றும் அனுமனை வழிபட வேண்டும்.
* சனிக்கிழமைகளில் சனி சாலிசாவை பாராயணம் செய்ய வேண்டும். அதோடு 'ஓம் ஷன் ஷனைச்சராய நம' என்ற மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும்.
* சனிக்கிழமை அன்று சனி பகவான் கோவிலுக்கு சென்று, கடுகு எண்ணெயை சனி பகவானுக்கு படைக்க வேண்டும. அதோடு, கடுகு எண்ணெய் ஊற்றி எள்ளு தீபம் ஏற்ற வேண்டும்.
* சனி பகவான் மகிழ்ச்சி அடைய செய்ய, சுந்தரகாண்டத்தை பாராயணம் செய்ய வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications