Latest Updates
-
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க பண விஷயத்துல துரதிர்ஷ்டசாலிகளாம்.. இவங்ககிட்ட பணம் தங்கவே தங்காதாம்...
Numerology: இவ்வுலகில் மனிதன் நல்ல சந்தோஷமான மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ பணம் மிகவும் இன்றியமையாதது. பணம் இருந்தால் நமக்கு தேவையான அனைத்தையும் வாங்க முடியும். அந்த அளவில் பணம் ஒருவருக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
சொல்லப்போனால் பணம் இருந்தால் தான் இன்றைய காலத்தில் மற்றவர்கள் மதிக்கிறார்கள். அப்படிப்பட்ட பணத்தை சம்பாதிப்பதற்காக தான் தற்போது அனைவரும் அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறோம். மேலும் பணத்தை ஈர்ப்பதற்கான வழிகளையும் தேடிக் கொண்டிருக்கிறோம்.

இருப்பினும், ஜோதிடத்தின் ஒரு கிளையான எண் கணிதத்தின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் பண விஷயத்தில் துரதிர்ஷ்டசாலியாக இருப்பதோடு, எவ்வளவு சம்பாதித்தாலும் பணப் பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டே இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இப்போது எந்த தேதிகளில் பிறந்தவர்கள் நிதி ரீதியாக துரதிர்ஷ்டசாலிகள் என்பதைக் காண்போம்.
எண் 2
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணத்தை சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். ஏனெனில் இவர்கள் பணத்தை சம்பாதிக்க தேவையான முயற்சிகளை எடுக்கமாட்டார்கள். ஏனெனில் இவர்களின் மன உறுதி அவ்வளவு வலுவாக இருக்காது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பண விஷயத்தில் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் துரதிர்ஷ்டசாலிகள். பணம் வேண்டுமானால் கடினமாக உழைக்க வேண்டும். கடினமான உழைத்தால் மட்டும் பணத்தை சம்பாதிக்க முடியும். முக்கியமாக இவர்களுக்கு பரம்பரை சொத்துக்கள் எதுவும் இருக்காது.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கும் பணத்தை சம்பாதிப்பது என்பது மிகவும் கடினமாக இருக்கும். இருந்தாலும், இவர்கள் நிறைய முயற்சிகளை எடுப்பார்கள். விடாமுயற்சியுடன் தொடர்ந்து முயற்சிப்பார்கள். இவர்களுக்கான ஒரு அறிவுரையெனில், தோல்வியைக் கண்டு மனம் வருந்தாமல், கடினமாக உழைத்தால், நல்ல செல்வத்தைப் பெறலாம். எப்போதும் நேர்மறையாக சிந்தித்து எதிலும் முயற்சியை மேற்கொண்டால், நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
எண் 7
7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நிதி ரிதியாக இரண்டு வகையான சாத்தியங்கள் உள்ளன. ஒன்று இவர்கள் செல்வந்தர்களாக இருப்பார்கள் அல்லது பணத்தை இழந்தவர்களாக இருப்பார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இலக்கை அடைய நேர்மறையான வழியைப் பின்பற்றினால், நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். ஆனால் சூதாட்டம், சரியாக யோசிக்காமல் புதிய தொழிலை தொடங்குவது போன்ற நடத்தைகளில் ஈடுபட்டால், அது மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்திவிடும். எனவே இவர்கள் எப்போதும் பண விஷயத்தில் மற்றவர்களை விட கூடுதல் உஷாராக இருக்க வேண்டும்.
எண் 3
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நிதி ரீதியாக சிறப்பானவர்களாக இருப்பார்கள். ஆனால் அதே சமயம் சவால்களையும் அதிகமாக எதிர்கொள்வார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் புரிதல் மற்றும் அறிவைப் பயன்படுத்தி நல்ல பணத்தை சம்பாதிக்கலாம். இவர்களிடம் உள்ள ஒரு பலம், இவர்களின் தனிப்பட்ட திறன்கள் தான். இது தான் இவர்களை சமூகத்தில் முன்னேற உதவி புரியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications