Latest Updates
-
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது
இந்த தேதிகளில் பிறந்தவங்க எப்பவும் தொழிலில் கொடிகட்டி பறப்பாங்களாம்.. உங்க பிறந்த தேதி என்ன?
Numerology: எண்கள் நமது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இப்படிப்பட்ட எண்களைக் கொண்டு கணித்து கூறப்படும் ஒரு வகையான ஜோதிடம் தான் எண் கணிதம் அல்லது நியூமராலஜி. இந்த எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த எண்களானது ஒருவரது பிறந்த தேதியின் ஒற்றை இலக்க எண்களாகும். இதில் ஒவ்வொரு எண்களும் ஒரு அதிபதிகளைக் கொண்டுள்ளன.
எண்களானது ஒருவரது வாழ்வில் சந்திக்கும் நல்லது, கெட்டதுடன் தொடர்பு கொண்டுள்ளது. நியூமராலஜியின் படி, குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்க்கையில், குறிப்பாக தொழில் வாழ்க்கையில் மகத்தான வெற்றியைக் காண்பார்கள். மேலும் இவர்களை எவராலும் வீழ்த்த முடியாது. இப்போது எந்த தேதிகளில் பிறந்தவர்கள் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள் என்பதைக் காண்போம்.

எண் 1
1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் வாழ்வில் நிறைய நிதி நன்மைகளைப் பெறுவார்கள். தைரியமானவர்கள், துணிச்சலைக் கொண்டவர்கள், லட்சியத்தைக் கொண்டவர்கள், வெற்றி பெற கடினமாக உழைப்பார்கள். இப்படியான இவர்களின் குணங்கள் தான் எந்த துறையில் இருந்தாலும் இவர்களை எவராலும் வீழ்த்த முடியாதவராக்குகிறது.
எண் 3
3, 12, 21 மற்றும் 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நல்ல படைப்பாற்றலைக் கொண்டவர்கள். எப்பேற்படட சிக்கலையும் தீர்ப்பதில் வல்லவர்கள். திறமையானவர்கள். இவர்கள் எந்த துறையில் இருந்தாலும், அதில் செழித்து வளர்வார்கள். புதிய விஷயங்களை கற்று, அதன் மூலம் விரைவில் மகத்தான வெற்றியைக் காண்பார்கள்.
எண் 4
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வளமான வாழ்க்கையைத் தொடர தேவையான தகுதியையும், அறிவையும் கொண்டவர்கள். இதுவே இவர்களின் பலம். இது தான் தொழிலில் இவர்கள் நோக்கங்களை நிறைவேற்ற உதவுகிறது. எதிலும் உறுதியாக இருப்பது இவர்களின் இலக்குகளை அடைய உதவி புரிகிறது.
எண் 6
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பார்கள் மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் அதிர்ஷ்டசாலிகள். குறிப்பாக தொழில் வாழ்க்கையில் இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்காக தேவையான பணத்தை சம்பாதிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். இந்த முயற்சிகள் ஒவ்வொன்றும் நல்ல வெற்றியைத் தரும். வேலையில் இவர்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு, அனைவரையும் ஆச்சரியப்படுத்துவார்கள்.
எண் 9
9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பிறவியிலேயே வெற்றி பெற தேவையான அதிர்ஷ்டத்தைக் கொண்டவர்கள். ஒரு தொழிலைத் தொடங்க தேவையான அனைத்து திறனையும் கொண்டவர்கள். ஆனால் எந்த ஒரு தொழிலை தொடங்கும் முன்பும், சரியான திட்டமிடுதலும், விடாமுயற்சியும் தேவை என்பதை உணர வேண்டும். மற்றவர்களை வசீகரிப்பதில் வல்லவர்கள் மற்றும் தாராள மனப்பான்மை கொண்டவர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications