Latest Updates
-
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
Numerology: இந்த 5 தேதில பிறந்தவர்கள் தலைவராகவே பிறந்தவர்களாம்... எங்க போனாலும் இவங்களுக்கு மரியாதை தேடிவரும்!
Numerology: நியூமராலஜி என்பது ஒரு சுவாரஸ்யமான மற்றும் புதிரான பழைய அறிவியலாகும், இது ஒரு நபரின் பிறந்த தேதியைப் பயன்படுத்திஅவர்களின் குணாதிசயங்களையும், எதிர்காலத்தையும், அவர்களுக்கு அதிர்ஷ்டம் அளிக்கும் விஷயங்களையம் அடையாளம் காண உதவுகிறது.
நியூமராலஜி படி குறிப்பிட்ட பிறந்த தேதிகளைக் கொண்டவர்கள் அனைத்து விஷயங்களிலும் மற்றவர்களை விட எப்போதும் ஒரு படி மேலே இருப்பார்கள், அவர்கள் இயற்கையாகவே சிறந்தவர்கள் மற்றும் தலைவருக்குரிய தகுதி உடையவர்கள் என்று நியூமராலஜி கூறுகிறது.

இவர்கள் தலைவராக பிறந்தவர்கள், படைப்பாற்றல் மற்றும் கற்பனைத்திறன் கொண்டவர்களாக இருப்பார்களால். இந்த பதிவில் எந்தெந்த தேதிகளில் பிறந்தவர்கள் தலைவருக்குரிய குணங்களுடனும் மற்றும் துடிப்பான ஆளுமைகளுடன் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
எண் 5 (5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த எண்ணில் பிறந்தவர்கள் தைரியமான மற்றும் கிடைக்கும் வாய்ப்புகளை எடுக்க தயாராக இருக்கும் புத்திசாலிகள். அவர்கள் மாற்றத்திற்கு ஏற்றவாறு, வேகமான அமைப்புகளில் சிறப்பாக செயல்படுகிறார்கள்.
அவர்களின் துணிச்சல் மற்றும் நெகிழ்வுத்தன்மையின் காரணமாக அவர்கள் எப்போதும் முன்னணியில் இருப்பார்கள், அவர்கள் தங்களை முன்வைக்கப்படும் வாய்ப்புகளை சரியாக புரிந்துகொள்கிறார்கள். 5 ஆம் எண்ணில் பிறந்தவர்கள் புதிய ட்ரெண்டுகள் மற்றும் தொழில்நுட்பத்தை முதலில் ஏற்றுக்கொள்கிறார்கள் மற்றும் உடனடியாக கற்றுக்கொண்டு அதில் நிபுணராவார்கள்.
எண் 1 (1, 10, 19 அல்லது 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த நபர்கள் இயல்பிலேயே தொலைநோக்கு பார்வையுடையவர்கள் மற்றும் தலைவர்கராக பிறந்தவர்கள். அவர்கள் எப்போதும் உயர்ந்த இலட்சியங்களை அமைத்து, தங்களுக்கும் மற்றவர்களுக்கும் உயர் தரத்தை நிலைநாட்டுவதற்கான இயல்பான திறனைக் கொண்டுள்ளனர்.
அவர்களின் முன்னோடி மனநிலையின் காரணமாக அவர்கள் தொடர்ந்து புதிய வாய்ப்புகளைத் தேடுகிறார்கள் மற்றும் புதிய தடங்களைத் தூண்டுகிறார்கள், இது வாழ்க்கையில் முன்னேற அவர்களுக்கு உதவுகிறது. இந்த பூர்வீகவாசிகள் பிறப்பாலேயே டிரெண்ட்செட்டர்கள், அவர்கள் எப்போதும் தற்போதைய விதிமுறைகளை உடைத்து புதிய கதவுகளை திறப்பவர்களாக இருப்பார்கள்.
எண் 8 (8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த எண்ணில் பிறந்தவர்கள் சாகச மற்றும் லட்சியம் கொண்ட தொலைநோக்கு பார்வையாளர்கள். அவர்கள் வலுவான தலைமைத்துவ உணர்வு மற்றும் வெற்றிபெற ஒரு அசைக்க முடியாத விருப்பம் கொண்டவர்கள்.
அவர்களின் அதீத ஆர்வத்தின் உந்துதல் காரணமாக அவர்கள் லாபகரமான சாத்தியக்கூறுகளைப் பார்ப்பதன் மூலமும், கணக்கிடப்பட்ட ரிஸ்க்கை எடுத்துக்கொள்வதன் மூலமும் எப்போதும் முன்னணியில் இறக்கிறார்கள். வாழ்க்கைப் பாதை எண் 8 உள்ளவர்கள் கடினமான சூழ்நிலைகளை வெற்றிகரமாக வழிநடத்தி அவற்றை லாபகரமான முயற்சிகளாக மாற்றும் சிறந்த தந்திரக்காரர்களாக இருப்பார்கள்.
எண் 3 (3, 12, 21 அல்லது 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த எண்ணில் பிறந்தவர்கள் கற்பனை மற்றும் படைப்பாற்றலைக் கொண்டுள்ளனர். அவர்களுக்குள் இருக்கும் சிறப்பு திறன்கள் காரணமாக மற்றவர்கள் தடைகளாக நினைக்கும் விஷயங்களை அவர்கள் வாய்ப்புகளாக நினைக்கிறார்கள். அவர்களின் அசாத்திய சிந்திக்கும் திறன் வரவிருக்கும் வாய்ப்புகளை முன்கூட்டியே கணிக்கவும், புதிய உத்திகள் மூலம் சிக்கல்களை தீர்க்கவும் உதவுகிறது.
வாழ்க்கைப் பாதை எண் 3 உள்ளவர்கள், அவர்களின் ஆக்கப்பூர்வமான சிந்தனையை ஆதரிக்கும் அமைப்புகளில் சிறப்பாக செயல்படுகிறார்கள் மற்றும் தகவல் தொடர்பு, வடிவமைப்பு மற்றும் கலை போன்ற தொழில்களில் உச்சத்தை அடைகிறார்கள்.
எண் 7 (7, 16 அல்லது 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த எண்ணில் பிறந்தவர்கள் சிறந்த தந்திரக்காரர்களாகவும்,வலுவான உள்ளுணர்வு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களின் ஆழ்ந்த நுண்ணறிவு மற்றும் புரிதலின் காரணமாக எதிர்கால போக்குகள் மற்றும் மாற்றங்களை அவர்களால் கணிக்க முடிகிறது. அவர்கள் தங்கள் வலிமையான உள்ளுணர்வு காரணமாக எப்போதும் முன்னணியில் இருப்பார்கள். வாழ்க்கைப் பாதை எண் 7 உடையவர்கள், திட்டமிடல் மற்றும் முன்யோசனை மூலம் எப்போதும் தலைமையிடத்தில் இருப்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












