Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
நியூமராலஜி படி, 2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
Numerology 2024 Prediction: எண்கள் நமது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த எண்களைக் கொண்டு ஒருவரது வாழ்க்கையைக் கணித்து கூறும் ஜோதிடம் தான் எண் கணிதம். இந்த எண் கணித்தில் ஒருவரது விதி எண்ணானது அவரது பிறந்த தேதியைக் கொண்டு பெறப்படுகிறது.
எப்படி ஜோதிடத்தில் 9 கிரகங்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறதோ, அதேப் போல் எண் கணிதத்தில் 1 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலம் கணித்து கூறப்படுகிறது.

ஜோதிடத்தைப் போன்றே, எண் கணிதத்திலும் ஒருவரது பிறந்த தேதியின் படி 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்று கணித்து கூறப்பட்டுள்ளது. உங்களின் விதி எண் 2 என்றால், அந்த விதி எண்ணிற்கு உரியவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை இப்போது காண்போம்.
விதி எண் 2-க்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கும்?
2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த எண்ணிற்கு உரியவர்களுக்கு 2024 ஆம் ஆண்டானது சாதகமாக இருக்கும். கடன் தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், இந்த ஆண்டில் அந்த கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.
தொழில் ரீதியாக, இந்த புதிய ஆண்டில் பல வெற்றிகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த ஆண்டு சிறப்பாக இருக்கும். இருப்பினும் ஆரோக்கிய விஷயத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
வணிகர்கள் சில பெரிய ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புள்ளது. நீங்கள் அதிகம் கோப்படுபவராக இருந்தால், அந்த கோபமே உங்களுக்கு பல பிரச்சனைகளைக் கொண்டு வரும். எனவே இந்த ஆண்டில் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
2024-ல் திருமணம் மற்றும் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்?
விதி எண் 2-க்கு உரியவர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் காதல் வாழ்க்கையானது சற்று பதற்றம் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் எதிர்பார்ப்புகளால் மிகவும் சிரமப்படுவீர்கள். உங்கள் பிரச்சனைகள் மற்றும் உங்கள் மனதில் இருப்பதை உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளிப்படையாக பேசி பகிர்ந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இப்படி செய்யும் போது வாழ்க்கைத் துணையுடன் சந்திக்கும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.
2024-ல் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும்?
நியூமராலஜியின் படி, 2024 ஆம் ஆண்டில் விதி எண் 2-ஐ கொண்டவர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் இந்த எண்ணைக் கொண்டவர்கள் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் அல்லது உணவு தொடர்பான தொழிலை செய்து கொண்டிருந்தால், இந்த ஆண்டில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். இருப்பினும் இந்த ஆண்டில் வெற்றியைக் காண சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications