Latest Updates
-
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்.. -
4 வெங்காயம் இருந்தா போதும்.. சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் செய்யலாம்! எப்படின்னு பாருங்க.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப அரிசி மாவை வெச்சு அடிக்கடி இப்படி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
தக்காளியோட இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமான சைடிஷா இருக்கும் -
ஃபோலிக் அமிலம் ஏன் மிகவும் முக்கியம்? அதன் குறைபாட்டின் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன? - விளக்கும் டாக்டர்!
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது.. உங்க பிறந்த தேதி என்ன?
New Year 2024: இன்னும் சில வாரங்களில் 2024 ஆம் ஆண்டிற்குள் நுழையவுள்ளோம். புதிய ஆண்டில் நுழையப் போவதால், பலருக்கும் வருகிற புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆசை இருக்கும்.
ஒருவரது எதிர்காலத்தைக் கணித்து கூற ஜோதிடத்தில் உள்ள கிரக நிலைகள் உதவி புரிகின்றன. இது தவிர எண்களை அடிப்படையாக கொண்டு கணித்து கூறப்படும் எண் கணிதத்தைக் கொண்டும் எதிர்காலத்தை அறியலாம். இந்த எண்களானது ஒருவரது பிறந்த தேதி, பிறந்த வருடம் ஆகியவற்றின் கூட்டுத் தொகையின் ஒற்றை இலக்க எண் ஆகும்.

இதுவரை எந்த ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு அதிர்ஷ்டமானதாக இருக்கும் என்பதை பார்த்தோம். இன்று நாம் பார்க்கவிருப்பது வருகிற 2024 ஆம் ஆண்டு எந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமானதாக, சிறப்பானதாக இருக்கப் போகிறது என்பதைப் பற்றி தான்.
2024 ஆம் ஆண்டு
எண் கணிதத்தின் படி, 2024 ஆம் ஆண்டிற்கு உரிய எண் 8 ஆகும். இந்த 8 சனி பகவானுக்குரிய எண். எனவே இந்த ஆண்டு முழுவதும் சனி பகவானின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். அதோடு ஆண்டின் தொடக்கத்தில் சந்திரன் சிம்ம ராசியில் இருப்பதால், சூரியனின் செல்வாக்கும் அதிகமாக இருக்கும் மற்றும் சூரியனின் ஆதிக்கம் கொண்டவர்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். இப்போது எண் கணிதத்தின் படி, வரவுள்ள 2024 ஆம் ஆண்டு எந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமானதாகவும், அற்புதமாகவும் இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
2024-ல் அதிர்ஷ்டம் பெறுபவர்கள்
எண் கணிதத்தின் படி, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் அல்லது 17, 26, 35, 44 ஆகிய ஆண்டுகளில் பிறந்தவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு அற்புதமாக, பல நன்மைகளை வாரி வழங்குவதாக இருக்கும். மேலும் பிப்ரவர், மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் பிறந்தவர்களுக்கும் இம்மாதம் நன்றாக இருக்கும். இது தவிர மகரம், சிம்மம், கும்பம், மேஷம் ஆகிய ராசிக்காரர்கள் இந்த 2024 ஆம் ஆண்டில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
வியாபார்ம் செய்பவர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். புதிய முதலீடுகளை செய்யும் எண்ணம் இருந்தால், இந்த ஆண்டில் அதை செய்வதன் மூலம் நிறைய லாபத்தைப் பெற முடியும். முக்கியமாக சனியின் தாக்கம் இருப்பதால், கூட்டு வணிகம் செய்பவர்களுக்கும் நன்றாக இருக்கும். அதோடு ஜாதகத்தில் சனி வலுவான நிலையில் இருப்பவர்களுக்கு இந்த புத்தாண்டு மங்களகரமானதாக இருக்கும்.
நீண்ட நாள் ஆசை நிறைவேறும்
நியூமராலஜியின் படி, 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள், 2024 ஆம் ஆண்டில் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவார்கள். திட்டமிட்ட செயல்கள் வெற்றிகரமாக முடிவடையும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறலாம்.
அனுபவசாலிகளின் உதவியால், எதிர்பார்க்காத பல நல்ல வாய்ப்புக்களை இந்த ஆண்டில் பெறலாம். குடும்ப வாழ்க்கை ஒற்றுமையாகவும், மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல வரன் கிடைக்கும். காதலித்து வந்தால், அந்த காதல் திருமணத்தில் முடியும் வாய்ப்புள்ளது.
புதிய வேலை கிடைக்கும்
முக்கியமாக வருகிற 2024 ஆம் ஆண்டில் நிறைய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கலாம். சிலர் குழந்தைகளால் எதிர்பாராத நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. நீண்ட ஆண்டுகளாக சிக்கியிருந்த பணம் இந்த ஆண்டில் வெள்ளிகரமாக கைக்கு வந்து சேரும்.
நிறைய பணத்தை சேமிக்க முடியும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இந்த ஆண்டில் நல்ல வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். மொத்தத்தில் இந்த ஆண்டு இந்த 3 தேதிகளில் பிறந்தவர்களுக்கு அட்டகாசமாக மற்றும் வாழ்க்கையை பிரகாசமாக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
