Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
சூரிய அஸ்தமனத்திற்கு பின் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க.. இல்லன்னா வறுமை வாட்டி எடுத்துடும்...
இந்து மதத்தில் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் முக்கியமானதாக கருதப்படுகிறது. அதுவும் இந்த நேரங்களில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து ஜோதிடத்தில் விரிவாக கூறப்பட்டுள்ளது.
முக்கியமாக சூரிய அஸ்தமனத்திற்கு பின் ஒருசில விஷயங்களை செய்யக்கூடாது. இல்லாவிட்டால், அது அந்த வீட்டில் வறுமையையும், பிரச்சனைகளையும் வரவழைக்கும். அதனால் தான் வீட்டில் உள்ள பெரியவர்கள் மாலை வேளைக்கு பின் ஒருசில விஷயங்களை செய்யக்கூடாது என்று கூறுகிறார்கள்.

பொதுவாக மாலை வேளையில், அதுவும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் எதிர்மறை ஆற்றல்கள்/கெட்ட சக்திகள் அதிகம் சுற்றிக் கொண்டிருக்கும். மேலும் மாலை வேளையில் தான் லட்சுமி தேவி வீட்டிற்கு வருகை தருவார். இந்த நேரத்தில் ஒருசில விஷயங்களை செய்வது, லட்சுமி தேவியை அவமானப்படுத்துவதற்கு சமம். இப்போது சூரிய அஸ்தமனத்திற்கு பின் எந்த மாதிரியான விஷயங்களை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
மஞ்சள்
சாஸ்திரத்தின் படி, சூரிய அஸ்தமனத்திற்கு பின் யாருக்கும் மஞ்சளை கொடுக்கக்கூடாது. ஏனெனில் மஞ்சள் குருவுடன் தொடர்புடையது. குரு அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தின் காரணியாக கருதப்படுகிறார். ஆகவே சூரிய அஸ்தமனத்திற்கு பின் மஞ்சளை மற்றவருக்கு கொடுத்தால், அது வீட்டில் உள்ள அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை மற்றவருக்கு கொடுப்பதற்கு சமம். இதன் விளைவாக வீட்டில் பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
வீட்டை பெருக்கக்கூடாது
துடைப்பத்தில் லட்சுமி தேவி வசிக்கிறார். அதே சமயம் மாலை சூரிய அஸ்தமனத்தின் போது வீட்டிற்கு லட்சுமி தேவி வருகை தருவார். இந்த நேரத்தில் வீட்டில் உள்ள அழுக்கை சுத்தம் செய்தால், அது லட்சுமி தேவியை அவமானப்படுத்துவதற்கு சமம். லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளானால், அந்த வீட்டில் செல்வம் நிலைக்காது, வறுமையைக் கொண்டு வரும். எனவே மாலை வேளையில் வீட்டை பெருக்காதீர்கள்.
துணிகளை துவைப்பது
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு, எதிர்மறை ஆற்றல் அதிகம் உலவும். எனவே இந்த நேரத்தில் துணிகளை துவைக்கவோ அல்லது துணிகளை காய வைக்கவோ கூடாது. அப்படி செய்தால், வெளியே உலவிக் கொண்டிருக்கும் எதிர்மறை ஆற்றல் துவைத்த துணியில் நுழைந்து தங்கிவிடும். பின் அந்த துணிகளை அணிபவர் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். எனவே துணிகளை துவைக்கக்கூடாது.
இந்த பொருட்களை தானம் செய்யாதீர்
சாஸ்திரத்தின் படி, பால், சர்க்கரை, உப்பு போன்ற பொருட்களை சூரிய அஸ்தமனத்திற்கு பின் யாருக்கும் தானம் செய்யவோ அல்லது கடனாக கொடுக்கவோ கூடாது. அப்படி செய்தால், அந்த வீட்டில் உள்ள மகிழ்ச்சியும், செழிப்பும் பாதிக்கப்படும் மற்றும் வீட்டில் எப்போதும் பிரச்சனைகளை நிறைந்தவாறு இருக்கும்.
தூங்ககூடாது
மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்தின் போது வீட்டிற்கு லட்சும தேவி வருகை தருவார். அப்படி வரும் போது வீட்டில் விளக்குகளை ஏற்றி, வீட்டை பிரகாசமாக வைத்திருக்காமல், படுத்துக் கொண்டிருந்தால், அது வீட்டிற்கு வரும் லட்சுமி தேவியை அவமானப்படுத்துவதோடு, அவரது கோபத்திற்கு ஆளாக்கிவிடும். லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளானால், பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிட்டு, வீட்டில் வறுமை அதிகரிக்கும்.



Click it and Unblock the Notifications