Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
இந்த பொருட்களை எப்பவும் மற்றவர்களிடம் கடனா வாங்கி பயன்படுத்தாதீங்க.. இல்ல அது இழப்பை ஏற்படுத்தும்...
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு எதையும் மற்றவர்களுடன் பகிர்ந்து வாழ வேண்டும் என்று கூறி வளர்த்திருப்பார்கள். இதனால் நாமும் நமது இன்ப துன்பங்களை மட்டுமின்றி, தங்களின் ஒருசில பொருட்களையும் தங்களுக்கு பிடித்தவர்களுடன் பகிர்ந்து கொள்வோம்.
ஆனால் சாஸ்திரத்தின் படி, ஒருவர் மற்றவர்களிடம் கடனாக ஒருசில பொருட்களை வாங்கி பயன்படுத்துவது, தீங்கை விளைவிக்கும். அதுவும் நாம் தினமும் பயன்படுத்தும் சில சிம்பிளான பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது, அதன் விளைவாக ஒருவரது முன்னேற்றத்தில் தடை, நிதி நிலை பலவீனம், ஆரோக்கிய பிரச்சனைகள் போன்றவற்றை சந்திக்க நேரிடும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

இப்போது ஒருவர் மற்றவர்களிடம் எந்த மாதிரியான பொருட்களை கடனாக வாங்கி பயன்படுத்தக்கூடாது என்பது குறித்து காண்போம். அப்படி வாங்கி பயன்படுத்தினால், எம்மாதிரியான விளைவை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.
ஆடைகளை பகிரக்கூடாது
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவர் தாங்கள் பயன்படுத்தும் ஆடைகளை மற்றவருக்கு கடனாகவோ அல்லது பயன்படுத்தவோ கொடுக்கக்கூடாது. ஏனெனில் ஒவ்வொருவருரின் விதியும், ஆற்றலும் வேறுபட்டவை. இந்நிலையில் ஒருவர் மற்றவரின் ஆடைகளைப் பயன்படுத்தும் போது, அந்நபரின் விதி பாதிக்கப்படுவதோடு, பண பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
கைக்கடிகாரம் கொடுக்கக்கூடாது
அனைவருக்குமே கைக்கடிகாரத்தின் மீது ஆசை இருக்கும். சிலர் தங்களின் கைக்கடிகாரத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். ஆனால் கைக்கடிகாரத்தை எப்போதும் மற்றவர்களுடன் பகிரக்கூடாது. ஒருவரது கடிகாரத்தை மற்றவர்கள் அணியும் போது, அவரது மோசமான நேரம் அணிபவரின் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. எனவே இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் துரதிரஷ்டம் துரத்தக்கூடும்.
கைக்குட்டையை பகிரக்கூடாது
வாஸ்துப்படி ஒருவர் தங்களின் கைக்குட்டையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது. அப்படி பகிர்ந்து கொண்டால், அது அந்த இருவருக்கும் இடையே விவாதத்தை அதிகரித்துவிடும் மற்றும் இருவருக்கும் இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தி பிரிவை உண்டாக்கிவிடும்.
பேனாவை பகிராதீர்
எப்போதும் ஒருவர் தங்களின் பேனாவை கடனாக கொடுக்கவோ அல்லது வழங்கவோ கூடாது. ஒருவேளை அவ்வாறு செய்தால், அதுவும் அந்த இருவருக்கும் இடையே பிரச்சனைகளை வரவழைத்துவிடும். மேலும் நிதி நிலையில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி, நிதி பிரச்சனைகளைகளை சந்திக்க வைத்துவிடும்.
துடைப்பத்தை பகிரக்கூடாது
வாஸ்துப்படி லட்சுமி தேவி துடைப்பத்தில் வாசம் செய்கிறாள். அப்படிப்பட்ட துடைப்பத்தை வீட்டில் இருந்து மற்றவருக்கு கொடுக்கும் போது, அது வீட்டில் உள்ள லட்சுமி தேவியை மற்றவருக்கு கொடுப்பதற்கு சமம். அது தவிர, மற்றவர்களின் துடைப்பத்தை வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்துவதோடு, நிதி நிலையில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications