Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
முகலாயர்களை நுழையவே அனுமதிக்காத 6 சக்திவாய்ந்த இந்திய மாநிலங்கள் என்னென்ன தெரியுமா?
இந்தியாவின் வரலாறு என்பது மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது மிகவும் தனித்துவமானது மற்றும் வித்தியாசமானது. இந்தியாவை நூற்றுக்கணக்கான வம்சத்தை சேர்ந்த அரசர்கள் ஆண்டுள்ளார்கள். அணல் அதில் வெகுசிலர் மட்டுமே இந்திய வரலாற்றில் நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளனர். அப்படி இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு அரச வம்சம்தான் முகலாய வம்சம்.
இந்தியாவின் பெரும் பகுதியை ஆங்கிலேயர்களுக்கு முன் நீண்ட காலம் ஆண்டது முகலாயர்கள்தான். முகலாய வம்சத்தினர் இந்தியாவின் பெரும்பகுதியை கிட்டதட்ட 300 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். இந்தியாவின் உணவுமுறை, கலாச்சாரம் முதல் கல்வி மற்றும் கட்டமைப்புகள் வரை அனைத்திலும் இன்றுவரை முகலாயர்களின் தாக்கம் உள்ளது. இந்தியாவின் பெரும்பகுதியை முகலாயர்கள் ஆண்டிருந்தாலும் சில மாநிலங்களில் கடைசிவரை அவர்களால் நுழைய முடியவில்லை. அவை எந்தெந்த மாநிலங்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முகலாயர்கள் எங்கிருந்து வந்தனர்?
முகலாயர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் அல்ல. முகலாயர்கள் இந்தியாவிற்குள் படையெடுப்புகள் மூலம் நுழைந்தனர். . அவர்கள் மத்திய ஆசியாவிலிருந்து, தற்போதைய உஸ்பெகிஸ்தானிலிருந்து வந்தவர்கள். இந்தியாவில் முகலாயப் பேரரசை நிறுவியவர் பேரரசர் பாபர், அவர் மத்திய ஆசியாவில் போட்டியாளர்களின் தாக்குதல்களாலும், அதிகார மாற்றங்களாலும் தனது ராஜ்ஜியத்தை இழந்திருந்தார்.
ஆட்சி செய்ய ஒரு புதிய நிலத்தைத் தேடி அலைந்த அவர், அரசியல்ரீதியாக பலவீனமாகவும், குழப்பங்கள் நிறைந்ததாகவும் இருந்த இந்தியாவின் மீது தனது கவனத்தைத் திருப்பினார். 1526 ஆம் ஆண்டு, முதல் பானிபட் போரில் இப்ராஹிம் லோடியை தோற்கடித்து, வட இந்தியாவில் முதன் முதலாக முகலாயப் பேரரசை நிறுவினார். முகலாயர்களால் ஆள முடியாத இந்திய மாநிலங்கள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.
சிக்கிம்
17 ஆம் நூற்றாண்டில் நம்கியால் வம்சத்தால் நிறுவப்பட்ட சிக்கிம், முகலாய ஆட்சியாளர்களால் ஆட்சி செய்ய முடியாத இடமாக இருந்தது. அதன் தொலைதூர இமயமலைக்கு அருகிலிருந்த இருப்பிடமும் சக்திவாய்ந்த உள்ளூர் முடியாட்சியும் அதன் சுதந்திரத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவியது, மேலும் இப்பகுதியின் மீது எந்தவொரு முகலாய செல்வாக்கையும் அல்லது நிர்வாகக் கட்டுப்பாட்டையும் தடுத்தது.
மிசோரம்
மிசோராமை அதன் நிலப்பரப்பே காப்பாற்றியது. கரடுமுரடான நிலப்பரப்பு மற்றும் கடுமையான பழங்குடி சமூகங்கள் காரணமாக மிசோரம் முகலாய கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது. போர்வீரர் கலாச்சாரம் மற்றும் வலுவான உள்ளூர் நிர்வாகத்திற்கு பெயர் பெற்ற மிசோ பழங்குடியினர், எந்தவொரு வெளிப்புற தலையீட்டையும் வெற்றிகரமாக எதிர்த்தனர், இதனால் இப்பகுதியை முகலாயர்கள் ஆட்சி செய்யவே முடியவில்லை.
மணிப்பூர்
மணிப்பூரை ஆண்ட மெய்தெய் மன்னர்கள் வெளிப்புற அரசுகளின் ஆதிக்கத்தை உறுதியாக எதிர்த்ததால் மணிப்பூர் முகலாய ஆட்சியிலிருந்து சுதந்திரமாக இருந்தது. இப்பகுதியின் புவியியல் தனிமை, வலுவான இராணுவ அமைப்பு மற்றும் இராஜதந்திர கூட்டணிகள் ஆகியவை முகலாயர்களால் மணிப்பூர் இராஜ்ஜியத்தின் மீது ஒருபோதும் கட்டுப்பாட்டை நிலைநாட்ட முடியாத நிலையை ஏற்படுத்தியது.
மேகாலயா
காசி, காரோ மற்றும் ஜெயின்டியா போன்ற இராஜ்ஜியங்கள் ஒன்றாக இணைந்து தங்கள் சுதந்திரத்தை கடுமையாக பாதுகாத்ததால் மேகாலயா முகலாய ஆட்சியிலிருந்து விடுபட்டது. அவர்களின் கரடுமுரடான நிலப்பரப்பு, வலிமையான பழங்குடியினர் மற்றும் திட்டமிட்ட எதிர்ப்பு ஆகியவை முகலாயர்கள் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்தன.
நாகலாந்து
இன்றைய அசாமின் அஹோம்கள் முகலாய இராஜ்ஜியத்தை கடுமையாக எதிர்த்ததால், நாகாலாந்து முகலாய கட்டுப்பாட்டிற்கு வெளியே இருந்தது. அவர்களின் இராணுவ வலிமை மற்றும் தந்திரமான போர்முறை முகலாயர்கள் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்தது, மேலும் நாகாலாந்து மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை முகலாய ஆட்சியிலிருந்து விடுவித்தது.
அருணாச்சலப்பிரதேசம்
சவாலான நிலப்பரப்பு மற்றும் வலிமையான உள்ளூர் பழங்குடியினர் காரணமாக இந்த வடகிழக்கு பிராந்தியத்தைக் கட்டுப்படுத்த முகலாயர்கள் போராடினர், அவர்கள் முகலாயர்களின் விரிவாக்கத்தை கடுமையாக எதிர்த்தனர், இதனால் அந்தப் பகுதி பெரும்பாலும் முகலாய ஆட்சிக்கு அப்பாற்பட்டதாகவே இருந்தது.



Click it and Unblock the Notifications
