Latest Updates
-
மாங்காய் Vs. மாம்பழம்: இந்த இரண்டில் எது உண்மையில் ஆரோக்கியமானது தெரியுமா? உங்களுக்கு பிடிச்சது எது? -
சுக்கிரன் சொந்த ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சிக்கன் வாங்குனா இந்த தேங்காய் கொத்தமல்லி சிக்கன் வறுவலை செய்யுங்க - சூப்பரா இருக்கும் -
2050-ல் உலகை ஆளப்போகும் டாப் 10 நாடுகள்: இந்தியா 2050-ல் எந்த நிலையில் இருக்கும் இருக்கப்போகுது தெரியுமா? -
சிக்கன் எடுத்தா இப்படி குக்கர்-ல ஒருடைம் குழம்பு வையுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவருமாம் -
வார ராசிபலன் (19 April 2026 - 25 April 2026) - இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
மட்டன் வாங்குனா.. ஒருடைம் இந்த செட்டிநாடு ஸ்டைல் மட்டன் சுக்கா செய்யுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
அடுத்தடுத்து நட்சத்திரத்தை மாற்றும் 3 கிரகங்கள்: இந்த 4 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது! -
வெயிலால் முகம் டல்லாகிடுச்சா? அப்ப 1 ஸ்பூன் அரிசி மாவு வெச்சு தினமும் நைட் இப்படி ஃபேஸ் பேக் போடுங்க..
முகாலய சாம்ராஜ்ஜியம் அழிவதற்கு காரணமாக இருந்தது இந்த முகலாயர் அரசர்தானாம்... அவர் என்ன செய்தார் தெரியுமா?
ஆங்கிலேயர்களுக்கு முன் இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்த வலிமையை வம்சம் என்றால் அது முகலாய வம்சம்தான். முகலாயர்கள் இந்தியாவின் பெரும் நிலப்பரப்பை கிட்டதட்ட 300 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். அவர்களின் ஆட்சிக்காலம் இந்திய வரலாற்றின் மிகவும் முக்கியமான காலகட்டமாக கருதப்பட்டது. அவர்களின் ஆட்சியின் கீழ் இந்தியா பல்வேறு மாற்றங்களைக் கண்டது.
அவர்களின் ஆட்சிக்காலத்தில், இந்தியா பல வளர்ச்சியையும், அதேசமயம் கொடுமைகளையும் கண்டது. முகலாய பேரரசர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதமாக இருந்தனர். முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும், பிற மத தலங்களை இடித்ததற்கும் பெயர் பெற்ற கொடூரமான பேரரசரான ஒளரங்கசீப் முதல், அனைத்து மதத்தினரையும் ஆதரித்த நடுநிலைமை வாய்ந்த பேரரசரான அக்பர் வரை, இந்தியா அனைத்து வகையான முகலாயப் பேரரசர்களையும் கண்டது.

முகலாயர்கள் எங்கிருந்து வந்தனர்?
மத்திய ஆசிய இஸ்லாமிய வம்சாவளியைச் சேர்ந்த முகலாயர்கள், பாரசீக மொழியைத் தங்கள் ஆட்சி மொழியாகப் பயன்படுத்தினர். இந்து ராஜ்ஜியங்களுடனான அவர்களின் திருமண உறவுகளும், இந்தியாவில் உள்ள பல்வேறு சமூகங்களுடன் ஏற்படுத்திக்கொண்ட வலுவான கூட்டணிகளும், குறிப்பிடத்தக்க கலாச்சார, கலை மற்றும் மொழிப் பரிமாற்றங்களுக்கு வழிவகுத்தன.
முகலாய வம்சம் தங்களை மங்கோலியர்களின் வழித்தோன்றல்களாகக் கூறிக்கொண்டார்கள். 'முகலாயர்' என்ற சொல், 'மங்கோல்' என்ற சொல்லின் அரபுமயமாக்கப்பட்ட வடிவத்திலிருந்து பெறப்பட்டது. முகலாயப் பேரரசர்கள் இந்தியாவில் கலைகளின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருந்தனர். டெல்லி, ஆக்ரா மற்றும் லாகூரில் உள்ள அரண்மனைகள், மேலும் புகழ்பெற்ற தாஜ்மஹால் மற்றும் டெல்லி செங்கோட்டை என இப்போது நம் நாட்டிலிருக்கும் மிகச் சிறந்த கட்டிடங்கள் முகலாயர்களின் காலகட்டத்தில் உருவாக்கப்பட்டவைதான்.
முகலாய சாம்ராஜ்ஜியத்தின் வளர்ச்சி
முகலாய பேரரசர்கள் அனைவரும், தங்களால் முடிந்த அனைத்து உத்திகளையும் பயன்படுத்தி, இந்தியாவில் மற்றும் அதற்கு அப்பாலும் முகலாயப் பேரரசை விரிவுபடுத்த முயன்றனர். அவர்களின் தந்திரங்களாலும், போர் உத்திகளாலும் முகலாயப் பேரரசு 1526 முதல் 1857 வரை, சுமார் 331 ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பகுதியை ஆட்சி செய்தது. முகலாய வம்சம் நாட்டின் பணக்கார மற்றும் நீண்ட காலம் ஆட்சி செய்த வம்சங்களில் ஒன்றாக இருந்தது. ஒளரங்கசீப் காலத்தில் முகாலயர்களின் ராஜ்ஜியம் உலகிலேயே மிகப்பெரிய ராஜ்ஜியங்களில் ஒன்றாக மாறியது.
இவ்வளவு வலிமை வாய்ந்த முகலாய பேரரசு எப்படி வீழ்ந்தது என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா? முகலாயர்களின் வளர்ச்சிக்கு எப்படி சில அரசர்கள் காரணாமாக இருந்தார்களோ அதேபோல அவர்களின் வீழ்ச்சிக்கும் சில அரசர்கள் காரணாமாக இருந்தார்கள். குறிப்பாக ஒரு அரசர் முகலாயர்களின் வீழ்ச்சிக்க முக்கிய காரணாமாக இருந்தார். அவரின் பெயர் ஜஹந்தர் ஷா. அவர் முகலாயப் பேரரசின் மிகவும் விசித்திரமான மற்றும் திறமையற்ற ஆட்சியாளர்களில் ஒருவராக இருந்தார். அவர் எப்படி முகலாய வீழ்ச்சிக்கு காரணமாக இருந்தார் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஜஹந்தர் ஷா யார்?
ஜஹந்தர் ஷாவின் ஆட்சியின் போது, முகலாயப் பேரரசின் பாரம்பரியத்தை பலவீனப்படுத்தும் பல நிகழ்வுகள் நடந்தன. அவரது ஆட்சி ஒரு வருடம் மட்டுமே நீடித்தது, இது முகலாய வரலாற்றில் மிகவும் குறுகிய ஆட்சிக்காலங்களில் ஒன்றாகும். ஜஹந்தர் தனது ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் பகட்டான ஆளுமைக்காகப் பெயர் பெற்றவர். அவர் தனது காதலியும், ஒரு நடன மங்கையுமான லால் குன்வர் என்பவருக்கு பேகம் இம்தியாஸ் மஹால் என்ற பட்டத்தை வழங்கினார்.
சில சமயங்களில், அவர் நிர்வாணமாகவோ அல்லது பெண்களின் ஆடை அணிந்தோ நீதிமன்றத்திற்கு வருவார். அவரது தலைமைப் பண்பின்மை இராணுவத்தில் பலவீனத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி, சிற்றின்பம் மற்றும் ஆடம்பரங்களுக்காக அவர் செய்த அதீத செலவுகள், அரசு கருவூலத்தின் மீது கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தியது. தலைமை வலுவில்லாததும், கடுமையான பண பற்றாக்குறையும் முகலாயர்களின் கீழ் இருந்த சிற்றரசுகளை சிதறச் செய்தது. மேலும் ஆங்கிலேயர்களின் ஆதிக்கமும் முகலாயர்களை பலவீனப்படுத்தியது.



Click it and Unblock the Notifications












