Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
இந்திய வரலாற்றின் பவர்புல் அரசர்கள் இவர்கள்தான்... இந்த பட்டியலில் இருக்கும் ஒரே தமிழ் அரசர் யார் தெரியுமா?
இந்தியாவின் வரலாறு மற்ற நாடுகளின் வரலாற்றை விட மிகவும் தனித்துவமானது, ஏனெனில் இந்தியா எனும் பெரும் நிலப்பரப்பை நூற்றுக்கணக்கான வம்சத்தினர் ஆட்சி செய்துள்ளார்கள். இந்தியா பல்வேறு கலாச்சாரங்களின் கலவையாகும். ஆயிரக்கணக்கான அரசர்கள் இந்தியாவில் வந்திருந்தாலும் இந்தியாவின் நிலப்பரப்பையும், கலாச்சாரத்தையும் வடிவமைத்தவர்கள் மிகவும் சொற்பமான அரசர்கள்தான்.
இந்த ஆட்சியாளர்கள் வரலாற்றில் இடம் பிடித்தது, அவர்களின் வம்சத்தின் பெருமையாலோ அல்லது போர் வெற்றிகளின் அடிப்படையில் மட்டுமல்ல, நிர்வாக சீர்திருத்தங்கள், கலாச்சார மாற்றங்கள் மற்றும் பல தலைமுறைகள் வரை தாக்கத்தை ஏற்படுத்திய நிர்வாக கண்டுபிடிப்புகளாலும்தான். இந்த பதிவில் இந்திய வரலாற்றில் பேரரசுகளை உருவாக்கிய மிகவும் சக்திவாய்ந்த மற்றும் பிரபலமான ஆட்சியாளர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

அசோகர்
கிமு 268-232 வரை ஆட்சி செய்த அசோகர், இந்தியாவில் இன்றுவரை மிகவும் பிரபலமான பேரரசர்களில் ஒருவராகத் திகழ்கிறார். ஒரு காலத்தில் இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்த பரந்த மௌரியப் பேரரசைச் சேர்ந்த அசோகர் ஆட்சி இந்திய வரலாற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. கலிங்கப் போரின் மோசமான விளைவுகளால் பாதிக்கப்பட்ட அசோகர், தனது மக்களுக்கு அகிம்சை, இரக்கம் மற்றும் நன்மைகளை செய்ய புத்த மதத்தைத் தழுவினார்.
அவரது பேரரசு முழுவதும் தூண்கள் மற்றும் பாறைகளில் பொறிக்கப்பட்ட அவரது கட்டளைகள், மிருகத்தனமான சக்தியை விட தார்மீகத் தலைமையைத் தேர்ந்தெடுத்த ஒரு பேரரசரின் நினைவூட்டலாக இன்னும் செயல்படுகின்றன. அமைதியைப் பரப்புவதற்கும், நெறிமுறைப்படி சரியான ஆட்சியை வழங்குவதற்கும் அசோகரின் அர்ப்பணிப்பு இந்திய வரலாற்றில் மாபெரும் மாற்றத்திற்கு காரணமாக இருந்தது.
சமுத்திரகுப்தர்
மௌரியப் பேரரசை உருவாக்கிய சந்திரகுப்த மௌரியர், பண்டைய இந்தியாவின் பரந்த பகுதிகளை ஒரே ராஜ்ஜியத்தின் கீழ் ஒன்றிணைத்தார். தனது அரசியல் ஆலோசகரான சாணக்கியரின் வழிகாட்டுதலின் கீழ், அவர் சக்திவாய்ந்த நந்த வம்சத்தை அழித்து விட்டு, மௌரிய பேரரசை உருவாக்கினார். மேலும் சிறப்பான செயல்திறன் மற்றும் புதுமைக்கு பெயர் பெற்ற ஒரு அதிநவீன நிர்வாக அமைப்பை நிறுவினார்.
அவரது தலைமையின் கீழ், மௌரியப் பேரரசு துணைக்கண்டத்தின் ஆரம்பகால மற்றும் மிகவும் விரிவான பேரரசுகளில் ஒன்றாக வளர்ந்தது. அவர் 'இந்தியாவின் நெப்போலியன்' என்று புகழப்பெற்றார். வாழ்க்கையின் பிற்பகுதியில், அவர் சமண மதத்தைத் தழுவி, உலக அதிகாரத்தைத் துறந்து ஆன்மீகப் பாதையைப் பின்பற்றினார்.
இரண்டாம் சந்திரகுப்தர்
விக்ரமாதித்யன் என்று அழைக்கப்படும் இரண்டாம் சந்திரகுப்தர் கி.பி 380-415 க்கு இடையில் இந்தியாவின் பெரும் பகுதியை ஆட்சி செய்தார், அவர் தனது முன்னோடிகளின் வெற்றிகளைக் கொண்டு குப்த சாம்ராஜ்யத்தை கலை, அறிவியல் மற்றும் இலக்கியம் செழித்தோங்கும் நாகரிகமாக மாற்றினார். அவரது நிர்வாகத்தின் கீழ் இந்தியா ஒருங்கிணைப்பையும் கலாச்சாரத்தின் செழிப்பையும் கண்டது, அறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் கலைஞர்கள் அவரது அரசவையில் ஆதரவையும், கௌரவத்தையும் பெற்றனர்.
இரண்டாம் சந்திரகுப்தரின் புதுமையான நிர்வாகக் கொள்கைகள் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகள் பொருளாதாரத்தை மேம்படுத்தியது மட்டுமின்றி, துணைக் கண்டம் முழுவதும் அடுத்தடுத்த தலைமுறைகளைப் பாதித்த ஒரு நீடித்த கலாச்சார மரபையும் உருவாக்கினார். அதனால்தான் அவர் இந்திய பொற்காலத்தின் சிற்பி என்று அவர் அழைக்கப்படுகிறார்.
முதலாம் ராஜ ராஜ சோழன்
தென்னிந்தியாவில், கி.பி 985-1014 க்கு இடையில் ஆட்சி செய்த முதலாம் ராஜ ராஜ சோழன், தனது இராணுவத் திறமை மற்றும் திறமையான மேலாண்மை மூலம் மிகவும் உறுதியான பேரரசுகளில் ஒன்றை உருவாக்கினார். சோழப் பேரரசின் விரிவாக்கத்தின் தொடக்கப்புள்ளியாக, அவர் இந்தியக் கடற்கரைகளுக்கு அப்பால் தனது செல்வாக்கை விரிவுபடுத்தினார், தென்கிழக்கு ஆசியா வரை நீண்ட கடல்சார் வர்த்தக வலையமைப்பை நிறுவினார்.
முதலாம் ராஜ ராஜ சோழனின் இன் ஆட்சி அதன் அற்புதமான கோயில் கட்டிடக்கலைக்கு பிரபலமானது, அதற்கு உதாரணம்தான் 1000 ஆண்டுகள் கடந்தும் இன்றும் கம்பீரமாக நிற்கும் பிரகதீஸ்வரர் கோவில், இது கலையும் ஆட்சியும் கைகோர்த்துச் சென்ற ஒரு சகாப்தத்திற்கு சான்றாகும்.
அக்பர்
இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த ஆட்சியாளர்கள் என்று வரும்போது அதில் முகலாய பேரரசர் அக்பரின் பெயரை ஒருபோதும் தவிர்க்க முடியாது. அதுவரை இந்தியா கண்டிராத நிர்வாக அணுகுமுறையைக் கையாண்ட முகலாய பேரரசராக, அக்பர் தனது நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் மதப் பிளவுகளைக் குறைக்கும் முயற்சிகளுக்கு பெயர் பெற்றவராக அக்பர் விளங்கினார்.
அவரது அரசவை பல்வேறு பின்னணிகளைக் கொண்ட அறிஞர்கள், கலைஞர்கள் மற்றும் சிந்தனையாளர்களை ஊக்குவிக்கும் சபையாக இருந்தது. வரிவிதிப்பு, இராணுவ அமைப்பு மற்றும் கலாச்சார ஆதரவில் அக்பரின் புதுமைகள் முகலாய அரசை ஒரு வளமான மற்றும் இணக்கமான பேரரசாக மாற்றியது,
சத்ரபதி சிவாஜி
சத்ரபதி சிவாஜி 1674-1680 க்கு இடையில் ஒரு சுதந்திரமான இறையாண்மையாளராக ஆட்சி செய்தார், மராட்டியப் பேரரசை உருவாக்கிய அவர், கிளர்ச்சி மற்றும் புத்திசாலித்தனத்தின் நீடித்த அடையாளமாக இருக்கிறார். அவர் தனது சுறுசுறுப்பான கொரில்லா போர் தந்திரங்கள் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பில் போரிடும் செயல்முறைக்கு பெயர் போனவர்.
முகலாயர்களை கடுமையாக எதிர்த்தபோதிலும் அவர் ஒரு வலிமையான ராஜ்ஜியத்தை நிறுவினார். அவரது புதுமையான கோட்டை கட்டுமானம், கடற்படை உத்திகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதும் தன்னம்பிக்கை உணர்வை ஏற்படுத்தியது.
ஔரங்கசீப்
தற்போதும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருக்கும் ஔரங்கசீப் கி.பி 1658-1707 க்கு இடைபட்ட காலத்தை ஆட்சி செய்தார், மேலும் இந்திய வரலாற்றில் மிகவும் சர்ச்சைகள் நிறைந்த அரசராகத் திகழ்கிறார். சக்திவாய்ந்த முகலாய பேரரசர்களில் கடைசியாக இருந்த அவர், முகாலய பேரரசின் எல்லைகளை தொடர்ச்சியான படையெடுப்புகள் மூலம் விரிவுபடுத்தினார்.
அவரது ஆட்சி பெரும்பாலும் அதன் கடுமையான கொள்கைகள் மற்றும் மத சார்புக்கு முக்கியத்துவம் அளித்ததற்காக விவாதிக்கப்பட்டாலும், அவரது வலிமையான இராணுவ புத்திசாலித்தனம் மற்றும் எல்லை கடந்த அதிகாரத்தை யாராலும் மறுக்க முடியாது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications












