Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகருக்கு பூஜை செய்ய உகந்த 21 இலைகளும்.. அவற்றால் கிடைக்கும் நன்மைகளும்.. -
தினமும் காலையில் 1 பல் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? புட்டுபுட்டு வைக்கும் டாக்டர்! -
1 வருடம் கழித்து கன்னி ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியை பாக்கப்போறாங்க.. -
ராகி இட்லியும், வெங்காய கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சுவையானதும், சத்தானதும் கூட -
செப்டம்பர் 12, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்துகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 18-ல் நடக்கும் செவ்வாய் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க வேலை மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்! -
செவ்வாய் கடக ராசிக்கு செல்வதால் நவம்பர் மாதம் வரை டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
ஆந்திரா ஸ்டைல் உருளைக்கிழங்கு தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அம்ரித்சரி பன்னீர் புர்ஜி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
இந்த 5 ராசிக்காரங்களுக்கு ஈஸியா பணம் சம்பாதிக்கும் ராஜயோகம் கூடவே பிறந்ததாம்... உங்க ராசி இதுல இருக்கா?
அனைவருக்குமே நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், அதிக முதலீடுகள் செய்ய வேண்டும் மற்றும் பொருளாதாரரீதியாக வெற்றியை அடைய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால் அந்த நிலையை அடைவதற்கு கடின உழைப்பும், விடாமுயற்சியும், உறுதியும் தேவை.
இந்த முயற்சியில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள், சிலர் வெற்றியை அடைவதில்லை. ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெற்றியடைவதன் அர்த்தம் வித்தியாசமானதாக இருந்தாலும் பொருளாதார பாதுகாப்பு என்பது அதனை அடிப்படையானதாக இருக்கும். ஆனால் பணக்காரராவது என்பது அதிர்ஷ்டத்தையும் பொறுத்தது என்பதை மறந்துவிடக்கூடாது.

நீங்கள் அதற்கு விதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பணம் சம்பாதிக்கவும், பணக்காரர்களாகவும் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டவர்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் யாரென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் அனைத்து வகையான அதிர்ஷ்டத்தைக் கொண்டவர்கள் மட்டுமல்ல, அவர்கள் தங்கள் உலகத்தை தானாக வடிவமைப்பவர்களும் கூட. அவர்களின் இலக்கை அடைய அவர்களுக்கு எந்த ஊக்கமும் தேவையில்லை. அவர்களுக்கான சிறந்த ஊக்கம் அவர்கள். மாறாக அவர்கள் தங்கள் உடனிருப்பவர்களின் இலக்கை அடையவும் அடையவும் அவர்களைத் தூண்டுவார்கள். ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக இருப்பதற்கான அனைத்து தகுதிகளும் அவர்களுக்கு உள்ளது.
விருச்சிகம்
நீர் அடையாளாமான விருச்சிக ராசிக்காரர்கள் சிறந்த தலைவராக இருப்பதற்கான தகுதிகளை உடையவர்கள். அவர்கள் இயல்பான தலைவர்கள், அவர்கள் தங்கள் தொழில்முறை வாழ்க்கையை வெற்றிகரமாக உருவாக்குவதற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்கள், அவர்களின் ஆரம்ப கால வேலையே அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான செல்வத்தை பெற்றுக்கொடுக்கும். அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள், அவர்கள் தங்கள் புத்திசாலித்தனத்தால் அதிர்ஷ்டக் கதவை மிகவும் திறமையாக திறக்க கூடியவர்கள்.
கன்னி
மற்ற ராசிக்காரர்களைப் போல இல்லாமல் கன்னி ராசிக்காரர்கள் நிதிரீதியான வெற்றியை பெரிதாகக் கருதுவதில்லை. ஆனால் அவர்களின் குணாதிசயங்கள் எதிர்பாராத செல்வத்திற்கு வழிவகுக்கும். தங்களிடம் குறைபாடு இருப்பதாகத் தோன்றினால் அதனை சரிசெய்ய அவர்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறார்கள். இந்த குணம் அவர்களை எப்போதும் வெற்றிபெற அவர்களின் சுய முன்னேற்றம் பற்றி சிந்திக்க வைக்கிறது. கன்னி ராசிக்காரர்கள் தங்கள் இலக்கை அடையும் பாதையில் நேர்மையாகவும், உறுதியாகவும் இருக்க விரும்புகிறார்கள்.
மீனம்
கற்பனைத் திறன் வாய்ந்த மீன ராசிக்காரர்கள் எல்லாவற்றையும் அனுசரித்துச் செல்வார்கள். அவர்கள் திட்டத்தின் படி எதுவும் நடக்கவில்லை என்றால் அவர்கள் எளிதாக சமாளிக்க முடியும். ஏனெனில் அவர்களிடம் எப்போதும் மாற்றுத் திட்டம் தயாராக இருக்கும். அவர்களின் படைப்பாற்றல் அவர்களின் வளர்ச்சிக்கு எந்த வகையான சவாலுக்கும் தயாராக இருக்க உதவுகிறது. மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் சுயதொழில் செய்பவர்களாகக் காணப்படுகின்றனர்.
ரிஷபம்
தேவையற்ற பதற்றம் அல்லது மன அழுத்தம் இல்லாத வசதியான வாழ்க்கையை வாழ்வதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள் மற்றும் எந்தவொரு வணிகத்திலும் அல்லது வேலையிலும் அவர்கள் சிறந்த போட்டியாளராக இருக்கிறார்கள். இருப்பினும், ரிஷப ராசிக்காரர்கள் சில நேரங்களில் எளிதில் திசைதிருப்பப்படலாம், ஆனால் மீண்டும், அவர்கள் விரைவாக வெற்றியின் பாதைக்கு திரும்ப வந்து விடுவார்கள்.



Click it and Unblock the Notifications


