Latest Updates
-
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
பாபா வாங்கா கணிப்புப்படி, அடுத்த 6 மாதம் இந்த 5 ராசிக்கு ராஜவாழ்க்கை தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
ஜூன் மாத வானிலை மாற்றமா? இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா வீடே குளிர்ச்சியாகவும் அதிர்ஷ்டமாகவும் மாறும்! -
அடிக்குற வெயிலுக்கு மாம்பழத்தை இப்படி சர்பத் செஞ்சு குடிங்க.. குளுகுளுன்னு இருக்கும்.. -
உங்களுக்கு மாரடைப்பு வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த டயட்டை ஃபாலோ பண்ணுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு செல்வம் இரட்டிப்பாகும்..
10,000 காண்டம் 3 நாட்களில் காலி... ஒலிம்பிக் போட்டிகளில் ஏன் இவ்வளவு காண்டம் கொடுக்கப்படுகிறது தெரியுமா?
ஒலிம்பிக் போட்டிகள் உலகப்புகழ் பெற்றவை, உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் இந்த போட்டிகளில் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்கின்றனர். தற்போது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 2026 மிலன்-கோர்டினா குளிர்கால ஒலிம்பிக்கில் ஒரு வித்தியாசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளது, போட்டி தொடங்கிய முதல் சில நாட்களுக்குள் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்பட்ட இலவச ஆணுறைகள் தீர்ந்து போய்விட்டன. போட்டி ஏற்பாட்டளர்கள் வழங்கிய 10,000 பேக் ஆணுறைகள் விரைவாக தீர்ந்து போனதால், எதிர்பாராமல் ஏற்பட்ட இந்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் திணறியுள்ளனர்.
இந்த அசாதரண தட்டுப்பாடு போட்டி ஏற்பாட்டாளர்களை ஒரு சங்கடமான சூழ்நிலைக்குத் தள்ளியுள்ளது, விரைவில் புதிதாக தருவிக்கப்பட்ட கூடுதல் காண்டங்களை வழங்குவதாக உறுதியளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இருப்பினும் எப்போது புதிய ஆணுறைகள் கொண்டுவரப்படும் என்று தெளிவாக கூறப்படவில்லை. விளையாட்டு வீரர்களுக்கு எளிதில் கிடைக்கும்படி மீதமுள்ள விளையாட்டுப் போட்டிகளிலும் கூடுதல் ஆணுறை விநியோகம் தொடரும் என்று ஏற்பாட்டுக் குழு உறுதிப்படுத்தியுள்ளது.

காண்டம் பற்றாக்குறை ஏன் ஏற்பட்டது?
ஆணுறை பற்றாக்குறை மீண்டும் ஒரு நீண்டகால ஒலிம்பிக் பாரம்பரியத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது, இந்த போட்டிகளின் போது ஆயிரக்கணக்கான விளையாட்டு வீரர்கள் வாரக்கணக்கில் அருகிலேயே வசிக்கின்றனர், எனவே நிச்சயம் அவர்களுக்கு ஆணுறை அதிகளவில் தேவைப்படலாம். 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் மிகப்பெரிய அளவிலான ஆணுறைகள் வழங்கப்பட்டது, ஆனால் மிலனின் ஏற்பட்டுள்ள இந்த பற்றாக்குறை அனைத்து தவறான காரணங்களுக்காகவும் கவனத்தை ஈர்த்துள்ளது.
குளிர்கால ஒலிம்பிக்கில் ஆணுறைகள் எப்படி தீர்ந்தன?
மிலனில் உள்ள கோர்டினா டி'அம்பெஸ்ஸோவில் அமைந்துள்ள விளையாட்டு வீரர்களின் கிராமத்தில், கடந்த கால குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை அடிப்படையாகக் கொண்டு அமைப்பாளர்கள் ஆணுறையின் அளவை குறைத்ததால், ஆணுறைகள் விரைவில் தீர்ந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் சுமார் 2,900 விளையாட்டு வீரர்களுக்கு 9,700 க்கும் மேற்பட்ட ஆணுறைகள் கொடுக்கப்பட்டன, பின்னர் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டன, ஆனால் தேவை வரையறுக்கப்பட்ட இருப்பை விட அதிகமாக இருந்ததே இந்த பற்றாக்குறைக்கு காரணமாக கூறப்படுகிறது.
பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்திருக்கும் விளையாட்டு வீரர்களை தங்க வைக்கும் ஒரு தற்காலிக குடியிருப்பு வளாகமாக கோர்டினா டி'ஆம்பெஸ்ஸோ செயல்படுகிறது. பகிரப்பட்ட பொது இடங்கள் மற்றும் லிமிடெட் பிரைவசி ஆகியவற்றுடன், இங்கு நிலவும் சூழல் பெரும்பாலும் நெருக்கமான தொடர்பு மற்றும் காண்டம் போன்ற பொருட்களுக்கான அதிக தேவையை உருவாக்குகிறது. போட்டி முடியும் வரை ஆணுறைகள் மீண்டும் நிரப்பப்பட்டு கிடைப்பதை உறுதிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டிகளில் ஏன் காண்டம் வழங்கப்படுகிறது?
ஒலிம்பிக் கிராமங்களில் இலவச கருத்தடை சாதனங்களை வழங்குவது நீண்ட காலமாக ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது, நெருக்கமான இடங்களில் ஒன்றாக வாழும் போட்டியாளர்களிடையே பாதுகாப்பான உடலுறவு மற்றும் பாலியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த முயற்சி ஒலிம்பிக் விளையாட்டுகளின் ஒரு பழக்கமான பகுதியாக மாறியுள்ளது.
ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டிகளிலும் விநியோகத்தின் அளவு பரவலாக வேறுபடுகிறது. 2024 இல் நடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் அதன் 10,500 விளையாட்டு வீரர்களுக்கு சுமார் 200,000 ஆண் மற்றும் 20,000 பெண் ஆணுறைகள் வழங்கப்பட்டது, அதே நேரத்தில் அதற்கு முந்தைய போட்டியில் 300,000 ஆணுறைகள் வரை விநியோகிக்கப்பட்டன. எனவே 10,000 மட்டுமே வழங்கபட்ட மிலன் போட்டிகளின் முடிவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



Click it and Unblock the Notifications
