Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க ஓவர் தன்னம்பிக்கையால் எப்பவும் சொதப்பிட்டே இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆயுத பூஜைக்கு சுண்டல் சாப்பிட்டு கேஸ் ஏறிடுச்சா? அப்ப இந்த இயற்கை பானங்களை குடிங்க.. -
சனி-சூரியனால் உருவாகியுள்ள ஷடாஷ்டக யோகம்: இந்த 3 ராசிக்காங்க கவனமாக இருக்கணும்! -
காரசாரமான பன்னீர் தேங்காய் மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வேற லெவல் சுவையில் இருக்கும் -
ஆயுத பூஜை நாளில் உங்க ராசிப்படி தானம் செய்யுங்க.. துர்கையின் ஆசியால் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
கைகளில் சொடக்கு எடுக்கும்போது அதிலிருந்து ஏன் சத்தம் வருகிறது? இப்படி செய்வது பாதிப்பை ஏற்படுத்துமா? -
1 கைப்பிடி கொத்தமல்லியும், 2 தக்காளியும் இருந்தா.. காலையில் இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. -
அக்டோபர் 19, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நவம்பர் 12 வரை இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஒரே இரவில் பளிச்சென்று ஜொலிக்கணுமா? அப்ப நைட் டைம்-ல இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
இந்த 4 ராசிக்காரர்களுக்கு எப்பவும் நல்ல நண்பர்கள் கிடைக்கவே மாட்டார்களாம்... பெரிய துரதிர்ஷ்டசாலியாம் இவங்க...
நட்பு என்பது அனைவரின் வாழ்க்கையிலும் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாகும். ஒருவர் வாழ்க்கையில் மிகவும் சந்தோசமாக இருக்கும் தருணத்திலும் சரி, சோகமாக இருக்கும் தருணத்திலும் சரி அந்த தருணத்தில் அவர்கள் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள முதலில் தேடுவது நண்பர்களைத்தான். வாழ்க்கையில் அனைவரும் நண்பர்களை விரும்பினாலும், அனைத்து விஷயத்திலும் சிலர் விதிவிலக்காக இருப்பார்கள். நட்பும் இதற்கு விதிவிலக்கல்ல.
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் நட்பு விஷயத்தில் மிகவும் விதிவிலக்கானவர்களாக இருப்பார்கள். அவர்கள் மற்றவர்களிடம் எளிதில் நட்பை உருவாக்குவதில்லை, மற்றவர்களிடம் நண்பராக இருக்கவும் விரும்புவதில்லை. அவர்களின் தனித்துவமான ஆளுமையால் அவர்கள் உண்மையான நட்பை மிகவும் சிரமப்படுவார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் மோசமாக நண்பராக இருப்பார்கள் என்றும், நட்பு விஷயத்தில் போராடுபவர்களாகவும் இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் தீவிரமானவர்கள் மற்றும் ரகசியமான உணர்வுகளைக் கொண்டவர்கள். விருச்சிக ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்கள் உணர்ச்சிகளை மறைத்து வைத்திருப்பார்கள், பெரும்பாலும் தனிமையில் இருக்க விரும்புவார்கள். அவர்களின் ரகசிய இயல்பு மற்றவர்களை அவர்களை அணுகுவதை கடினமாக்குகிறது. அவர்கள் யாரை நம்புகிறார்கள் என்பதிலும், யாரை தங்கள் நண்பர்களாக நினைக்கிறார்கள் என்பதிலும் மிகவும் கவனமாக இருப்பார்கள். இந்த நடத்தை காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் நண்பர்களிடமிருந்து மிகவும் தொலைவில் இருக்கலாம், இதன் விளைவாக அவர்களுக்கு மிகவும் சொற்பமான நண்பர்களே இருப்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் ஒழுக்கமானவர்கள் மற்றும் இலட்சிய இயல்புடையவர்கள். தொழில் மற்றும் பொறுப்புகளில் அவர்கள் கவனம் செலுத்துவதால், பெரும்பாலும் அவர்களுக்கு நண்பர்களை உருவாக்கவும், சமூகமயமாக்கலுக்கும் அதிக நேரம் இருக்காது. மகர ராசிக்காரர்கள் தீவிரமாகவும், ஒதுக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம், இதனால் மற்றவர்கள் அவர்களுடன் நெருங்கிப் பழகுவது என்பது மிகவும் கடினமாக இருக்கும். வேலை மற்றும் தனிப்பட்ட வெற்றிக்கு முன்னுரிமை அளிக்கும் அவர்களின் போக்கு, ஒரு சிறிய சமூக வட்டத்திற்கு அல்லது நெருங்கிய நண்பர்கள் இல்லாததற்கு வழிவகுக்கும். மகர ராசிக்காரர்கள் அதிகமான நண்பர்கள் இருப்பதை விட உண்மையான ஒரு நண்பர் இருப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் அவர்களின் அதீத சுதந்திர மனப்பான்மைக்கு பெயர் பெற்றவர்கள். கும்ப ராசிக்காரர்கள் பெரும்பாலும் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வாழ விரும்புகிறார்கள், மேலும் சமூக எதிர்பார்ப்புகளுக்கு இணங்க வேண்டிய அவசியத்தை உணருவதில்லை. இது உணர்வுரீதியாகப் பற்றின்மை அல்லது தனிமை உணர்வை ஏற்படுத்தும். கும்ப ராசிக்காரர்கள் தங்கள் சுதந்திரம் மற்றும் அறிவுசார் நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், அவர்கள் சில நேரங்களில் ஆழ்ந்த உணர்ச்சிப் பிணைப்புகளை உருவாக்க மிகவும் சிரமப்படுகிறார்கள். அவர்களின் நட்பு வழக்கத்திற்கு மாறானது மற்றும் உணர்ச்சிகளை விட கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது.
கன்னி
கன்னி ராசிக்காரர்களின் பகுப்பாய்வு குணமும், பர்பெக்ட்டாக இருக்க வேண்டுமென்ற விருப்பமும் அவர்களின் நட்பில் பல தடைகளை உருவாக்கலாம். கன்னி ராசிக்காரர்கள் சமூக தொடர்புகளை அதிகமாக சிந்திக்க முனைகிறார்கள் மற்றும் தங்களைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் மிகவும் விமர்சிக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த விமர்சன மனநிலை கன்னி ராசிக்காரர்களை மற்றவர்களை நம்புவதில் எச்சரிக்கையாகவும், நெருங்கிய நட்பை உருவாக்க விரும்பாமலும் இருக்க வைக்கும். அவர்கள் அதிகமாக நெருங்கமாக உணரும்போது அந்த உறவிலிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள், இது அவர்கள் எப்போதும் தனிமையில் இருக்க வழிவகுக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

