Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
புதன் உருவாக்கிய விபரீத ராஜயோகம்: அடுத்த 8 நாட்கள் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டும்...
Mercury Made Vipreet Rajyog: வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் கிரக நிலைகளால் உருவாகும் சுப மற்றும் அசுப யோகங்கள் கூட ஒருவரது வாழ்வில் தாக்கத்தை உண்டாக்குகின்றன.
அந்த வகையில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதன், பிப்ரவரி மாதத்தில் சனி பகவானின் மூல திரிகோண ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார். இப்படி புதன் கும்ப ராசியில் நுழைந்தால், எதிர் ராஜயோகமான விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த ராஜயோகத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தென்படும்.

இருப்பினும், சில ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தையும், பண வரவையும் பெறுவார்கள். இப்போது புதனால் உருவான விபரீத ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் புதன் இருப்பதோடு, விபரீத ராஜயோகத்தையும் உருவாகியிருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவு ஒவ்வொரு வேலையிலும் இருக்கும். சிலர் குறுகிய மற்றும் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அதோடு பங்குச் சந்தை, லாட்டரி ஆகியவற்றின் மூலம் நல்ல லாபத்தையும் பெறலாம். பணிபுரிபவர்கள் இக்காலகட்டத்தில் நல்ல வருமானத்தைப் பெறுவார்கள். சிலர் புதிய வருமானத்தை உருவாக்கலாம். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். தேர்வுகளை சிறப்பாக செய்வார்கள்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் புதன் இருப்பதோடு, விபரீத ராஜயோகத்தையும் உருவாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்களின் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறுவார்கள். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருந்த நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். குறிப்பாக தீர்ப்புகளானது உங்களுக்கு சாதகமாக வரும். வியாபாரம் செய்பவர்கள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் புதன் இருப்பதுடன், விபரீத ராஜயோகத்தையும் உருவாக்கியுள்ளார். இதனால் இக்காலகட்டத்தில் தைரியம் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து சில நன்மைகளைப் பெறக்கூடும். வெளிநாட்டுடன் தொடர்புடைய வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வங்கி இருப்பு எதிர்பாராத அளவில் அதிகரிக்கும். நல்ல நிதி ஆதாயங்களை இக்காலகட்டத்தில் பெறக்கூடும். பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications