Latest Updates
-
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது!
பத்ரா மற்றும் புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அக்டோபர் 19 வரை இந்த 3 ராசிகளுக்கு பண வரவு சிறப்பா இருக்கும்...
Mercury Made Badra And Budhaditya Rajyoga: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கமானது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும்.
அந்த வகையில் நவகிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் புத்திசாலித்தனம், வியாபாரம், பேச்சு, படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.

மேலும் புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியும் கூட. இப்படிப்பட் புதன் அக்டோபர் 01 ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னி ராசிக்குள் நுழைந்தார். கன்னி ராசியில் புதன் நுழைந்ததால் பத்ரா ராஜயோகம் உருவானது.
அதுமட்டுமின்றி, ஏற்கனவே கன்னி ராசியில் சூரியன் பயணித்து வருவதால், சூரியனுடன் புதன் சேர்ந்து புதாதித்ய ராஜயோகமும் உருவானது. இப்படி பத்ரா மற்றும் புதாத்திய ராஜயோகம் ஒரே வேளையில் உருவானதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
முக்கியமாக இந்த யோகத்தால், சில ராசிக்காரர்கள் தொழில் அபரிமிதமான லாபத்தைப் பெறுவதோடு, முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். மேலும் விருப்பங்களும் நிறைவேறவுள்ளன. இப்போது பத்ரா மற்றும் புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு பத்ரா மற்றும் புதாதித்ய ராஜயோகங்களானது நன்மைகளைத் தரும். முக்கியமான நிதியைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணத்தைப் பெறக்கூடும்.
சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். பங்குச் சந்தை மற்றும் லாட்டரியில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் பேச்சு மிகவும் சிறப்பாக மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு பத்ரா மற்றும் புதாதித்ய ராஜயோகமானது சாதகமான பலன்களை வழங்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலதிபர்களுக்கு சமூகத்தில் சிறப்பான இடத்தைப் பெறுவதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு எதிர்பாராத பணம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தந்தையின் முழு ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த புதனால் உருவான பத்ரா மற்றும் புதாத்திய ராஜயோகங்களானது இந்த ராசிக்காரர்களுக்கு பலவிதமான நன்மைகளை வழங்கும். முக்கியமாக இக்காலத்தில் வசதி வாய்ப்புகளில் உயர்வு ஏற்படும்.
புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. பழைய முதலீடுகளில் இருந்து நல்ல பண ஆதாயம் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications