Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
செவ்வாய் உருவாக்கும் ருச்சக ராஜயோகம்: 2024-ல் இந்த 3 ராசிக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்...
Mars Will Make Ruchak Rajyoga In 2024: ஜோதிடத்தின் படி, 2024 ஆம் ஆண்டு மிகவும் சிறப்பான ஆண்டாக இருக்கும். ஏனெனில் இந்த ஆண்டில் பல கிரகங்கள் ராசியை மாற்றவுள்ளன. அப்படி ஏற்படும் மாற்றங்களின் போது சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அவ்வாறு உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் 20234 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் மகர ராசியில் நுழையவுள்ளார். மகர ராசியில் செவ்வாய் நுழைவதால், ஒரு சுவாஸ்யமான ராஜயோகம் உருவாகவுள்ளது. அது தான் ருச்சக ராஜயோகம்.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் வெற்றி மேல் வெற்றியைத் தரப் போகிறது. அதோடு நல்ல செல்வத்தைப் பெறவும் வாய்ப்புள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்வதால், இந்த வீட்டில் ருச்சக ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். ரியல் எஸ்டேட்டுடன் தொடர்புடையவர்கள் செவ்வாயின் அருளால் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 9 ஆவது வீட்டில் ருச்சக ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்கும். அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் நற்பெயரும், செல்வமும், கௌரவமும் அதிகரிக்கும்.
தந்தை மற்றும் குருவின் முழு ஆதரவு கிடைக்கும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயத்தைத் தரும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 4 ஆவது வீட்டில் ருச்சக ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் அனைத்தவிதமான பொருள் இன்பங்களையும் பெறுவார்கள். சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பலனைப் பெறக்கூடும்.
ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சமூகத்தில் மரியாதையும், நற்பெயரும் அதிகரிக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வேலைகள் தேடி வர வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications