Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
செவ்வாய் சுக்கிர சேர்க்கை: மே 2 முதல் 10 வரை இந்த ராசிக்காரர்களின் கையில் பணம் அதிகம் புரளப் போகுது...
Mars Venus Conjunction: மே மாதத்தில் பல கிரகங்கள் தங்களின் ராசிகளை மாற்றப் போகின்றன. அதுவும் மே 2 ஆம் தேதி சுக்கிரன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்லவிருக்கிறார். சுக்கிரனின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும்.
மே மாதத்தின் தொடக்கத்தில் சுக்கிரன் புதன் ஆளும் மிதுன ராசிக்குள் நுழைவதால், பல ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். இந்த மிதுன ராசியில் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் பயணித்து வருகிறார்.

இதனால் மிதுன ராசியில் மே 2 முதல் அடுத்த 8 நாட்கள் சுக்கிர செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. அதன் பின் செவ்வாய் மே 10 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைகிறார்.
செவ்வாய் சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களின் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக இந்த கிரக சேர்க்கையால் சில ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
செவ்வாய் மற்றும் சுக்கிரன்
ஜோதிடத்தின் படி, செவ்வாய் தன்னம்பிக்கை, தைரியம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். அதே சமயம் சுக்கிரன் அழகு, ஆடம்பரம், செழிப்பு, செல்வம், புகழ் ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால், சில ராசிக்காரர்களின் கனவுகள் நனவாகும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் நிறைந்திருக்கும். இப்போது மிதுன ராசியில் செவ்வாய் சுக்கிர சேர்க்கையால் நற்பலனைப் பெறும் ராசிக்காரர்களைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தனிர்களுடன் நல்ல மகிழ்ச்சிகரமான நேரத்தை செலவிட வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். உடன்பிறந்தவர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். வேலை மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு இக்காலத்தில் முன்னேற்றதிற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் இக்காலத்தில் நிறைய செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கை ஏற்றத்தாழ்வு நிறைந்ததாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்கும். முக்கியமாக உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் சுக்கிர சேர்க்கை நிகழ்கிறது. இதனால் வேலை மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இக்காலத்தில் நல்ல நன்மைகளைப் பெறுவார்கள். நிலுவையில் இருந்த வேலைகள் இக்காலத்தில் வெற்றிகரமாக முடிக்கப்டும். கடின உழைப்பின் முழு பலன்கள் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் இக்காலத்தில் நல்ல மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications