Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
செவ்வாயால் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Mars Transit In Cancer: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் தைரியம், வீரம் ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய் மே 10 ஆம் தேதி ராசியை மாற்றவுள்ளார். நவகிரகங்களில் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.
தற்போது செவ்வாய் புதன் ஆளும் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மே 10 ஆம் தேதி சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கடக ராசியில் ஜூலை 01 ஆம் தேதி வரை இருந்து பின் சூரியன் ஆளும் சிம்ம ராசிக்குள் நுழைவார்.

இந்த கடக ராசியில் செவ்வாய் நீசமடைந்து, நீச்சபங்க ராஜயோகத்தை உருவாக்குகிறார். இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்கள் நல்ல அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகமான அற்புதமான பலன்களைத் தரவுள்ளது. குறிப்பாக திடீர் நல்ல பண ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. இக்காலத்தில் பேச்சால் மிகப்பெரிய நன்மை கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் செயல்திறனால் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். இதுவரை உங்கள் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். முக்கியமாக நிதி நிலை வலுவாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் சிறப்பான பலனைத் தரும். முக்கியமாக ஆளுமை மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையும் முன்னேற்றத்தைக் காண்பார்கள். இதுவரை சந்தித்து வந்த பணப் பிரச்சனைகள் நீங்கும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரித்தாலும், பொறுப்புக்களும் அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் சனியின் தாக்கம் இருப்பதல், ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகமானது அட்டகாசமான பலன்களை வாரி வழங்கவுள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியும், லாபமும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல ஆதாயத்தைத் தரும் புதிய ஆர்டர்கள் கிடைக்கும். இக்காலத்தில் குடும்ப வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கைக்கு இடையே சமநிலையை பேண முயற்சிக்க வேண்டும். தந்தையின் முழு ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
