300 ஆண்டுகளுக்கு பின் டிசம்பரில் உருவாகும் 3 ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களை 2024-க்குள் பணக்காரராக்க போகுது..

ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். இவ்வாறு உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

அந்த வகையில் சுமார் 300 ஆண்டுகளுக்கு பின் டிசம்பர் மாதத்தில் 3 ராஜயோகங்கள் உருவாகவுள்ளன. அவை சச ராஜயோகம், ருச்ச ராஜயோகம் மற்றும் மாளவ்ய ராஜயோகம் ஆகியவை ஆகும்.

Malavya, Shash, Ruchaka Yoga Will Make These Zodiac Signs Rich Before 2024 In Tamil

இந்த ராஜயோகங்கள் மூன்றுமே மங்களகரமானவை மற்றும் இந்த 3 ராஜயோகங்களும் ஒரே வேளையில் உருவாகியிருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த யோகத்தால் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெறவுள்ளார்கள்.

முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திடீர் பண வரவையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இந்த 3 ராஜயோகத்தால் பல நல்ல பலன்களைப் பெறுவார்கள். குறிப்பாக வெளிநாட்டில் இருந்து நன்மைகளைப் பெறக்கூடும். வேலை தேடுபவர்களுக்கு வெளிநாட்டில் அல்லது உள்ளூரிலோ நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

மாணவர்கள் வெளிநாடுகளில் படிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்புகள்கிடைக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கை இனிமையாக இருக்கும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை பேச்சால் சரிசெய்வீர்கள். மேலும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பண வரவு சிறப்பாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த 3 ராஜயோகங்கள் மங்களகரமானதாக இருக்கும். முக்கியமாக தொழில் ரீதியாக அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நல்ல லாபமும், முன்னேற்றமும் ஏற்படும். சிலர் திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம்.

குரு பகவானின் அருளால் திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும். முக்கியமான வேலைகள் நிறைவடையும். புதிய வேலைகளைத் தொடங்க விரும்பினால், அதை இக்காலத்தில் தொடங்கினால் நல்ல பலன்களைப் பெறலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த 3 ராஜயோகங்களால் தொழில் ரீதியாகவும், நிதி ரீதியாகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. அதுவும் சுக்கிரன் மற்றும் சனி பகவானின் அருளால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படப் போகிறது.

மாடலிங், நடிப்பு, இசை, ஊடகம் ஆகிய துறைகளில் வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாணவர்கள் போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டிருந்தால், அதில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்கள் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, November 27, 2023, 9:21 [IST]
Desktop Bottom Promotion