Latest Updates
-
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
மஹாளயா பட்சம் 2024: கோபத்தில் இருக்கும் முன்னோர்களை மகிழ்விக்க இதை செய்யுங்கள்..!
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் பௌர்ணமி திதி தொடங்கி, அமாவாசை திதி வரை இந்த மஹாளய பட்சம் எனப்படும் சர்வ பித்ரு பட்சம் நீடிக்கும். இந்த ஆண்டு சர்வ பித்ரு பட்சம் செப்டம்பர் 17ம் தேதி தொடங்கி அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது.. அன்றைய தினம் இறந்த முன்னோர்கள் அனைவருக்கும் தர்ப்பணம், பிண்டம், ஷ்ராத்தம் போன்றவை செய்யப்படுகிறது.
இது தவிர, இறந்த தேதி தெரியாத முன்னோர்கள் அனைவருக்கும் தர்ப்பணம் செய்யப்படுகிறது. இந்த வருடம் சர்வ பித்ரு அமாவாசை அன்று சர்வார்த்த சித்தி யோகம் உருவாகிறது. சர்வ பித்ரு அமாவாசை நாளில், கோபமடைந்த உங்கள் முன்னோர்களை மகிழ்விக்க நீங்கள் இந்த விஷயங்களை செய்து அவர்களை மகிழ்விக்கலாம்.. எப்படி தெரியுமா?

தர்ப்பணம்
உங்கள் முன்னோர்கள் கோபமாக இருந்தால், மகாளய அமாவாசை அன்று நீராடிவிட்டு, உங்கள் முன்னோர்களுக்கு தண்ணீர், வெள்ளைப் பூக்கள் மற்றும் கருப்பு எள்ளினால் செய்யப்பட்ட உணவை கொண்டு தர்ப்பணம் செய்யுங்கள். இதனால் உங்களின் முன்னோர்கள் திருப்தியடைந்து ஆசி வழங்குவார்கள் என்பது நம்பிக்கை..அப்படி அன்றைய தினம் தர்ப்பணம் செய்யவில்லை என்றால் அது முன்னோர்களை சென்றடையாது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் முன்னோர்கள் திருப்தியற்றவர்களாகவும் கோபமாகவும் இருப்பார்களாம்...
பஞ்சபலி கர்மா பலி
மகாளய அமாவாசையில் உங்கள் முன்னோர்களுக்கு பஞ்சபலி கர்மா செய்ய வேண்டும். இதில் உணவு தயாரித்து அதில் ஒரு பகுதியை காகம், மாடு, நாய் போன்றவற்றுக்கு கொடுக்க வேண்டும். மத நம்பிக்கைகளின்படி, அந்த உணவு காகம், மாடு, நாய் போன்றவற்றின் மூலம் முன்னோர்களைச் சென்றடைகிறது. அதைப் பெற்ற பிறகு அவர்கள் திருப்தியடைந்து மகிழ்ச்சியாக செல்வார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது...
குலதெய்வ வழிபாடு செய்தல்
கோபத்தில் இருக்கும் முன்னோர்களை மகிழ்விக்க குலதெய்வத்தை வழிபட வேண்டும். அதன் பிறகு முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். இதனால் முன்னோர்கள் மகிழ்ச்சியடைந்து, தங்கள் குழந்தைகளை மனதார ஆசீர்வதிப்பார்கள்.
அன்னதானம் செய்தல்
பித்ரு தோஷத்திலிருந்து விடுதலை பெற, மகாளய அமாவாசை தினத்தில் அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானம் செய்வதன் மூலம் முன்னோர்கள் திருப்தி அடைந்து ஆசி வழங்குவார்கள்.. அவர்களின் மகிழ்ச்சி உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. .
பசு தானம்
கருட புராணத்தின் படி, அமாவாசை நாளில் முன்னோர்களை மகிழ்விக்க, அவர்களின் பெயரில் பசுவை தானம் செய்யலாம். பசுவை தானம் செய்வதன் மூலம் முன்னோர்கள் வைதரணி நதியைக் கடக்கிறார்கள். அவர்கள் துன்பத்திலிருந்து விடுபடுகிறார்கள்.
இந்த ஆண்டு மஹாளய பட்சம் அமாவாசை அக்டோபர் 2 ஆம் தேதி புதன்கிழமை வருகிரது.. இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமும் அன்றுதான் நிகழும்.
சர்வ பித்ரு அமாவாசை திதி ஆரம்பம்: அக்டோபர் 1, செவ்வாய், இரவு 9:39 மணிக்கு,
அமாவாசை திதி முடிவு: அக்டோபர் 2, புதன், மதியம் 12:18 மணிக்கு
சர்வார்த்த சித்தி யோகம்: அக்டோபர் 3, மதியம் 12:23 மாலை 6:15 மணிக்கு
ஷ்ரத்தா நேரம்: காலை 11:30 முதல் மாலை 03:30 வரை



Click it and Unblock the Notifications