Latest Updates
-
ஜூலை 24-ல் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: இந்த 3 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது.. -
Aadi Month Horoscope 2026:ஆடி மாதம் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் அதிசயம் நடக்கும் மாதமாக இருக்கப்போகுதாம் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் செட்டிநாடு மஞ்சள் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப சுய ஒழுக்கமுள்ளவர்களாம் - வெற்றியும், செல்வமும் இவர்களை தேடிவருமாம் - உங்க ராசி என்ன -
Aadi 2026: ஆடி முதல் நாளில் அம்மன் வழிபாடு செய்வது எப்படி? - விளக்கும் தேச மங்கையர்கரசி! -
முகலாயர்களும், ஆங்கிலேயர்களும் நேபாளத்தின் மீது படையெடுக்க ஏன் பயந்தார்கள் தெரியுமா? -
பொலிவான முகம் வேண்டுமா? அப்ப மஞ்சளை இப்படி யூஸ் பண்ணுங்க... -
இந்தியாவில் நாம் பயன்படுத்தும் இந்த எண்ணெய் அமெரிக்காவில் தடைசெய்யப்பட்டதாம் - காரணம் என்ன தெரியுமா? -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் ஆடி கும்மாயம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
ராகு-கேதுவின் அரிய கிரக சேர்க்கை இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணக்கஷ்டத்தை கொடுக்கப்போகுதாம் - உங்க ராசி என்ன?
300 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரி நாளில் உருவாகும் அரிய யோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்!
Maha Shivratri 2024: இந்து மதத்தில் மகா சிவராத்திரி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். இந்நாளானது சிவபெருமானுக்கு உரிய நாள். இந்நாளில் சிவனை நினைத்து விரதமிருந்து இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை வணங்கினால், சிவனின் பரிபூர்ண அருளைப் பெறுவதோடு, அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைப்பதுடன், வாழ்வில் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும்.
பொதுவாக மகா சிவராத்திரி நாளானது மாசி மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்ததசி திதியில் வரும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 08 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. ஜோதிடத்தின் படி, இந்நாளில் மிகவும் அரிதான மற்றும் சிறப்பு வாய்ந்த யோகம் உருவாகிறது.

அதுவும் இந்த யோகமானது சுமார் 300 ஆண்டுகளுக்கு பின் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் சிவனின் சிறப்பான ஆசியைப் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
300 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரியில் உருவாகும் அரிதான யோகங்கள்
இந்து நாட்காட்டியின் படி, மகா சிவராத்திரி நாளன்று அதிகாலை 4.45 மணி முதல் அந்நாள் முழுவதும் சிவ யோகம் நீடித்திருக்கும். அத்துடன் காலை 6.45 மணிக்கு சர்வார்த்த சித்தி யோகம் தொடங்கி, 10.41 மணி வரை தொடரும். சுமார் 300 ஆண்டுகளுக்கு பின் இவ்விரு யோகங்களும் மகா சிவராத்திரி நாளில் நிகழவுள்ளது.
மேலும் இந்நாளில் கிரகங்களின் நிலைகள் என்று பார்த்தால், மகர ராசியில் செவ்வாய் மற்றும் சந்திரன் இணைந்து சந்திர மங்கள யோகம் உருவாகிறது. மேலும் கும்ப ராசியில் சனி, சூரியன், சுக்கிரன் இணைந்து திரிகிரக யோகமும், மீன ராசியில் புதன், ராகு சேர்க்கையும் உருவாகும். இப்படியான கிரகங்களின் நிலைகளால் சில ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானின் ஆசியைப் பெறுவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் நிறைவேறும். நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்தையும், பதவி உயர்வையும் பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும். கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். உங்களின் தலைமைப்பண்புகள் மேம்படும். தொழிலில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் மகா சிவராத்திரி நாளில் உருவாகும் சிறப்பு யோகத்தால் சிவனின் ஆசீர்வாதத்தைப் பெறுவார்கள். தொழிலைப் பொறுத்தவரை, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெற வாய்ப்புள்ளது. இந்த ஒப்பந்தத்தால் எதிர்காலத்தில் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். உறவினர்களால் பல நன்மைகளைப் பெறுவீர்கள். சிவனின் அருளால் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக தொடங்கி முடிவடையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களும் சிவபெருமானின் பரிபூர்ண ஆசியை மகா சிவராத்திரி நாளில் பெறுவார்கள். மேலும் சிவனின் அருளால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்களையும் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. கடனில் சிக்கி தவித்துக் கொண்டிருந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். புதிய வாகனம், வீடு, சொத்து வாங்கும் ஆசை நிறைவேறும் வாய்ப்புள்ளது. சிவன் மற்றும் பார்வதி தேவியின் அருளால் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications