லோக்சபா தேர்தல் 2024: இதுவரை இந்திய பிரதமர்களாக இருந்தவர்கள் யார் யார்? அவர்களின் பதவிக்காலம் என்ன?

Lok Sabha Elections 2024: லோக்சபா தேர்தல் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தல் ஆகும். இந்திய நாட்டின் பிரதமரை நிர்ணயிக்கும் இந்த தேர்தலானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2024-ல் வரும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை நம் இந்திய நாட்டில் ஏராளமான இந்தியப் பிரதமர்கள் பதிவி வகித்துள்ளனர். அவர்கள் எவ்வளவு ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்தார்கள் என்று தெரியுமா?. ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தியில் தொடங்கி இன்றைய பிரதமர் மோடி வரை அவர்களின் பதவிக்காலம் என்ன, அவர்களின் பொறுப்புகள் என்ன என்பதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.

Lok Sabha Elections 2024 List Of All Indian Prime Ministers And Their Duration In Tamil

சுதந்திர இந்தியா

நம் சுதந்திர இந்தியாவில் அஸ்திவாரத்தை படைத்தவர்கள் ஏராளம். நம் நாட்டை சிக்கல்களில் இருந்து காப்பாற்றி தொலைநோக்கு பார்வையில் வழி நடத்திய தலைவர்கள் ஏராளம். அப்படிப்பட்ட மாபெரும் தலைவர்கள் நம் நாட்டின் இந்தியப் பிரதமராக இருந்து பணியாற்றிய காலம் குறித்தும், அவர்களின் சிறப்பான ஆட்சி குறித்தும் இங்கே அறிந்து கொள்வோம்.

ஜவஹர்லால் நேரு (1947-1964)

பண்டிட் ஜவஹர்லால் நேரு என பெருமையுடன் அழைக்கப்பட்டவர் பிரதமர் நேரு ஆவார். இவர் தான் நம் நாட்டின் முதல் இந்தியப் பிரதமர் ஆவார். இவர் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் நம் இந்தியாவை ஆட்சி செய்துள்ளார். 1947 இல் சுதந்திரம் பெற்றதிலிருந்து 1964 இல் அவர் இறக்கும் வரை நேரு பிரதமராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேரு அவர்கள் நவீன இந்தியாவின் அடித்தளத்தை வடிவமைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சோசலிசம் ஆகியவற்றைப் போற்றுதல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்களின் துவக்கம், திட்டக் கமிஷன் மற்றும் ஐ.ஐ.டி போன்ற முக்கிய நிறுவனங்களை கட்டியெழுப்பியதில் நேருவின் பங்கு முக்கியமானது.

குல்சாரிலால் நந்தா (1964, 1966)

1964 ஆம் ஆண்டில் 13 நாட்களும் மற்றும் 1966 இல் 13 நாட்களும் ஜவஹர்லால் நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரியின் மரணத்தைத் தொடர்ந்து குல்சாரிலால் நந்தா இரண்டு சந்தர்ப்பங்களில் இந்தியாவின் தற்காலிகப் பிரதமராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் குறுகிய காலமே பணியாற்றினாலும் கூட அவரின் முயற்சிகள் போற்றுதலுக்குரியது. தற்காலிகமாக நாட்டை பேணுவதில் சிறந்து விளங்கினார்.

லால் பகதூர் சாஸ்திரி (1964-1966)

லால் பகதூர் சாஸ்திரி அவர்கள் ஜவஹர்லால் நேருவிற்கு பிறகு பிரதமரானார். கிட்டத்தட்ட 1 வருடங்கள் ஏழு மாதம் பணியாற்றி உள்ளார். 1965 இன் இந்திய-பாகிஸ்தான் போரின் போது அவரது தலைமை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. ஜெய் ஜவான் ஜெய் கிசான் என்ற முழக்கம் மக்களிடையே தேசப்பற்றை விதைத்தது. இந்திய தலைமுறைக்கு தேசத்தின் உணர்வை தூண்டியது.

இந்திரா காந்தி (1966-1977, 1980-1984)

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்பதற்கிணங்க ஜவஹர்லால் நேருவின் மகளான இந்திரா காந்தி அவர்கள் நம் நாட்டை 1966-1977 மற்றும் 1980-1984 என்ற குறுகிய காலத்தில் நம் நாட்டின் பிரதமராக பணியாற்றினார். வங்கிகளின் தேசியமயமாக்கல் மற்றும் பசுமைப் புரட்சி போன்ற குறிப்பிடத்தக்க சாதனைகள் இவர் பெயரை சொல்லும். எமர்ஜென்சிக்குப் பிறகு 1977 தேர்தலில் தோல்வியடைந்த இந்திரா காந்தி அடுத்த நான்கு மாதங்களுக்குள் தோல்வியிலிருந்து மீண்டு சாதனை படைத்தார்.

மொரார்ஜி தேசாய் (1977-1979)

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்த மொரார்ஜி தேசாய் 2 ஆண்டுகள் இந்தியப் பிரதமராக பணியாற்றினார். இந்திரா காந்தியால் விதிக்கப்பட்ட அவசரநிலைக்குப் பிறகு சிவில் உரிமைகள் மற்றும் ஜனநாயக விதிமுறைகளை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சரண் சிங் (1979-1980)

சரண் சிங் ஆறு மாதங்கள் இந்தியாவின் பிரதமராக சிறிது காலம் பணியாற்றினார். ஒரு கூட்டணி அரசாங்கத்தையே வழிநடத்தினார்.

ராஜீவ் காந்தி (1984-1989)

இந்திரா காந்தி இறந்த பிறகு அவரது மகனான ராஜீவ் காந்தி இந்தியாவின் பிரதமராக 5 ஆண்டுகள் பணியாற்றினார். இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தை நவீனமயமாக்குதலில் அவரின் பங்கு முக்கியமானது.

விஸ்வநாத் பிரதாப் சிங் (1989-1990)

விஸ்வநாத் பிரதாப் சிங் 11 மாதங்கள் இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார். மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை இவர் எடுத்தார்.

சந்திர சேகர் (1990-1991)

சந்திர சேகர் 8 மாதங்கள் இந்தியப் பிரதமராக பணியாற்றினார். பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் நிறைய விஷயங்களை சாதித்து காட்டினார்.

பி.வி. நரசிம்ம ராவ் (1991-1996)

பி. வி நரசிம்ம ராவ் 5 ஆண்டுகள் இந்தியப் பிரதமராக பணியாற்றினார். பொருளாதார சீர்திருத்தங்களை சரியாக வழி நடத்தினார். இது இந்தியா ஒரு உலகளாவிய பொருளாதார சக்தியாக வெளிப்படுவதற்கு வழி வகுத்தது.

அடல் பிஹாரி வாஜ்பாய் (1996, 1998-2004)

அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள் 1996 இல் 13 நாட்கள் மற்றும் 6 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார். இந்தியாவின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், அண்டை நாடுகளுடன் அமைதியை மேம்படுத்துதல் மற்றும் இந்தியாவின் உலகளாவிய அந்தஸ்தை மேம்படுத்துதல் போன்ற முயற்சிகளில் இவர் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்மோகன் சிங் (2004-2014)

மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக பணியாற்றினார். இந்தியாவின் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதிலும், இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றுவதிலும் மிக முக்கியமான பங்கு வகித்தார்.

நரேந்திர மோடி (2014-தற்போது)

2014ல் பதவியேற்ற நரேந்திர மோடி இன்று வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றி வருகிறார். பொருளாதார மேம்பாடு, உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத் திட்டங்களில் கவனம் செலுத்தினார். மேலும் இந்தியாவை டிஜிட்டல் இந்தியாவாக மாற்றினார்.

Desktop Bottom Promotion