Latest Updates
-
ஆடிப்பூரம் ஸ்பெஷல் அவல் பால் பொங்கல் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடுப்பி ஸ்டைல் வெண்டைக்காய் பொரியல் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
Independence Day 2026: இந்த ஆண்டு இந்தியா கொண்டாடுவது 79-வது சுதந்திர தினமா? 80-வது சுதந்திர தினமா? -
பீர் பாட்டில் ஏன் எப்போதும் பச்சை அல்லது ப்ரவுன் நிறத்தில் மட்டுமே உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதம் இந்த 4 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
1/4 கப் கம்பு இருந்தா, காலையில் இப்படி ஒருடைம் செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 14 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நரகத்தின் கதவு திறக்கப்போகுதாம் -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கஷ்டங்கள் முடிவுக்கு வரப்போகுது! -
புதன்-சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண யோகம்: இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
10 நிமிசத்தில் செய்யும் லெமன் அவல் உப்புமா ரெசிபி - செஞ்சு பாருங்க - சூப்பரா, ஆரோக்கியமா இருக்கும்
5 வயதில் ஆண் குழந்தையை பெற்றெடுத்த அதிசய குழந்தை - இந்த கொடுமையான கதை தெரிஞ்சா அழுதுடுவீங்க...
இவ்வுலகில் பெண் குழந்தையாக பிறந்த ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்நாளில் தாய்மை என்னும் கட்டத்தை நிச்சயம் அடைவார்கள். ஆனால் அது குழந்தை பருவம் மற்றும் பதின் பருவத்தை அனுபவித்த பின்னர் தான். தாய்மை நிலை என்பது ஒரு பெண் கருவை சுமந்து, ஒரு புதிய உயிரை கொண்டு வந்து, புதிய வாழ்க்கையை வாழ தயாராக இருப்பதைக் குறிக்கிறது.
பொதுவாக 18 வயதை அடைந்த பின் இந்த கட்டத்தை ஒரு பெண் அடையக்கூடும். ஆனால் இப்படிப்பட்ட தாய்மையை ஒரு பெண் தனது 5 வயதில் அடைந்தால் எப்படி இருக்கும்? அதெல்லாம் சாத்தியம் இல்லை என்று நீங்கள் கூறலாம். ஆனால் மருத்துவ வரலாற்றில் 5 வயதில் ஒரு குழந்தையே ஒரு குழந்தையை பெற்றெடுத்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

என்ன நம்ப முடியவில்லையா? ஆம், இது உண்மை தான். இப்படிப்பட்ட ஒரு சம்பவம் பெருவில் உள்ள லீனா மதீனா என்னும் குழந்தைக்கு நடந்துள்ளது. அந்த குழந்தையைப் பற்றிய கதை தான் இப்போது பார்க்கப் போகிறோம்.
லீனா மதீனா
லீனா மதீனா, திபுரெலோ மெடினா மற்றும் விக்டோரியா லோசியா ஆகியோருக்கு 9 ஆவது குழந்தையாக 1933 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி பெருவின் டிக்ராபோ என்னும் கிராமத்தில் பிறந்தார். இந்த கிராமமானது 7,400 அடி உயரத்தில் அமைந்துள்ள ஒரு ஏழ்மையான பகுதியாகும்.
லீனா மதீனாவுக்கு முதன்முதலாக இரண்டரை வயதில் முதல் மாதவிடாய் ஏற்பட்டது. மற்றபடி இவர் மற்ற குழந்தைகளைப் போன்றே சாதாரணமாகவே இருந்துள்ளார். ஆனால் 5 வயதாகும் போது லீனாவின் வயிறு மட்டும் பெரிதாவதை, அவளது பெற்றோர் கவனித்து, லீனாவை உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் எந்த சிகிச்சையும் அளிக்கப்படவில்லை. ஏனெனில் அப்போது காரணமறிய நவீன வசதிகள் எதுவும் இல்லை.
வயிறு பெரிதாவதற்கு கட்டி காரணமாக இருக்குமோ என்று நினைத்ததோடு, தானாக சரியாகிவிடும் என்றும் நம்பினர். ஆனால் தொடர்ந்து வயிறு பெரிதாகிக் கொண்டே இருந்ததால், அவளது பெற்றோர் அதிக கவலைக்குள்ளாகி, லீனாவை பெருவில் உள்ள பிஸ்கோவில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது தான் அவளது பெற்றோருக்கு அதிர்ச்சிகரமான செய்தி தெரிய வந்தது. அது லீனா கர்ப்பமாக இருப்பதோடு, ஏழாவது மாதத்தில் இருப்பதையும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அந்த மருத்துவமனையில் இருந்த டாக்டர் ஜெரார்டோ லோசாடா, லீனாவிற்கு முழுமையாக வளர்ச்சியடைந்த பாலூட்டி சுரப்பிகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புக்கள் இருப்பதை கண்டறிந்தார். லீனாவின் பெற்றோரிடம் இதுக்குறித்து மருத்துவர் விசாரிக்கையில், மதீனாவிற்கு 2 1/2 வயதில் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. இச்செய்தியை அறிந்து மருத்துவர்கள் திகைத்துப் போயினர்.
பின் லீனாவின் கர்ப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்த ஹார்மோன் மற்றும் பல்வேறு சோதனைகளை நடத்தினர். சோதனையிலும் அது உறுதி செய்யப்பட்டது. 5 வயது குழந்தை எப்படி கர்ப்பமாகியிருக்கக்கூடும் என்று மருத்துவர்கள் குழப்பமடைந்தனர். பின் டாக்டர் ஜெரார்டோ லீனாவை லிமாவில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றி, லீனாவை தொடர்ந்து கண்காணித்து வந்தார்.
லிமா மருத்துவமனைக்கு மாற்றிய 1 1/2 மாதத்தில், லீனா மதீனாவிற்கு 1939 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஜெரார்டோ என்று லீனாவிற்கு சிகிச்சை அளித்த மருத்துவரின் பெயரிடப்பட்டது.
லீனா மதீனா எப்படி கர்ப்பமானார்?
என்ன தான் குழந்தை பிறந்துவிட்டாலும், லீனா எப்படி கருத்தரித்தாள் என்ற கேள்வி இருந்து கொண்டே இருந்தது. எவ்வளவு கேட்டாலும் மதீனா தனது குழந்தையின் தந்தையையோ அல்லது அவள் கருவுற்றதைச் சுற்றியுள்ள சூழ்நிலைகளையோ ஒருபோதும் வெளிப்படுத்தவில்லை. இருப்பினும் சந்தேகமானது அவளது தந்தையின் மேல் எழுந்தது.
இதனால் லீனாவின் தந்தை கற்பழிப்பு மற்றும் பாலுறவு பற்றிய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். இருப்பினும், ஆதாரம் எதுவும் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். லீனாவால் பெற்றெடுக்கப்பட்ட ஜெரார்டோ 1979 ஆம் ஆண்டில் 40 வயதில் காலமானார். லீனா மதீனா டாக்டர் ஜெரார்டோ லோசாடோவின் செயலாளராக பணியாற்றினார். பின்பு அவர் ரவுல் ஜுராடோவை மணந்து 1972 இல் தனது இரண்டாவது மகனைப் பெற்றெடுத்தார்.
Image Courtesy: Wikimedia Commons



Click it and Unblock the Notifications