Latest Updates
-
குரு-சூரிய சேர்க்கையால் உருவான மகாலட்சுமி ராஜயோகம்: ஆடியில் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியும்! -
புதன்-செவ்வாய் உருவாக்கும் தசாங்க யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சப்பாத்திக்கு ஏற்ற காளான் பன்னீர் கடாய் மசாலா - சிம்பிளா எப்படி செய்யணும்? -
ஆடி மாதம் இந்த 3 ராசிகளுக்கு ஆபத்துகளும், நஷ்டமும் நிறைந்த மாதமாக இருக்கப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 5 ராசிக்காரர்களுக்கு எதிரிகள் அதிகமா இருப்பாங்களாம்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உடுப்பி ஸ்டைல் முள்ளங்கி ஸ்டைல் சட்னி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட்டா ஆரோக்கியமா இருக்கும் -
குதிகால் வெடிப்பு அதிகமாக உள்ளதா? அதை போக்க இந்த வழிகளை ட்ரை பண்ணுங்க... -
இந்த 3 நபர்கள் ஒருவர் வாழ்க்கையில் இருந்தால் அவர்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் - சாணக்கிய தந்திரம் -
சுக்கிரன் மீது விழும் ராகுவின் பார்வையால் ஆடி மாதத்தில் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிக்காரர்கள்! -
ஜூலை கடைசியில் நடக்கும் சனி-புதன் பெயர்ச்சியால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன?
உங்க சமையலறையில் இருக்கும் இந்த மசாலாவை இப்படி யூஸ் பண்ணா... பணம் மழை கொட்டுமாம் தெரியுமா?
இந்து நம்பிக்கைகளின்படி, கிராம்பு பாரம்பரியமாக பல சடங்குகள், பண்டிகைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இந்த மசாலாவைப் பயன்படுத்துவது தீய கண்ணின் தீமைகளைத் தடுக்கும் மற்றும் நேர்மறை ஒளியை அதிகரிக்கும் என்று நம்பப்பட்டது.
நாம் என்ன தான் பல முயற்சிகளை செய்தாலும் கடின உழைப்பை போட்டாலும், நல்ல விஷயங்கள் மற்றும் முன்னேற்றங்கள் நம் வாழ்க்கையில் நடப்பதில்லை. அதற்கு அதிர்ஷ்டமும் நமக்கு கூடி வரவேண்டும். அதிர்ஷ்டம் இல்லாததால், பல விஷயங்கள் நம் கையைவிட்டு சென்றிருக்கும். அதிஷ்டத்தை பெற நாம் சில விஷயங்களை செய்ய வேண்டியிருக்கும். வழிபடுவது முதல் சடங்குகளைக் கடைப்பிடிப்பது வரை ஒவ்வொரு சிறிய பரிகாரத்தையும் பின்பற்றி நல்ல அதிர்ஷ்டத்தை பெறலாம். பெரும்பாலான மக்கள் செழிப்பையும் மகிழ்ச்சியையும் ஈர்க்க எதையும் முயற்சி செய்கிறார்கள்.

ஆனால் உங்கள் அதிர்ஷ்டத்தை மீண்டும் பெறுவதற்கான தீர்வு உங்கள் சமையலறை அலமாரியில் உள்ளது என்று நாங்கள் உங்களுக்குச் சொல்கிறோம்? அந்த பழமையான இந்திய மசாலா எது என்பதையும், பாரம்பரியமாக நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.

நல்ல அதிர்ஷ்ட மசாலாவின் தனித்தன்மை என்ன?
ஹிந்தியில் லாங் என்று அழைக்கப்படும் கிராம்பு ஒரு அத்தியாவசிய சமையலறை மசாலா ஆகும். இது வழக்கமான இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் மிகச்சிறந்த மசாலா ஆகும். அதுமட்டுமின்றி, இந்த எளிய மசாலா பல வீட்டு வைத்தியம், மருந்துகள், பல் மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளில் அதன் சக்திவாய்ந்த ஆரோக்கிய நலன்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த சிறிய மசாலா உண்மையில் உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கவும் நிதி வருவாயை கொண்டு வரவும் உதவுகிறது. அது எப்படி மற்றும் ஏன் என்று இங்கே தெரிந்துகொள்ளலாம்.

பாரம்பரியமாக கிராம்பு எவ்வாறு பயன்படுத்தப்பட்டது?
இந்து நம்பிக்கைகளின்படி, கிராம்பு பாரம்பரியமாக பல சடங்குகள், பண்டிகைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இந்த மசாலாவைப் பயன்படுத்துவது தீய கண்ணின் தீமைகளைத் தடுக்கும் மற்றும் நேர்மறை ஒளியை அதிகரிக்கும் என்று நம்பப்பட்டது. நவராத்திரியின் போது துர்கா தேவிக்கு ஒரு ஜோடி கிராம்புகளை பிரசாதமாக வழங்கி படைப்பது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் வெற்றியையும் தருவதாக நம்பப்படுகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளில் இந்த சமையலறை மசாலாவைப் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சில எளிய வழிகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கிராம்பை மெல்லுவது
நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு முக்கியமான விவாதத்திற்கு உட்கார்ந்திருக்கும்போதோ அல்லது ஒரு வணிக ஒப்பந்தத்தை முடிக்கும்போதோ அல்லது ஏதேனும் ஒரு நல்ல வேலைக்குச் செல்லும்போதோ கிராம்பை மென்று சாப்பிடுவது வெற்றியையும் செழிப்பையும் உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது.

செல்வத்தை ஈர்க்கும்
லக்ஷ்மி தேவியை வழிபடும் போது, தினமும் சிவப்பு ரோஜாக்கள் மற்றும் இரண்டு கிராம்புகளை வைத்து வழிப்பட்டால், அதிர்ஷ்டம் மற்றும் பணத்தை ஈர்க்கும் என்று கூறப்படுகிறது. இதை தினமும் பின்பற்ற முடியாத பட்சத்தில், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இதைச் செய்து பொருளாதார முன்னேற்றத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

வெளியேறும் முன்
வீட்டை விட்டு வெளியேறும் முன் உங்கள் வாயில் இரண்டு கிராம்பு காய்களை வைத்திருப்பது அன்றாட வாழ்வின் அனைத்து தடைகளையும் நீக்கும் என்று நம்பப்படுகிறது. ஆதலால், இனி நீங்கள் வெளியில் செல்லும்போது, இரண்டு கிராம்புகளை வாயில்போட்டு மென்றுகொண்டு செல்லுங்கள்.

கண் திருஷ்டியை அகற்றும்
சனிக்கிழமைகளில் மூன்று முதல் நான்கு கிராம்புகளை விளக்கெண்ணெய் தீபத்தில் ஏற்றி, வீட்டின் இருண்ட மூலைகளில் வைப்பதன் மூலம் கண் திருஷ்டி குறையும் அல்லது அகற்றப்படும். இந்த பரிகாரத்தை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களின் தாக்கத்தை நீக்கி, நேர்மறை ஆற்றலை பெறலாம்.



Click it and Unblock the Notifications