For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

130 வருடமாக தீர்க்க முடியாத ஒரு தொடர் கொலைகாரனை பற்றிய மர்மம்... சினிமாவை மிஞ்சும் சுவாரஸ்யம்...!

|

இந்த உலகம் தோன்றிய காலம் முதலே நம்மை சுற்றி மர்மங்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. எவ்வளவு பெரிய மர்மமாக இருந்தாலும் எப்டியாவது ஒரு சமயத்தில் வெளிப்பட்டுவிடும். ஆனால் இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளது. அப்படி விதிவிலக்காக இன்றுவரை நீடித்திருக்கும் ஒரு மர்மம் என்றால் அது உலகையே அச்சுறுத்திய விக்டோரிய தொடர் கொலையாளி ஜாக் தி ரிப்பரை பற்றியதுதான்.

Interesting Facts About Jack the Ripper

1888 முதல் 1891 வரை பல தொடர்கொலைகளில் ஈடுபட்ட ஜாக் ரிப்பரின் உண்மையான அடையாளம் இன்றுவரை கண்டறியப்படவில்லை. ஜாக் ரிப்பரைப் பற்றிய பல யூகங்கள் இதுவரை கூறப்பட்டாலும் அதில் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. உலக வரலாற்றில் மிகவும் மோசமான அதேசமயம் இறுதிவரை கண்டுபிடிக்க முடியாமல் போன தொடர் கொலைகாரன் என்றால் அது ஜாக் ரிப்பர்தான். இந்த பதிவில் ஜாக் ரிப்பரைப் பற்றிய சில உண்மைகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கொலை செய்யப்பட்ட ஐந்து நபர்கள்

கொலை செய்யப்பட்ட ஐந்து நபர்கள்

ஜாக் தி ரிப்பரின் காலத்தில், விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் ஒரு அகால முடிவை சந்திப்பது வழக்கமானதல்ல. அப்போது நடைபெற்ற 11 கொலைகளைப் பற்றி போலீஸ் விசாரிக்கத் தொடங்கியபோது அதில் 5 விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்களின் கொலைகள் ஒரே மாதிரியானதாக இருந்தது. இந்த அடையாளங்கள் ஜாக் தி ரிப்பரின் அடையாளங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட 5 பேரும் ‘தி கேனனிகல் ஃபைவ்' என்று அறியப்பட்டனர். ஒரு பயங்கரமான முடிவை சந்தித்து, அவர்களின் உடல்கள் கிழிக்கப்பட்டு, அவர்களின் உடல் உறுப்புகள் அறுவைசிகிச்சை முறையில் வெளியே எடுக்கப்பட்டிருந்தன.

திடீரென நிறுத்தப்பட்ட கொலைகள்

திடீரென நிறுத்தப்பட்ட கொலைகள்

இன்றுவரை துப்பறியும் நபர்களைக் குழப்பிய ஒரு விஷயம் என்னவென்றால், திடீரென கொலைகள் எவ்வாறு நிறுத்தப்பட்டன என்பதுதான். இறுதியாக கொல்லப்பட்ட மேரி கெல்லியின் கொடூரமான கொலைக்குப் பிறகு ஜாக் தி ரிப்பர் தனது கொடூர எண்ணத்தை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்ததாகத் தெரிகிறது. அவர் ஏன் அதை நிறுத்தினார் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் அவர் இறந்தார், மற்றொரு குற்றத்திற்காக நாடு கடத்தப்பட்டார் போன்ற பல கட்டுக்கதைகள் உள்ளன.

மன நோய்

மன நோய்

ஒப்பீட்டளவில் விவேகமான கொலையாளி என்பதை விட, நவீன உளவியலாளர்கள் ஜாக் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்புகிறார்கள். அவருக்கு இருந்த கோளாறு என்னவென்பது சரியாக கண்டறியப்படாவிட்டாலும், அவர் பெண்கள் மீது குறிப்பாக விபச்சாரம் செய்த பெண்கள் மீது வெறுப்பில் இருந்தது தெளிவாகத் தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்களின் முகங்களை அவர் சிதைத்தது மரணத்தில் கூட அவர்களை அவமானப்படுத்தவும் அவர்களின் அடையாளத்தை பறிக்கவும் அவர் விரும்பியது தெரிகிறது.

MOST READ: வெறும் பூண்டை கொண்டு உங்கள் வீட்டில் இருக்கும் தீயசக்திகளை எப்படி விரட்டலாம் தெரியுமா?

 ஜாக் ரிப்பரின் கடிதம்

ஜாக் ரிப்பரின் கடிதம்

செப்டம்பர் 1888 இல், கொலைகள் உச்சத்தில் இருந்தபோது, சென்ட்ரல் நியூஸ் ஏஜென்சி நிறுவனத்திற்கு ஜாக் தி ரிப்பரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. காவல்துறையை கேவலப்படுத்த ரிப்பர் அனுப்பிய மூன்று கடிதங்களில் இதுவே முதல் கடிதமாகும். இது ‘Dear Boss' கடிதம் என்று அழைக்கப்படுகிறது. அந்த கடிதத்தில் அவர் ஜாக் தி ரிப்பர் என்று கையெப்பமிட்டிருந்தார். காவல்துறையினரை அவமானப்படுத்தியதுடன் அந்த கடிதத்தில் அடுத்து கொலை செய்ய போகிற பெண்ணுடைய காதை வெட்டப்போவதாக குறிப்பிட்டிருந்தார், அவர் சொன்னபடியே நடந்தது.

குறிப்பட்ட நேரத்தில் மட்டுமே கொலை செய்தார்

குறிப்பட்ட நேரத்தில் மட்டுமே கொலை செய்தார்

ஆச்சரியமூட்டும் வகையில் தொடர் கொலையாளிகள் தாங்கள் கொலை செய்வதை ரசித்து செய்கின்றனர். சில கொலைகளுக்குப் பிறகு அவர் வாரத்தின் இறுதி நாட்களிலும், அதிகாலையிலும் மட்டும்தான் கொலை செய்கிறார் என்று காவல் துறையினர் கண்டறிந்தனர். இதன் மூலம் அவருக்கு வாரம் முழுவதும் செய்ய ஒரு வேலை இருந்ததாக கூறப்பட்டது. திருமணமான ஒருவர் அதிகாலையில் வெளியே செல்வது கடினம்என்பதால் அவர் திருமணம் ஆகாதவராக இருக்க வேண்டும் என்று அனுமானிக்கப்பட்டது.

ஆதாரம் இல்லை

ஆதாரம் இல்லை

ஜாக் ரிப்பர் வீதிகளில் நடமாடிக் கொண்டிருந்த போது காவல்துறையின் விசாரணைகள் ஆரம்பக்கட்டத்தில் இருந்தது. இதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் ஒரு விஷயம் என்னவென்றால் அவர் எந்த ஆதாரத்தையும் விட்டுவைக்கவில்லை, கொலையை பார்த்த சாட்சிகளும் யார் இல்லை. வைட் சேப்பல் போன்ற ஒரு பரபரப்பான இடத்தில் யாரும் கவனிக்காத வண்ணம் குற்றம் செய்வது என்பது இயலாத காரியமாகும், ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படித்தான் நடந்தது.

MOST READ:நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகள் உங்களுக்கே தெரியாமல் உங்களின் காம உணர்வைத் தூண்டுமாம் தெரியுமா?

இரட்டை சம்பவங்கள்

இரட்டை சம்பவங்கள்

கொலைகளின் பொதுவான விவரங்களை பெரும்பாலான மக்கள் அறிந்திருந்தார்கள், ஆனால் ஜாக் ரிப்பரைப் பற்றி பலருக்குத் தெரியாது. செப்டம்பர் 30 அன்று அன்னி சாப்மேன் கொலை செய்யப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு, ரிப்பர் ஒரே இரவில் இரண்டு கொலைகளை செய்தார், முதலில் எலிசபெத் ஸ்ட்ரைட்டை படுகொலை செய்து பின்னர் அவர் கேத்தரின் எடோவ்ஸ் என்ற பெண்ணை கொலை செய்தார். அந்த இரவில் ஒரு மணி நேர இடைவெளியில் இரு பெண்களும் கொல்லப்பட்டனர்.

அவர் வைட் சேப்பலில் வசித்தார்

அவர் வைட் சேப்பலில் வசித்தார்

அவர் கொலை செய்த பகுதியை மிகவும் திறமையாகவும், மறைமுகமாகவும் கடந்து செல்வதற்கு, ஜாக் வைட் சேப்பலை நன்கு அறிந்திருக்க வேண்டும் என்று கோட்பாடு கூறுகிறது. இது அவர் வாழ்ந்ததாகவும், வைட் சேப்பலில் பணிபுரிந்ததாகவும் பலரும் நம்புவதற்கு வழிவகுத்தது. இந்த அறிவு அநேகமாக அறியப்படாத அனைத்து வழிகளையும், பாதைகளையும் சுற்றிலும் நகர்த்தவும், அவரது குற்றம் நடத்தப்பட்ட இடத்தை விட்டு வெளியேறவும் பயன்படுத்துவதில் அவருக்கு உதவியாக இருந்திருக்கும்.

 பெண்ணாக இருக்கலாம்

பெண்ணாக இருக்கலாம்

ஆமாம், இது உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது, இந்த கொலையாளியைப் பற்றிய மிக அசாதாரண உண்மை என்னவென்றால், அவர் ‘ஜாக்' ஆக இருந்திருக்க மாட்டார். கொலைகளின் போது முன்னணி புலனாய்வு இன்ஸ்பெக்டர் ஃபிரடெரிக் அபெர்லைன், மேரி கெல்லி கொலைக்குப் பின்னர் இந்த யோசனையை கூறினார். எல்லாவற்றிற்கும் மேலாக, யாரும் ஒரு பெண்ணைத் தேட வாய்ப்பில்லை என்பதால் இந்த தந்திரத்தை கையாண்டிருக்க வாய்ப்புள்ளது. ஆண் போர்வையில் கொலை செய்யும் பெண்ணை காவல்துறையினரும், பொதுமக்களும் கண்டறிய வாய்ப்பில்லை.

MOST READ: உங்க ராசிப்படி எந்த மாசத்துல கல்யாணம் பண்ணுனா உங்க திருமண வாழ்க்கை சூப்பரா இருக்கும் தெரியுமா?

நூற்றாண்டு கால மர்மம்

நூற்றாண்டு கால மர்மம்

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மர்மக் கொலைகாரரான ஜாக் தி ரிப்பர் 1888 மற்றும் 1891 க்கு இடையில் ஐந்து கொடூரமான கொலைகளைச் செய்தார், அதன் பிறகு அவர் காணாமல் போனார். அப்போதிருந்து அவரைப் பற்றிய எந்த தடயமும் உலகிற்குத் தெரியவில்லை. ட்ரெவர் மேரியட் என்ற புலனாய்வு அதிகாரி 11 ஆண்டுகள் இந்த வழக்கை விசாரித்தார், ஆனால் இறுதிவரை அவரால் எதையும் கண்டறிய முடியவில்லை. கிட்டதட்ட 130 ஆண்டுகளாக இந்த மர்மம் இன்றும் நீடிக்கிறது. இன்றுவரை அவரைப் பற்றிய எந்த தகவலும் இல்லை. 2006 ஆம் ஆண்டு ஜாக் ரிப்பரின் கற்பனை புகைப்படம் வெளியிடப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Interesting Facts About Jack the Ripper

Find out the most interesting facts about Jack the Ripper, one of the most mysterious killers throughout history.
Story first published: Monday, March 16, 2020, 17:43 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more