For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உசுப்பேத்தினா உம்முனும் கடுப்பேத்தினா கம்முனும் இருங்கனு சொன்னது ஏன்னு தெரியுமா?

|

தனது பேனாவை மீண்டும் மீண்டும் ஒருவர் சொடுக்குவது உங்களை தொந்தரவு செய்கிறதா? தனது ஆண் நண்பன் அல்லது காதலனைப் பற்றி பெருமையடித்து அதைப் பற்றி தொடர்ந்து பேசும் உங்கள் தோழி, உங்கள் நரம்புகளைப் புடைக்க வைக்கிறாரா? அக்கணங்களில் ஒரு நிமிடம் உங்கள் கோபத்தை / எரிச்சலை நிறுத்தி யோசிங்க என நாங்கள் உங்களிடம் கேட்டால்?

How To Deal With People Who Annoy You?

ஒரு நபராக அது உங்களுள் எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பதைப் பற்றி சிந்தியுங்கள். ஒவ்வொரு முறையும் உங்களை எரிச்சலூட்டும் ஒருவரை நீங்கள் சமாளிக்கும் போது நீங்கள் என்ன பாடம் கற்றுக் கொள்கிறீர்கள்? இது கனவாகத் தோன்றலாம். ஆனால் இதுபோன்ற அனுபவங்கள் அனைத்தும் ஒரு பாடத்தை உங்களுக்குத் தருகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
'எரிச்சலூட்டும் சூழ்நிலைகள்'

'எரிச்சலூட்டும் சூழ்நிலைகள்'

'எரிச்சலூட்டும் சூழ்நிலைகள்' என்று அழைக்கப்படுபவற்றில் நீங்கள் கண்களை உருட்டி அந்த நபரைக் குறை கூறினால், உங்கள் எண்ணங்களை மறு மதிப்பீடு செய்ய வேண்டியது அவசியம். உங்களில் சிறந்ததை வெளிப்படுத்தும் ஒருவரே, உதாரணமாக, நீங்கள் உலகுக்குக் காட்டாத (மிகவும் வெகுளியான உங்கள் முகம்) ஒரு முகத்தை வெளியே கொண்டு வரும் ஒரு நண்பர், உங்கள் தலைமுடியை இழுக்க விரும்பும் அதே நபராகவும் தன் ஆண் நண்பரைப் பற்றி பேசி உங்களை எரிச்சலூட்டுபவராகவும் இருக்கலாம்.

MOST READ: ஆபாசதளங்களில் வரும் அழகி குளித்த நீர் பாட்டில் நிரப்பி ஆண்களுக்கு மட்டும் விற்பனை... எங்க கிடைக்கும்

விரக்தி

விரக்தி

யாராவது உங்களைத் தொந்தரவு செய்ய முக்கிய காரணம் யார்?. ஆமாம், நீங்கள் நீங்களேதான். ஏனென்றால், இந்த விஷயங்களை நீங்கள் உங்களைத் தொந்தரவு செய்ய அனுமதிக்கிறீர்கள். எல்லா நேரத்திலும் சரியாக இருக்க வேண்டும் என்ற ஆசையே விரக்தியின் கதவைத் திறக்கிறது. உலகில் உள்ள அனைவருக்கும் உங்களைத் தொந்தரவு செய்யும் சக்தி எப்படி இருக்கிறது என்பதைப் பற்றி என்றாவது ஒரு நிமிடம் யோசித்திருக்கிறீர்களா?

உணர்ச்சிவசப்படுதல்

உணர்ச்சிவசப்படுதல்

உங்கள் வீட்டுச் சாவியை நீங்கள் வீட்டு வாசலுக்கு கீழே வைத்திருக்கிறீர்கள் என்பதை மூன்றவது நபர் எவ்வாறு ஊடுருவிக் கண்டுபிடிப்பார் என்பது போன்றது இது. இதேபோல், யாரையாவது உங்களைத் தொந்தரவு செய்ய அனுமதிக்கும் போது, ​​உங்கள் உணர்ச்சிகளிடம் திறவுகோலை ஒப்படைக்கிறீர்கள் என்று அர்த்தம் .

மன அழுத்தம்

மன அழுத்தம்

உங்கள் நாள், பிரகாசமான மற்றும் வண்ணமயமான நிலையில் இருந்து இருண்ட மற்றும் மங்கிய நிலைக்கு ஒரு நொடியில் செல்கிறது. நீங்கள் ஆசாரம் / ஒழுங்குமுறையின் ஒரு சுய-பிரகடனப்படுத்தப்பட்ட கடவுள் (அல்லது தெய்வம்) அல்லது எனக்கு எல்லாம் தெரியும் என்ற தலைப்பை மகிழ்ச்சியுடன் தழுவிக்கொண்டவர். உங்கள் விதிகளின்படி யாராவது விளையாடாதபோது மற்றும் அது உங்களைத் தொந்தரவு செய்யத் தொடங்கும்போது நீங்கள் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இங்கே உள்ளன.

1. உண்மை என்ன

1. உண்மை என்ன

ஒருவரின் மனதில் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினம் என்றாலும், எல்லோரும் தங்கள் சொந்தப் போரில் போராடுகிறார்கள் என்ற உண்மையை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். எல்லோரும் சிரமப்படுகிறார்கள். புல்லின் மறுபக்கம் எவ்வளவு பசுமையாக இருந்தாலும், அது எப்போதும் உண்மையாக இருக்காது. நகங்களைக் கடித்து எரிச்சலூட்டும் பழக்கத்தைக் கொண்ட நபர் அவ்வகை கோளாறால் அவதிப்படுபவராகவும், அல்லது சோம்பேறியாகத் தெரியும் ஒருவர் தன்னம்பிக்கை குறைபாடு உள்ளவராகவும் கூட இருக்கலாம். எனவே முதலில் உண்மை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

MOST READ: இவரோட கைய பார்த்தீங்களா? கையில மரம் முளைச்சிருக்கு... எப்படினு தெரிஞ்சா ஷாக் ஆவீங்க...

2. புரிந்துணர்வு

2. புரிந்துணர்வு

நீங்கள் வருத்தப்பட்டும், உங்கள் நண்பர் தனது புதிய காதலனைப் பற்றி தொடர்ந்து பேசினால், அவர்கள் உங்கள் உணர்வுகளை மாயமாகப் புரிந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்க வேண்டாம். நீங்கள் இதைப் பற்றி அவர்களிடம் சொல்லாவிட்டால் அவர்களுக்குத் தெரியாது போகலாம்.

3. ஒரு பயிற்சியாளராக

3. ஒரு பயிற்சியாளராக

ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றி அறிவு இல்லை என்பதை நீங்கள் அறிந்தால் , பைத்தியமாகி விரல்களை அவர்களை நோக்கி சுட்டுவதற்குப் பதிலாக, பயிற்சியாளர் தொப்பியைப் போட்டு அவர்களுக்கு உதவ முயற்சிக்கவும். அவர்களுக்கு கொஞ்சம் இரக்கத்தைக் காட்டுவதை உறுதிசெய்யுங்கள். உங்கள் மனித நேயத்தை இழக்காதீர்கள்.

4. மற்றவர்களிடம் நடந்து கொள்ளுதல்

4. மற்றவர்களிடம் நடந்து கொள்ளுதல்

அவர்களின் காலணிகளில் உங்களை வைத்துக் கொள்ளுங்கள். மக்கள் உங்களுக்கு அளிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் நடத்தை விதத்தை கற்பனை செய்து பாருங்கள். இதுபோன்ற நிகழ்வுகள் உங்கள் தன்மையை மாற்ற விட வேண்டாம். அனைவரையும் மிகுந்த அக்கறையுடனும் மரியாதையுடனும் நடத்துங்கள்.

5. மக்களை மாற்ற வேண்டிய அவசியம்

5. மக்களை மாற்ற வேண்டிய அவசியம்

உங்களால் உலகை மாற்ற முடியாது. நீங்கள் அனைவரையும் மாற்ற முடியாது. அடுத்த முறை ஒருவரின் பழக்கத்தை அல்லது அவர்களின் கருத்தை மாற்றுவதற்கான தூண்டுதல் தோன்றும் போது இதை நினைவில் கொள்க.

மக்கள் எரிச்சலூட்டுவதில்லை என்று நாங்கள் கூறவில்லை. கடவுள் அனைவருக்கும் வித்தியாசமான விஷயங்களை பரிசளித்திருக்கிறார், சிலருக்கு அழகு, மற்றவர்களுக்கு புத்திசாலித்தனம், மற்றும் சிலவற்றை ஆசீர்வதித்திருக்கிறார்கள், அல்லது அதை மறுபெயரிடுவோம்... அவர்களில் நிறைய பேர் எரிச்சலூட்டும் ஆளுமைகளுடன் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள் (சபிக்கப்பட்டவர்கள்). நாங்கள் முன்பு கூறியது போல் உங்கள் எண்ணங்களை மறு பகுப்பாய்வு செய்ய வைக்கும் நபர்களை நீங்கள் காணலாம், ஆனால் எல்லா மதிப்பீட்டிற்கும் பிறகும், சில சமயங்களில் நீங்கள் ஒரு முடிவுக்கு வரலாம் - ஆம் !!! இப்பொழுது அது அவர்கள்தான்.

MOST READ: ரஷ்யமொழி படிக்க நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்ற செக்யூரிட்டி... சூப்பர்மேன்ப்பா...

திட்டமிடல்

திட்டமிடல்

இத்தகைய சூழ்நிலைகளில், நீங்கள் விஷயங்களை வித்தியாசமாகக் கையாள வேண்டும். எல்லோரையும் அவர்கள் எரிச்சலூட்டும் வாய்ப்புகள் உள்ளன. சுவரில் உங்கள் தலையை இடிக்காமலிருக்க ஒரே வழி (உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்) - புறக்கணிக்கவும். அவர்களின் விரும்பத்தகாத பக்கத்தை புறக்கணித்து, அவர்கள் அவ்வளவு அழகாக இல்லாத பக்கத்தில் நீங்கள் வராமல் இருப்பது மட்டுமே உங்கள் பிரச்சினைகளுக்கு விடை. இதுபோன்ற சூழ்நிலைகளைத் தவிர்ப்பதற்கான வழியை நீங்கள் கண்டுபிடிக்கக்கூடிய ஒரு சிறிய திட்டமிடல் உங்கள் பெரும்பாலான வேலைகளைச் செய்யும். அதனால் தான் இளையதளபதி விஜய் உசுப்பேத்தறவன்கிட்ட உம்முனும் கடுப்பேத்தறவன்கிட்ட கம்முனு இருந்தாலே எந்த தேவையில்லாத மன அழுத்தமும் எரிச்சலும் இல்லாம, வாழ்க்கைய ஜம்முனு நடத்த முடியும்னு தன்னோட ரசிகர்களுக்கு சொல்லியிருக்காரு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Deal With People Who Annoy You?

Does a person who clicks his pen repeatedly annoy you? Does a friend who keeps talking about how she has the perfect boyfriend, get on your nerves? What if we ask you to stop and think for a second, think about what it reflects on you as a person? Every time you deal with someone who annoys you, what lesson do you learn? This might sound surreal, but all such experiences come with a lesson.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more