For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா மேலும் ஒரு பெண் சிங்கத்தை இழந்தது... சுஷ்மா சுவராஜ் தனது கடைசி ட்வீட்டில் சொன்னது என்ன?

|

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரும், பாரதீய ஜனதா கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவருமான சுஷ்மா சுவராஜ் நேற்று மரணமடைந்தார். இந்தியா மேலும் ஒரு வலிமையான பெண் தலைவரை இழந்து விட்டது. அவரின் மரணத்திற்கு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Former external affairs mininster Sushma Suvaraj passes away

இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது சுஷ்மா சுவராஜ் அவர்கள் செய்த சாதனைகளும், மக்கள் சேவையும் காலம் உள்ள வரை அவர்களின் பெயரை ஒலிக்கச் செய்யும். இந்திய வரலாற்றின் வலிமையான பெண் தலைவர்களில் சுஷ்மா சுவராஜ் அவர்களும் ஒருவர் என்று கூறினால் அது மிகையாகாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுஷ்மா சுவராஜ்

சுஷ்மா சுவராஜ்

பாரதிய ஜனதா கட்சியின் பெண் தலைவராக மட்டுமின்றி அகில இந்திய பெண் தலைவராகவும் விளங்கியவர் சுஷ்மா சுவராஜ். 67 வயதான அவர் இதுவரை 7 முறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இந்தியாவின் இரண்டாவது பெண் வெளியுறவுத் துறை அமைச்சரும் அவர்தான். தான் சார்ந்த கட்சியின் அடுத்தநிலை பிரதம வேட்பாளராக இருக்கும் அளவிற்ககு திறமையும், செல்வாக்கும் கொண்டவராக சுஷ்மா சுவராஜ் விளங்கினார்.

 வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பு

வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பு

முன்னரே கூறியது போல இந்தியாவின் இரண்டாவது பெண் வெளியுறவுத் துறை அமைச்சர் இவர்தான். வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்து இவர் பல அளப்பரிய சாதனைகளை செய்தார். இன்று உலக அரங்கில் பல நாடுகள் இந்தியாவின் நட்பு நாடாக இருக்க இவரும் ஒரு முக்கியக் காரணம் ஆவார். வெளிநாடுகளில் அகதிகளாகவும், கைதிகளாகவும் வாழ்ந்து வந்த பல இந்தியர்களை தனது விரைவான நடவடிக்கைள் மூலம் தாயகம் கொண்டுவந்தார். பாஸ்போர்ட் பெற இருந்த வழிமுறைகளை எளிதாக்கி பல இளைஞர்களின் கனவுகளுக்கு ஒளி ஏற்றினார்.

MOST READ: இன்னைக்கு எந்தெந்த ராசிக்காரங்க படாதபாடு பட போறாங்க தெரியுமா? உங்க ராசியும் இதுல இருக்கா?

மதங்களை கடந்த தலைவர்

மதங்களை கடந்த தலைவர்

சுஷ்மா சுவராஜ் மதங்களை கடந்த ஒரு மாபெரும் தலைவராக விளங்கினார். அனைத்து மத மக்களும், அனைத்து நிலை மக்களும் எளிதில் அணுகக்கூடிய தலைவராக விளங்கினார். இவரின் மதங்களை கடந்த மனித நேயத்திற்கு சிறந்த உதாரணம் 2016 ஆம் ஆண்டு இவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தபோது இவருக்காக சிறுநீரகம் வழங்க அனைத்து மதங்களையும் சார்ந்த பலரும் முன்வந்ததுதான்.

மரணம்

மரணம்

ஆகஸ்ட் 6, 2019 அன்று மாலை தீவிர மாரடைப்பால் சுஷ்மா சுவராஜ் அவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரை உயிர் மருத்துவமனையிலேயே பிரிந்தது. அவரின் மரணம் அவரின் கட்சிக்கு மட்டுமல்ல இந்தியாவிற்கே ஈடு செய்ய முடியாத இழப்புதான்.

கடைசி ட்வீட்

கடைசி ட்வீட்

தனது கடைசி டவீட்டில் பிரதமர் நரேந்திர மோடிக்கு காஷ்மீரில் ஆர்டிகள் 370-யை நீக்கியதற்காக நன்றியும், வாழ்த்தும் தெரிவித்திருந்தார். மேலும் இந்த நாளுக்காகத்தான் தான் வாழ்நாள் முழுவதும் காத்திருந்ததாகவும் கூறியிருந்தார். சுஷ்மா சுவராஜின் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துள்ளார்.

MOST READ: பெண்களின் முடியை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை கூறிவிடலாம் தெரியுமா?

 தமிழக தலைவர்களின் இரங்கல்கள்

தமிழக தலைவர்களின் இரங்கல்கள்

சுஷ்மா சுவராஜின் மரணத்திற்க்கு அனைத்து தமிழக தலைவர்களும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழக எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் அவர்கள் தனது அறிக்கையில் திருமதி. சுஷ்மா சுவராஜின் மரணம் மிகுந்த வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். மேலும் ஒரு பெண்ணாக பொதுவாழ்வில் மிக உயர்ந்த இடத்தை பிடித்தது மட்டுமின்றி, தனக்கு கிடைத்த பொறுப்புகளில் சிறப்பாக செயலாற்றியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Former external affairs mininster Sushma Suvaraj passes away At 67

Former external affairs mininster Sushma Suvaraj passes away due to cardiac arrest.
Story first published: Wednesday, August 7, 2019, 11:46 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more