For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராஜ குடும்பத்தில் உள்ள விநோதமான காமெடியான உணவுப் பழக்கம்... அவங்க சமையல்காரரே சொன்னது...

By Mahibala
|

பொதுவாக ராஜ பரம்பரை என்றாலே தங்கத் தட்டுகளிலும் வெள்ளிப் பாத்திரங்களில் மட்டும் தான் சாப்பிடுவார்கள். ஆடம்பர ராஜ போக வாழ்க்கை வாழ்கிறவர்கள் என்ற நம்பிக்கையும் பிரமிப்பும் தான் நம் எல்லோருக்குமே இருக்கும்.

Bizzare Eating Habits of Royal Family According to Their Personal Chef

ஆனால் என்னதான் ராஜ பரம்பரையில் பிறந்து வளர்ந்தாலும் அவர்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் சில சிறு பிள்ளைத்தனங்கள், சராசரி மனிதர்கள் போல் வாழ முடியாவிட்டாலும் அவர்கள் செய்யும் சில விஷயங்களை முயற்சி செய்து பார்ப்பது போன்ற ஆவல்கள் இருக்கத்தானே செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ராஜ வம்சம்

ராஜ வம்சம்

சாதாரண மக்கள் என்ன சாப்பிடுவார்கள் என்று வேண்டுமானால் அரச குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்திருக்குமே ஒழிய அது எப்படி இருக்கும், என்ன சுவை என்று கூட தெரியாது. அதேபோலத்தான் ராஜ பரம்பரையினர் என்ன சாப்பிடுவார்கள் என்று ஆச்சர்யமும் அது நம்முடைய கனவில் உள்ள சாப்பிட முடியாத உணவு என்று மனதைத் தேற்றிக் கொண்டும் சென்று விடுவோம்.

இதையெல்லாம் தாண்டி, நம்முடைய ராஜ வம்சத்தில் இருப்பவர்களுக்கு நம்மைப் போன்ற நிறைய வேடிக்கையான உணவுப் பழக்கங்கள் இருப்பதாகவும் அது தெரிந்தால் நாமே ஆச்சர்யமும் நகைச்சுவையும் அடைவோம் என்று ராஜ வம்சத்தில் 11 ஆண்டுகள் வேலை செய்த சமையல்காரர் சில பழக்கங்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தார். அதைப் பற்றி தான் நாம் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம். படிச்சு என்ஜாய் பண்ணுங்க.

MOST READ: புலிகூட கேமாரவோட சண்டை போடறவர் யார்னு தெரியுதா?

யார் அந்த சமையல்காரர்?

யார் அந்த சமையல்காரர்?

Image Courtesy

ராஜ வம்சத்தில் குறிப்பாக, மன்னர், இளவரசர்கள், இளவரசிகள் என முக்கிய நபர்களுக்கு கடந்த 1982 முதல் 1993 வரையிலும் பர்சனல் குக்காக (சமையல்காரர்) இருந்த டேரன் மெக்கிரேடி என்பவர் தான் இந்த சுவாரஸ்யமான விஷயங்களை சில காலங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

ஹேரி & வில்லியம் (ராணி டயானா மகன்கள்)

ஹேரி & வில்லியம் (ராணி டயானா மகன்கள்)

பொதுவாக அரசர்கள், இளவரசர்கள் என்றால் அவர்களுடைய தட்டுகளில் இருக்கும் உணவுகள் பல ஆராய்ச்சிக்குப் பிறகு செய்யப்படும், அவர்களுடைய தட்டுகளில் உள்ள உணவுகள் மிகவும் ஆடம்பரமானதாக இருக்கும், சாதாரண உணவுகளைப் பற்றி அவர்களுக்குத் தெரியாது என்று நினைப்போம். ஆனால் ஹேரியும் வில்லியம்ஸ்ம் அப்படி இல்லை. அவர்களுக்கு சாதாரண அமெரிக்க குடிமகன் சாப்பிடும் உணவு பற்றியும் தெரியும். அதையும் விரும்பி சுவைப்பார்கள்.

எனக்கு நன்கு நினைவிருக்கிறது. ஒருமுறை அரசி டயானா சமையலறைக்கு வந்தார். இன்று சிறுவர்களுக்கான (ஹேரி& வில்லியம்) மதியம் உணவு தயார் செய்ய வேண்டாம். நாள் அவர்களை வெளியே அழைத்துச் செல்கிறேன். அப்படியே மெக்டொனால்டுஸ்க்கு அழைத்துக் கொண்டு போகிறேன். அங்கேயே சாப்பிட்டு விடுவார்கள் என்று கூறினார். எனக்கு ஒரு நிமிஷம் பேரதிர்ச்சியாக இருந்தது. எவ்வளவு பெரிய ராஜ பரம்பரை அங்கு போய் சாப்பிடுவதா, அதை என்னாலேயே தாங்கிக் கொள்ள முடியாமல் நான் சொன்னேன், அதே பர்கர் ஆகிய உணவுகளை நானே செய்து கொடுத்துவிடுகிறேன் அரசி என்று. அதற்கு அவர் சொன்னார், நோ நோ அவர்களுக்கு அங்கே கொடுக்கும் அந்த பொம்மையுடன் கூடிய கவர்கள் வேண்டும். அதை வாங்கி கையில் வைத்துக் கொண்டு சாப்பிடுவது தான் அவர்களுக்கு மிகப் பிடிக்கும். அதனால் அங்கேயே பிட்சாவும் தோலோடு ஃபிரை செய்த உருளைக்கிழங்கும் சாப்பிட்டுக் கொள்வார்கள் என்று கூறினார். எனக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

அரசி டயானா

அரசி டயானா

அரசி டயானா உணவு விஷயத்தில் மிக மிக கவனமாக இருப்பார். மிகவும் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிடுவார். டயட் ரொம்ப முக்கியம் என்பார். கொழுப்பு இல்லாத உணவுகளையே விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் விருந்தாளிகள் யாரேனும் அவருடன் அமர்ந்து சாப்பிடும்போது மட்டும் இந்த கட்டுப்பாடுகளை தகர்த்துக் கொள்வார். விருந்தாளி என்ன சாப்பிடுகிறாரோ அதைத்தான் இவரும் சாப்பிடுவார். மீன் என்றால் அரசிக்கு மிகப் பிடிக்கும். சிவப்பு இறைச்சியை தொடவே மாட்டார். ஆனால் உணவு விஷயத்தில் அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அது என்னவென்றால், பெரும்பசி. சாதாரணமாக சாப்பிடும் நேரம் தவிர சில சமயங்களில், பசி பொறுக்க முடியாமல், பெரும்பசி எடுக்கும். பின் சாப்பிட ஆரம்பிப்பார். ஆரோக்கியமான உணவை மட்டுமே சாப்பிடும் அவர் ஒருமுறை பெரும்பசி எடுத்து, எனக்கு நிறைய கொழுப்பு உணவுகளையும் சமைத்துக் கொடுக்கும்படி சொன்னார். எனக்கு மிக ஆச்சர்யமாக இருந்தது.

அவருக்கு மிகவும் பிடித்த உணவு என்ன தெரியுமா? ஸ்டஃடு பெல்பெப்பர் (குடைமிளகாய்) மற்றும் ஸ்டஃப்டு எக்பிளாண்ட் (கத்திரிக்காய்) தான்.

MOST READ: தாடி வளர்க்கணுமா? எந்த முக அமைப்புக்கு எந்த தாடி சூட்டாகும்?... இத பார்த்து செலக்ட் பண்ணுங்க...

அரசர் பிலிப் & சார்லஸ்

அரசர் பிலிப் & சார்லஸ்

ஒரு மனிதர் எவ்வளவு ஆரோக்கியமாக சாப்பிடக் கூடியவராக இருந்தாலும் சுவையற்ற உணவுகளை விரும்பமாட்டார்கள் தானே. அந்த மாதிரி தான், அரசர் பிலிப் நன்கு சுவைத்துச் சாப்பிடுவார். சார்லஸ் அவர்களோ பச்சை காய்கறிகள், கீரைகள், பழங்கள் கொண்ட 100 சதவீதம் ஆர்கானிக் உணவை மட்டுமே சாப்பிடுவார். எப்போது ஷாப்பிங் போன்று வெளியில் சென்றாலும் உணவுக்கூடைகளை எடுத்துக் கொண்டு செல்வது வழக்கம். அப்படி ஒருமுறை உள்ளே பிலிப் மன்னர் வந்தபோது, இரண்டு கூடைகளில் உணவு எடுத்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து, எதற்கு இரண்டு கூடைகள் என்று கேட்டார். அது முழுக்க முழுக்க ஆர்கானிக் உணவுகள் சார்லஸ்க்காக என்று சொன்னதும், அவர் என்ன ஆர்கானிக் உணவா? பிளடி ஆர்கானிக் ஃபுட் என்று சொல்லி முகத்தை சுளித்துக் கொண்டே சென்றுவிட்டார். பின்ன என்ன ரசிச்சு ருசிச்சு சாப்பிடறவருக்கு எப்படி ஆர்கானிக் உணவு பிடிக்கும்.

அதேபோல் இன்னொரு சுவாரஸ்யமான சம்பவமும் உண்டு. ஒருமுறை மன்னர் கிச்சனுக்கு வந்தார். அப்போது மட்டன் சாப்ஸ் சமைத்துக் கொண்டிருந்தோம். ஆட்டுத் தொடையில் இருந்த கறிகளை வெட்டி எடுத்துவிட்டு, ஓரமாக வைக்கப்பட்டிருந்த தொடையைப் பார்த்து என்ன அது என்று கேட்டார். உடனே நான் சொன்னேன் இது ஆட்டுத்தொடை. நம் பணியாளர்கள் சாப்பிடுவதற்காக சமைக்கப்பட்டிருக்கிறது என்று. ஏன் அதை நாம் சாப்பிடக்கூடாது என்று கேட்டுக்கொண்டே ஒன்றைக் கையிலெடுத்துச் சாப்பிட ஆரம்பித்துவிட்டார். அப்புறமென்ன? மற்றொன்றை பணியாளர்கள் சாப்பிட்டார்.

எலிசபெத் ராணி

எலிசபெத் ராணி

பொதுவாக நம்ம வீட்ல முக்கியமா ஏதாவது விஷயமா நடக்கும்போதெல்லாம் யாராவது வழக்கமாக லேட்டாதான் வருவாங்க. அது நம்ம வீடுகள்ல மட்டும் இல்ல. ராஜ குடும்பங்களில் உண்டு. அது வேற யாரும் இல்ல. ராணியே தான். எப்பவுமே இரவு சாப்பாட்டுக்கு எல்லாரும் வந்து ரொம்ப நேரத்துக்குப் பிறகுதான் அவங்க டைனிங் டேபிளுக்கு வருவாங்களாம். அதனாலேயே மற்றவர்களிடம் டின்னர் டைம் சொல்லும் நேரத்தை ராணியிடம் மாற்றிச் சொல்வது வழக்கம். பொதுவுாக டின்னர் டைம் 8.30 மணி என்றால், ராணியிடம் மட்டும் 8.10 என்று சொல்லிவிட்டு, மற்றவர்களிடம் சரியான நேரத்தைச் சொன்னால் தான், ராணி வந்து சேருவதற்கு 8.30 ஆகிவிடும்.

டப்பர்வேர் உணவு

டப்பர்வேர் உணவு

அரச குடும்பங்களில் உள்ளவர்களுக்கு நடைமுறை வாழ்க்கைப் பற்றி தெரியவே தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதேபோல், அரச குடும்பங்களில் பிறந்தவர்கள் தங்கத் தட்டுக்களில் சாப்பிடுவது தான் வழக்கம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இன்னொரு ஆச்சர்யமான விஷயத்தைச் சொல்கிறேன். ராணி எலிசபெத் வெளியில் செல்லும்போது, நாம் எடுத்துச் செல்கின்ற டப்பர்வேர் டப்பாக்களில் தான் உணவை எடுத்துச் சென்று சாப்பிடுவார். அதிலும் காலை உணவென்றால் கொஞ்சம் கெலாக்ஸ், டார்ஜிலிங் டீ அவ்வளவு தான்.

MOST READ: நைட் அவுட் போக எப்படி மேக்கப் போடறதுனு தெரியலயா? இந்த டிப்ஸ்ல ஃபாலோ பண்ணுங்க...

இரண்டாம் எலிசபெத்

இரண்டாம் எலிசபெத்

இரண்டாம் எலிசடிபத் ராணி மிக மிக வித்தியாசமாக தான் தன்னுடைய உணவைத் தேர்வு செய்வார். இவருக்காகவே ஒரு மெனு புத்தகம் தயாரிக்கப்பட்டு வைத்திருந்தோம். சமைப்பதற்கு முன் அவரிடம் சென்று அந்த மெனு புத்தகத்தைக் கொடுப்போம். அதில் அவர் தேர்வு செய்யும் உணவையே அவருக்கு வழங்குவோம்.

அரசுக்கு சொந்தமான எஸ்டேட்டுகளில் இருந்து தயாரிக்கப்படும் உணவை விரும்பிச் சாப்பிடுவார். ம். சொல்ல மறந்துட்டேன். ராணிக்கு மிகவும் பிடித்தது என்ன தெரியுமா? டார்க் சாக்லேட். அந்த வயதிலும் சின்ன குழந்தை போல சாக்லேட்டை விரும்பிச் சாப்பிடுவதைப் பார்த்து நாங்கள் பலமுறை ரசித்திருக்கிறோம் என்று கூறினார் அந்த சமையல்காரர்.

அழகான ஆடைகள்

அழகான ஆடைகள்

ராஜ வம்சத்தில் இரவு உணவுக்கு எல்லோரும் ஒன்றாகக் கூடும்பொழுது, நிச்சயமாக நன்கு சிறப்பாக ஆடைகளை உடுத்தி, முழு அலங்காரத்தோடு தான் வர வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Bizzare Eating Habits of Royal Family According to Their Personal Chef

In a no-holds-barred interview, Darren McGrady, who worked for the Windsors as their personal chef between 1982 and 1993, reveals some of the craziest eating habits of the royal family.
Story first published: Tuesday, August 20, 2019, 17:02 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more