For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

#bigil ஹேஷ்டேக் அந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

|

2019ஆம் ஆண்டு முடிவடையவிருப்பதால், நடப்பாண்டில் என்னென்ன மறக்க முடியாதா விஷயங்கள் நடந்தது என்பது பற்றி நம்மில் பலர் மறந்திருப்போம். கவலையை விடுங்க...ட்விட்டர் உதவியுடன் அந்த நினைவுகளை மறுபடியும் மீட்டெடுக்கலாம். இந்தியாவில் அதிகம் ட்வீட் செய்யப்பட்ட டாப் 10 ஹேஷ்டேக்குகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம் பிடித்துள்ள ஒரே தமிழ்ப்படம் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியன்று வெளிவந்த பிகில்தான். #bigil ஹேஷ்டேக் அந்த பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

biggest moments in india on twitter in 2019

ட்விட்டர் என்பது உலகெங்கிலும் என்ன நடக்கிறது என்பதை மக்களுக்கு தெரிவிக்கிற உலகளாவிய பொது உரையாடலை உருவாக்கும் ஒரு சமூக வலைதளம். இது அனைவரும் அறிந்த ஒன்று. அரசியல், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, க்ரைம் மற்றும் முக்கிய செய்திகள் என எதையும் பற்றி வேண்டுமானாலும் பேசும் பொதுத்தளம். நடப்பாண்டில் ட்விட்டரில் மிகவும் ட்ரெண்டான டாப் 10 சம்பவங்களின் தொகுப்புகளை உங்களுக்காக வழங்குகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#loksabhaelection2019

#loksabhaelection2019

2019ஆம் ஆண்டு ட்விட்டர் தளத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக்குகளின் பட்டியலில் #loksabhaelection2019 ஹேஷ்டேக் முதலிடத்தைப் பிடித்துள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்தது. நரேந்திரமோடி இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டார்.

MOST READ: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னும் சகாப்தம்: தெரிந்ததும்...தெரியாததும்...!

#chandrayaan2

#chandrayaan2

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது இஸ்ரோவின் சந்திரயான்-2. அதனால், #chandrayaan2 ஹேஷ்டேக் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. உலகிலேயே முதன்முறையாக நிலவின் தென்துருவ பகுதியை ஆராய, சந்திராயன்-2 விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை 15ஆம் விண்ணில் ஏவியது. ஆனால், வெற்றிக்கு மிக அருகில் வந்த சந்திரயான்-2 விண்கல சோதனை முடிவில் தோல்வியை சந்தித்தது.

#cwc19

#cwc19

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகள் இந்தியர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்டது. அதனால், #cwc19 என்ற ஹேஷ்டேக் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடப்பாண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில், உலக கோப்பையை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.

#pulwama

#pulwama

நடப்பாண்டில் பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புல்வாமா பகுதியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 44 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தைக் குறிக்கும், #pulwama என்ற ஹேஷ்டேக் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

MOST READ:ஆண்களே... உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?...தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்...!

#article370

#article370

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து மத்திய அரசு. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். சிலர் ஆதரவு தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக #article370 என்ற ஹேஷ்டேக் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டது. அதனால், இந்த ஹேஷ்டேக் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

#bigil

#bigil

தெறி, மெர்சல் என்று அடுத்தடுத்து வணீக ரீதியாக வெற்றி பெற்றது அட்லி-விஜய் கூட்டணி படங்கள். அதைதொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி கடந்த அக்டோபர் மாதம் வெளியான அவரின் 63ஆவது திரைப்படம் பிகில். அந்தப் படத்தின் பெயரை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடித் தீர்த்தால், #bigil ஹேஷ்டேக் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய அளவில் இடம்பிடித்த ஒரே படம் பிகில்.

#diwali

#diwali

காலம் செல்ல மக்களின் செயல்பாடுகள் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாறிவருகின்றன. பிறந்த நாள் வாழ்த்து, பண்டிகை நாட்களில் வாழ்த்து மடலை அனுப்பிவந்த மக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்கின்றனர். தீபாவளி பண்டிகையை ஒட்டி வாழ்த்துகளைப் பகிர்ந்த மக்களால் #diwali ஹேஷ்டேக் ட்ரெண்டாகி ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.

MOST READ: மனிதர்களை போலவே இந்த சிம்பன்சி செய்யும் வேலையை பாருங்களேன்... நீங்களே ஆச்சிரியப்படுவீங்க...

#avengersendgame

#avengersendgame

மார்வெல் ஸ்டூடியோஸ் சார்பில் அவெஞ்சர்ஸ் நான்காம் பாகமாக எண்ட்கேம் திரைப்படம் சர்வதேச அளவில் பெரும் வசூலை வாரிக்குவித்தது. இது அமெரிக்க நாட்டு சூப்பர் ஹீரோஸ் திரைப்படமாக இருந்தாலும், இந்தியாவில் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், #avengersendgame என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

#ayodhyaverdict

#ayodhyaverdict

பல ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி வழக்கில் கடந்த நவம்பர் 9ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம், இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தரலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. இது வரலாற்று நிகழ்வாக அமைந்ததால், #ayodhyaverdict என்ற ஹேஷ்டேக் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது.

#eidmubarak

#eidmubarak

கடந்த மே மாதம் கொண்டாடப்பட்ட ஈகைத் திருவிழா (ரம்ஜான் பண்டிகை) உலகெங்கிலும் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. இதன்காரணமாக #eidmubarak என்ற ஹேஷ்டேக் பத்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

biggest moments in india on twitter in 2019

Do you know the 2019 biggest moments in india on twitter.
Story first published: Thursday, December 12, 2019, 17:28 [IST]
Desktop Bottom Promotion