Latest Updates
-
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
ஆன்லைனில் வேலைக்கு அப்ளை பண்ணேன்... கிடைத்ததோ ஆண்டிகளிடம் உறவு கொள்ளும் கால் பாய் வேலை
வேலை வாங்கித் தருவதாக கூறி ஆண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன தான் நடக்கிறது என்பது பற்றி இங்கே விளக்கமாகப் பார்க்கலாம். அதுபற்றிய ஒரு தொகுப்பை தான் இங்கு பார்க்க இரு
வேலையில்லாத திண்டாட்டம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது. படித்த இளைஞர்கள் நாட்டில் வேலை கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில் யாராவது வேலை வாங்கித் தருகிறேன் என்று அழைத்தால் யார் தான் போக மாட்டார்கள்.

அப்படி வேலைக்காக போன ஆண்களை பேசி சமாதானம் செய்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியிருக்கிறார் ஒரு பெண். அந்த விஷயம் வெளியில் தெரிந்து தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். என்ன தான் நடந்தது என்பது பற்றி இந்த தொகுப்பில் விளக்கமாகப் பார்க்கலாம்.

ஆன்லைன் விளம்பரம்
சென்னை மாநகரத்தில் வேலையில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ஆன்லைனில் விளம்பரங்கள் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 81 லட்சம் இளைஞர்கள் அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு வேலைக்காக காத்திருக்கிறார்கள். இந்திலையில் தனியார் நிறுவனங்களில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி தினந்தோறும் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இணையதளத்தில் உருவாகின்றன. அதை நம்பிப் போனால் அங்கு இளைஞர்களைக் குறிவைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்.

பிரபுவுக்கு நேர்ந்தது என்ன?
அவருடைய பெயர் பிரபு (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் வெறும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கிறார். வறுமைக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறார். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பிரபு அந்த வருமனம் போதவில்லை, ஆதலால் இன்னும் வருமானம் வேண்டும் என்ற காரணத்தால் இணையதளத்தில் வேலை தேடியிருக்கிறார். அப்படி வேலை தேடிய அவருக்கு வேலை கிடைத்ததா?

வேலை கிடைத்ததா?
அப்படி இணைய தளத்தில் வேலை தேடிக் கொண்டிருந்த பிரபுவுக்கு ஒரு நழறவனம் கண்ணில் பட்டது. அதில் இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகவும், அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொடர்பு எண்ணையும் அதில் குறிப்பிட்டிருந்தனர். அந்த எண்ணைக் குறித்து வைத்துக் கொண்டார் பிரபு.

போன் கால்
இணைய தளத்தில் அந்த நிறுவனம் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு பிரபு போன் செய்தார். அப்போது எதிர்முனையில் அந்த நிறுவனத்தின் சார்பாக ஒரு இளம்பெண் தான் பேசினார். இந்த வேலை உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் பத்தாயிரம் ரூபாய் நீங்கள் முன் பணம் கட்ட வேண்டும் என்று இது பெரிய இடத்து வேலைகள் டெபாசிட் கட்டாமல் உங்களை நம்பி வேலையைக் கொடுக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.

பணம் டெபாசிட்
அந்த பெண்ணை சொன்னதை நம்பி, உண்மையிலேயே பெரிய இடத்தில் வேலை இருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டு, அந்த பெண் சொன்ன ஒரு எஸ்பிஐ வங்கி எண்ணுக்கு தவணை முறையில் பத்தாயிரம் ரூபாய் வரை பணம் செலுத்தியிருக்கிறார் பிரபு.

அப்படி என்ன வேலை?
தொடர்ந்து அந்த பெண்ணிடம் என்ன வேலை என்று பிரபு கேட்டபோது, பத்தாயிரம் ரூபாய் டெபாசிட் செய்துவிட்டதும், அந்த பெண் தைரியமாக இது கால் பாய் வேலை தான் என்று மிக வெளிப்படையாகவே பிரபுவிடம் சொல்லியிருக்கிறார் அந்த பெண்.

ஆண்டிகளுக்கு சர்வீஸ்
இது கால் பாய் வேலை தான். உங்களுடைய நண்பர் ஒருவரிடம் இதுபற்றி தெளிவாகச் சொல்லிவிட்டேன். மூன்று பேருக்கும் சேர்த்து ஆளுக்கு 3000 ரூபாய் வீதம் பத்தாயிரம் செலுத்துங்கள். உடனே உங்களுக்கு அப்பாயிண்மெண்ட் புக் செய்கிறேன். அங்கே அழகழகான ரிச் லெவல் ஆண்டிகள் இருப்பார்கள். அவர்கள் செய்யச் சொல்வதை செய்து சந்தோஷப்படுத்த வேண்டும், உங்கள் நண்பர்கள் புரியாதது போலவே நடிக்கிறார். உங்களிடம் வருபவர்கள் சாதாரணமான ஆட்கள் கிடையாது என்று பிரபுவிடம் போனில் மிக ஓப்பனாகவே அந்த பெண் பேசுகிறாள்.

வற்புறுத்தல்
அவருடைய வெள்ளையான நிறம், உடல் அமைப்பு ஆகியவற்றைப் பார்த்துவிட்டு, பிரபுவை பாலியல் விபச்சாரத் தொழிலுக்கு வற்புறுத்தி அழைக்கத் தொடங்கி விட்டனர். அதன்பின் போலீசில் புகார் செய்திருக்கிறார் பிரபு.

பெரிய பங்களா
ஓரளவுக்குப் பின் திரும்ப அந்த எண்ணில் பேசி, அந்த வேலையை ஏற்பதாகச் சொல்லி முகவரியைக் கேட்டுப் பெற்றுக் கொண்டுள்ளார். அதன்பின் நண்பர்களுடன் அந்த ஏரியாக்களைச் சுற்றித் திரிந்திருக்கிறார்கள்.

பூட்டிய வீட்டுக்குள் விபச்சாரம்
அவர்கள் கொடுத்த முகவரியைத் தேடி நண்பர்களுடன் அலைந்து திரிந்து ஒருவழியாகக் கண்டுபிடித்து விட்டார் பிரபு. அது ஒரு கண்ணாடி பேக்டரியின் பின்புறத்தில் தான் அந்த பங்களா இருந்தது. தங்களாவை நெருங்கினால் அது ஏதோ ஆளில்லாத பங்களா போல பூட்டி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் பங்களாவிற்குள் ஆள் நடமாட்டம் இருந்திருக்கிறது. அங்கே சென்றால் ஏதாவது பிரச்சினை வந்துவிடும் என்பதால் அங்கிருந்து வந்து விட்டனர் பிரபுவும் அவருடைய நண்பர்களும்.
நகர்ப்புறங்களில் இப்படி நிறைய இடங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, வருபவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியும் பணத்தை மோசடி செய்யயும் ஒரு கும்பலே வலைவீசிக் காத்துக் கொண்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications











