Just In
- 30 min ago
கார்த்திகை தீபம் : 27 தீபங்களும்... அதன் பயன்களும்...
- 1 hr ago
சர்க்கரை நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா?.. கண்டிப்பா படிங்க…!
- 1 hr ago
அவசர அவசரமாக சாப்பிடுவதால் உடம்புக்குள்ள என்னலாம் நடக்கும் தெரியுமா?
- 3 hrs ago
அதிகபட்ச கலோரிகளை எரிக்க இந்த 5 உடற்பயிற்சிகளை தினமும் செய்தாலே போதும்...
Don't Miss
- Education
ISRO Recruitment: இஸ்ரோ நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Finance
எஸ்பிஐ வாடிக்கையாளாரா நீங்க.. அப்படின்ன இந்த செய்தி உங்களுக்கு தான்..!
- News
சித்திரையில் கட்சி பெயரை அறிவிக்கிறாரா ரஜினிகாந்த்..? முன்னேற்பாடுகள் தீவிரம்
- Sports
திரும்பிப் பார்க்க விரும்பவில்லை.. வாழ்நாள் தடை குறித்து மவுனம் கலைத்த டேவிட் வார்னர்!
- Movies
40 வருடமாச்சு.. பி.சி.ஸ்ரீராம் கேமராவுடன் களம் இறங்கி!
- Automobiles
பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய யமஹா ஆர்15 பைக் விற்பனைக்கு அறிமுகம்
- Technology
வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் வசதிக்கு கிடைத்தது புதிய அப்டேட்.!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கஜினி 18 முறை படை எடுத்தது தெரியும்..ஆனால் 17 முறை அவரை தடுத்தது யார்? தடுத்தது உண்மையா தெரியுமா?
உலகில் இருக்கும் மற்ற அனைத்து நாடுகளை காட்டிலும் அதிக வரலாற்றையும், மர்மங்களையும் கொண்ட நாடு நமது இந்தியா ஆகும். ஏனெனில் இப்பொழுதும் மட்டுமல்ல அந்த காலத்திலும் நமது மன்னர்கள் இப்போதிருப்பது போலவே மொழியாலும், எல்லையாலும் பிரிந்தே இருந்தனர். நம்மை ஆண்ட மன்னர்கள் ஒற்றுமையோடு இருந்திருந்தால் இன்று உலகின் சக்திவாய்ந்த நாடாக நாம்தான் இருந்திருப்போம்.
நம் மன்னர்களிடையே ஒற்றுமை இல்லாததால்தான் பல நாட்டு மன்னர்களும் நம் மீது போர் தொடுத்து நமது மக்களை கொன்று நம் மண்ணின் செல்வத்தையும் கொள்ளையடித்து சென்றனர். இந்தியாவின் மீது படையெடுத்தவர்களில் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தவர் முகமது கஜினி. இவர் இந்தியா மீது 17 முறை படையெடுத்து வந்து தோற்று 18வது முறை வெற்றி கண்டதாக நாம் படித்த வரலாறு கூறுகிறது. ஆனால் உண்மையில் மறைக்கப்பட்ட வரலாறு என்னவென்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

முகமது கஜினி
முகமது கஜினி கிபி 971 ஆம் ஆண்டு கஜினியை ஆண்ட சுபுக்தகினுக்கு மூத்த மகனாக பிறந்தார்.சுபுக்தகின் இந்தியா மீது போர் தொடுத்த போது ராஜா ஜெய்பால் அவரை எதிர்த்து போர் புரிந்தார். முகமது கஜினி அப்போது தன் தந்தைக்காக போரில் ஈடுபட்டார். ஆனால் அந்த போரில் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

அரசன்
முகமது கஜினி சுபுக்தகினின் மூத்த மகனாக இருந்தாலும் அவருக்கு முகமதுவை மன்னராக்குவதில் விருப்பமில்லை. ஏனெனில் அவரின் இறுதிகால செயல்களால் அவர் அதிருப்தியில் இருந்தார். அதனால் அவரின் இளைய மகனான இஸ்மாயில் அரசனாக முடிசூடினார். ஆனால் அது நீண்ட காலம் நீடிக்கவில்லை. முகமது தனது தம்பியை வீழ்த்திவிட்டு அரியணை ஏறினார். தன்னுடைய 27 வது வயதில் சுல்தானாக தன்னை அறிவித்து கொண்டார்.

இந்தியா மீது படையெடுப்பு
இந்தியாவின் செல்வம் மீது ஆசைப்பட்ட முகமது அதனை கொள்ளையடிப்பதற்காக 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியா மீது படையெடுக்க தொடங்கினார். இந்தியா மீது படையெடுக்க காரணம் ஒன்று அதன் அளவில்லாத செல்வம் மற்றொன்று முகமது தனது தலைநகரை கஜினியில் இருந்து இந்தியாவிற்கு மாற்றி ஒட்டுமொத்த ஆசியாவையும் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர எண்ணினார். கிபி 1000 முதல் 1027 வரை ஒன்றன் பின் ஒன்றாக இந்தியா மீது போர் தொடுத்து கொண்டே இருந்தார்.

ஜெய்பாலுடன் மீண்டும் போர்
கிபி 1001 ல் முகமது கஜினி தன் பழைய எதிரியான ஜெய்பால் மீது போர் தொடுத்தார். அப்போது ராஜபுத்திரர்கள் தங்களது வலிமையை இழந்து இருந்தார்கள். மன்னர் ஜெய்பால் மிகவும் வீரத்துடன் போரிட்டு முகமது கஜினியை தடுத்தார். ஆனால் இறுதியில் தோல்வியை தழுவினார். கிட்டத்தட்ட 15,000 வீரர்கள் இந்த போரில் கொல்லப்பட்டனர். ஜெய்பால் முகமதுவால் சிறைபிடிக்கப்பட்டார், அவரும் அவரின் 15 உறவினர்களும் முகமது கஜினி முன் நிறுத்தப்பட்டனர்.

முகமது கஜினியின் நிபந்தனை
முகமது கஜினி ஜெய்பாலின் அனைத்து செல்வங்களையும் அபகரித்து கொண்டார். மேலும் அவரை விடுவிக்க 2,50,000 தினார் பணமும், 5,00,000 இந்தியர்கள் அடிமையாகவும் வேண்டுமென்று நிபந்தனை விதித்தார். இறுதியில் அவை கொடுக்கப்பட்டு ஜெய்பால் அவரது மகன் அனந்தபாலால் மீட்கப்பட்டார். ஆனால் தோல்வியடைந்ததால் ஜெய்பால் தனது உயிரை எரியும் நெருப்பில் விழுந்து மாய்த்து கொண்டார்.

அனந்தபாலுடன் போர்
ஜெய்பாலின் மறைவிற்கு பிறகு அனந்தபால் மன்னராக பொறுப்பேற்று கொண்டார். 1008 ஆம் ஆண்டு முகமது கஜினி மீண்டும் போர் தொடுத்தார். அனந்தபால் மற்ற அரசர்களை உதவிக்கு வரும்படி கூறினார். அவரின் வேண்டுகோளுக்கிணங்க உஜ்ஜயினி, குவாலியர், டெல்லி, அஜ்மீர் நாட்டு மன்னர்கள் அனந்தபாலுக்கு உதவினர். பெஷாவரில் இரண்டு மாபெரும் படையும் சந்தித்தது. ஆனால் ஒருவரை ஒருவர் தாக்காமல் காத்திருந்தனர்.

அனந்தபாலின் வீழ்ச்சி
அந்த சூழ்நிலையில் கோகர்களும் அனந்தபாலுக்கு உதவி செய்ய வந்தனர். முகமதுவின் படையில் கிட்டதட்ட 6000 வில் வீரர்கள் இருந்தனர். கோகர்கள் அதில் 5,000 பேரை கொன்றனர். போரில் அனந்தபாலின் கைதான் ஓங்கியிருந்தது, ஆனால் எதிர்பாராதவிதமாக அனந்தபாலின் யானைக்கு மதம் பிடித்து அது அவரை போர்க்களத்தை விட்டு வெளியே இழுத்து சென்றது. தலைமை இல்லாத இந்திய படையில் குழப்பம் ஏற்பட்டு அனைவரும் பின்வாங்க தொடங்கினர். அதன்பின் முகமதுவின் கை ஓங்கி இந்திய படையின் 20,000 வீரர்கள் கொல்லப்பட்டனர். அதன்பின் முகமதுவின் படையெடுப்புகள் தொடர்ந்து அரங்கேறியது.

நாகர்கோட் படையெடுப்பு
அந்த காலத்தில் நாகர்கோட் கோவில் அதன் செல்வத்திற்காக மிகவும் புகழ் பெற்றதாக இருந்தது. அதன் மீது ஆசை கொண்ட முகமது கஜினி தன் படையினரை நாகர்கோட்டை தாக்க உத்தரவிட்டார். கிபி 1009 ஆம் ஆண்டு நாகர்கோட் முகமது கஜினியால் தாக்கப்பட்டது. அங்கிருந்து விலைமதிப்பில்லாத தங்கம், வைரம் மற்றும் செல்வத்தை தன் தலைநகருக்கு அள்ளி சென்றார் முகமது கஜினி. அதற்கு பின் தானெசீர், கண்ணுஜ் என பல இடங்களிலும் முகமது தனது படையெடுப்பை நடத்தினார்.

கலிஞ்சர் படையெடுப்பு
கண்ணுஜை ஆண்ட ராஜ்பால் பிரதிகார் முகமதுவின் ஆதிக்கத்தின் கீழ் ஆட்சிபுரிய சம்மதித்தார். இதனால் மற்ற ராஜபுத்திர அரசர்கள் அவர் மீது ஆத்திரம் கொண்டனர். இதனால் கலிஞ்சர், குவாலியர், அஜ்மீர் மற்ற இதர ராஜபுத்திர அரசர்கள் கண்ணுஜ் மீது போர் தொடுத்து ராஜ்பால் பிரதிகாரை கொன்றனர். இதனால் கோபமுற்ற முகமது கஜினி கலிஞ்சர் மீது போர் தொடுத்தார். கலிஞ்சரின் அரசர் கண்டா சந்தபால் முகமதுவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டார். அதற்காக முகமதுவிற்கு பெரும்தொகை கொடுக்கப்பட்டது.

சோமநாத கோவில் படையெடுப்பு
பதினாறாவது முறையாக குஜராத்தில் இருக்கும் சோமநாத கோவில் மீது முகமது கஜினி படையெடுத்தார். ஏனெனில் அப்போது இந்தியாவிலேயே அதிக செல்வமும், புகழும் வாய்ந்த கோவிலாக சோமநாத கோவில் இருந்தது. 1025 ல் சோமநாத கோவில் தாக்கப்பட்டது, ராஜபுத்திர அரசர்களும் மற்ற அரசர்களும் கோவிலை பாதுகாக்க வீரத்துடன் முன்வந்தனர். முகமதுவின் படைக்கும் இந்தியர்களின் படைக்கும் 3 நாட்கள் போர் நடைபெற்றது. இருதியில் முகமது கஜினியின் படை வெற்றி பெற்று 20 இலட்சம் தினார் மதிப்புள்ள செல்வத்தை கொள்ளையடித்து சென்றது.
MOST READ: பெண்களை பேசியே பிக்கப் பண்ணுவதில் இந்த ராசிக்காரர்தான் எப்பவுமே பெஸ்ட்டாம் தெரியுமா?

முகமது கஜினியின் படையின் வலிமை
முகமது கஜினியுடைய படையின் வலிமையே அவரின் காற்றை மிஞ்சும் குதிரைப்படைதான். ஏனெனில் அக்காலத்தில் நமது மன்னர்கள் யானைகளையே அதிகம் போரில் உபயோகப்படுத்தினர். ராஜபுத்திர அரசர்கள் போரில் சிறந்து விளங்கினாலும் அவர்களால் துருக்கிய வீரர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க இயலவில்லை. முகமது கஜினியின் மற்றொரு பலமாக இருந்தது நம் மன்னர்களிடையே இருந்த ஒற்றுமையின்மைதான். இறுதியாக 1030, ஏப்ரல் 20 ஆம் தேதி தன் 59 வது வயதில் முகமது கஜினி இறந்தார்.