Latest Updates
-
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்! -
சாணக்கிய நீதி படி இந்த 6 நபர்கள் உங்களுக்கு எதிரியானால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாதாம் - ஜாக்கிரதை -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது..! -
1 கப் தேங்காயும், 1 கைப்பிடி புதினாவும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
100 ஆண்டுகள் கழித்து நிகழும் அபூர்வ கிரக பெயர்ச்சி: ஜூன் 11-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்! -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. ஒருவாட்டி இந்த சட்னியை செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்..
1500 ஆண்டுகளுக்கு முன்பே செவ்வாயில் நீர் இருப்பதை கண்டறிந்த இந்திய விஞ்ஞானி..மறைக்கப்பட்ட உண்மைகள்
இன்று உலக விஞ்ஞானிகள் சாதித்ததாக கொண்டாடும் பல விஷயங்களில் பெரும்பாலானவை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம்முடைய முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
இன்று உலக விஞ்ஞானிகள் சாதித்ததாக கொண்டாடும் பல விஷயங்களில் பெரும்பாலானவை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம்முடைய முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகும். ஆனால் அவை திட்டமிட்டு மறைக்கப்பட்டும், அழிக்கப்பட்டும் கொண்டிருக்கிறது. அப்படி நம் முன்னோர்களின் சாதனைகளில் மறைக்கப்பட்ட ஒன்றுதான் செவ்வாய் கிரகம் தொடர்பான வானவியல் ஆராச்சியாகும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் உலகின் வானவியல் ஆராய்ச்சியின் பிறப்பிடமாக கருதப்படும் NASA செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பதை கண்டறிந்து உறுதி செய்தது. ஆனால் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவை சேர்ந்த ஒருவர் இதனை கண்டறிந்து விட்டார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். இந்த பதிவில் அவரை பற்றி முழுமையாக பார்க்கலாம்.

வராகமிஹிரர்
வராகமிஹிரர் மத்திய பிரதேசம் உஜ்ஜயினியை சேர்ந்த வானவியல் ஆராய்ச்சியாளர் ஆவார். மேலும் இவர் கணித அறிஞராகவும், தலைசிறந்த ஜோதிட நிபுணராகவும் விளங்கினார். இவரின் தந்தை ஆதித்யதாசரும் வானவியல் ஆராய்ச்சியாளர்தான். இவர் எழுதிய விண்வெளி மற்றும் பிரபஞ்சம் என்னும் புத்தகம் இன்றைய ஆராச்சியாளர்களை கூட ஆச்சரியப்பட வைக்கும் ஒன்றாக இருக்கிறது.

வராஹமிஹிரரின் பங்களிப்பு
வராஹமிஹிரர் பற்றி நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் இவர் கண்டுபிடித்ததை படிக்காத மாணவர்கள் மிகவும் குறைவு என்பதே உண்மை. திரிகோணமிதி என்று அழைக்கப்படும் முக்கோணவியல் சூத்திரத்தை உருவாக்கியவர் இவர்தான். கணிதவியலை பொறுத்தவரை இவரின் பங்கு என்பது அளப்பரியது ஆகும். இவர் செவ்வாய் கிரகம் தொடர்பாக என்ன கண்டறிந்தார் என்பதை மேற்கொண்டு பார்க்கலாம்.

பஞ்சசித்தானிக்கா
வராகமிஹிரர் கிபி 505 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கபித்தகரிடம் இருந்து வானவியல் மற்றும் கணிதவியல் தொடர்பான ஞானத்தை பெற்றார். இவர் தன் ஞானத்தை கொண்டு உருவாக்கிய பஞ்சசித்தானிக்கா என்னும் வானவியல் பற்றிய ஐந்து சட்டங்கள் கிபி 575 ல் வானவியலில் அதிக முக்கியத்துவத்தை பெற்றது.

கிரகங்களின் விட்டம்
பஞ்சசித்தானிக்காவில் சூர்யா சித்தாந்தம் என்னும் ஒரு பகுதி உள்ளது, இந்த வானவியல் விதியானது கிரகங்களின் செயல்பாட்டை கண்டறிய உதவுகிறது. இந்த பணியின் மூலம் வராஹமிஹிரர் கிரகங்களின் விட்டத்தை அளவிட்டார். பூமி, செவ்வாய், சனி மற்றும் வியாழன் போன்ற கிரகங்களின் விட்டங்களை இவர் துல்லியமாக கூறினார். சூர்ய சித்தாந்தம் சூர்ய மற்றும் சந்திர கிரகணங்களை அளவிட்டதுடன் அதன் நிறம் மற்றும் அளவையும் கண்டறிந்ததது.

செவ்வாய் கிரகத்தின் விட்டம்
கணக்கிடப்பட்ட விட்டத்தின் அளவின் படி மொத்தம் 3,772 மைல் என கணக்கிடப்பட்டது. தற்போது ஒப்புக்கொள்ளப்பட்ட விட்டம் 4,218 மைல் ஆகும். வராகமிஹிரர் செவ்வாயில் நீர் இருப்பதையும் கண்டறிந்தார்.

செவ்வாய் கிரகத்தின் இரும்பு மற்றும் நீர்
வராகமிஹிரர் செவ்வாயின் மேற்பரப்பில் இரும்பு மற்றும் நீர் இருப்பதை கண்டறிந்து கூறினார். பல நூற்றாண்டுகளுக்கு பிறகுதான் இது இப்போது NASA மற்றும் இஸ்ரோவால் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 2014 ஆம் ஆண்டு நாசாவின்மார்ஸ் ரோவர் அதன் மேற்பரப்பில் இருந்து இரும்புதாதில் மோதியது. இதற்கு லெபனான் என பெயர் வைத்தார்கள்.

சூரியனின் முக்கியத்துவம்
சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு கிரகமும் எப்படி உருவானது மற்றும் அவை எப்படி சூரியனை மையமாய் கொண்டு இயங்குகிறது என்பதை முதன் முதலில் கண்டுபிடித்து கூறியது இவர்தான்.

சூர்ய சித்தாந்தம்
சூர்ய சித்தாந்தத்தின் அசல் புத்தகம் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் சில ஆராய்ச்சியாளர்கள் தனது சொந்த ஆராய்ச்சிகளுக்காக அதிலிருந்து சில குறிப்புகளை மட்டும் எடுத்து கொண்டனர். வரமிஹிரரின் அசல் புத்தகம் வெளிநாட்டினரால் திருடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

பஞ்சாங்கம்
தற்போதிருக்கும் சூர்ய சித்தாந்தம் பஞ்சாங்கம் கணிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இடைப்பட்ட காலத்தில் பாஸ்கராச்சாரியார் மூலம் மாற்றியமைக்கப்பட்ட இந்த புத்தகம் மூலம்தான் தற்போது விஷேச தினங்கள் மற்றும் நட்சத்திரங்கள் கணிக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications