For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வடிவேலுவின் செம கெட்டப்பும் பட்டைய கிளப்பிய டயலாக்கும் (#வடிவேலு காமெடி கலெக்ஷன்ஸ்)

By Mahibala
|

வைகைப் புயல் வடிவேலுன்னாலே சொல்லணுமா என்ன, தானா சிரிப்பு வரும். வெறுமனே டயலாக்குகள் பேசிக் கொண்டு நகைச்சுவை செய்து கொண்டிருந்த சமயத்தில் தன்னுடைய பாடி லாங்குவேஜ் மூலம் ஒரு ரவுண்டு இல்ல பல ரவுண்டுகள் வந்து கொண்டிருக்கிறார். கிழக்குச் சீமையிலே படத்தில் தொடங்கி, சிங்கார வேலன், புலிகேசி, தலைநகரம், கண்ணாத்தாள் சூனா பாணா, கருத்தம்மா, ஜில்லுனு ஒரு காதல், வின்னர், போக்கிரி இப்படி இதெல்லாம் ஒரு சின்ன சாம்பிள் தான். இதுமாதிரி ஒரு பெரிய லிஸ்ட்டையே அடுக்கிக் கொண்டே போகலாம்.

Comedy Actor Vadivelu Famous Getups And Dialogues

வெறும் பாடி லாங்குவேஜ், டயலாக் மட்டுமில்லங்க. கெட்டப்புகளுக்கும் கொஞ்சமும் பஞசமிருக்காது. அதைவிட இப்போது எதற்கெடுத்தாலும் மீம்ஸ் போடும் பழக்கம் இருப்பது நமக்குத் தெரியும். வடிவேலு இல்லாமல் தமிழ் மீம்ஸே இல்லை என்று சொல்லலாம். என்ன மாதிரி கான்செப்டாக இருந்தாலும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வாழ்க்கை கொடுப்பதே நம்முடைய வடிவேலுவின் கெட்டப்புகள் தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வந்துட்டான்யா வந்துட்டான்

வந்துட்டான்யா வந்துட்டான்

துபாய் ரிட்டனா வந்திருக்கும் வடிவேலுவை பார்த்திபன் ஓட ஓட விரட்டிக் கொண்டிருப்பார். அந்த படத்தில் பார்த்திபன் வருவதைப் பார்த்த வடிவேலு பயந்து கொண்டே சொ்லலும் டயலாக் தான் இந்த வந்துட்டான்யா வந்துட்டான்.

MOST READ: பக்காவா சும்மா நச்சுனு ஒரு பர்ஃபெக்ட் முத்தம் கொடுப்பது எப்படி? படிச்சு தெரிஞ்சிக்கங்க...

வேணாம் வலிக்குது அழுதுருவேன்

வேணாம் வலிக்குது அழுதுருவேன்

முழுக்க முழுக்க காமெடியால் நிரம்பிய திரைப்படம் தான் பிரசாந்த் நடித்த வின்னர். இந்த படத்தில் முழுக்க முழுக்க வடிவேலால் மட்டுமே ஹிட் ஆனது என்றும் வடிவேல் படித்தில் தான் பிரசாந்த நடித்திருக்கிறார். இது பிரசாந்த் படம் அல்ல என்று சொல்லும் அளவுக்கு மெஹா ஹிட் கொடுத்த படத்தில் ரியாஸ் கான் வடிவேலுவை அடிக்கும் போது ஆவணாம் வலிக்குது அழுதுருவேன் என்று தனக்கே உரிய பாணியில் அழுது காட்டுவார்.

எதையும் பிளான் பண்ணனும்

எதையும் பிளான் பண்ணனும்

இந்த டயலாக்கை இன்றைய சூழலில் சொல்லாத ஆட்களையே நம்மால் பார்க்க முடியாது. சிறுசுகள் முதல் பெருசுகள் வரை அடிக்கடி சொல்லும் டயலாக்கில் ஒன்றாக இது மாறியிருக்கிறது.

இந்த கோட்ட நானும் தாண்ட மாட்டேன் நீயும் தாண்டக் கூடாது

இந்த கோட்ட நானும் தாண்ட மாட்டேன் நீயும் தாண்டக் கூடாது

இதுவும் அதே வின்னர் படத்தில் வருகின்ற டயலாக் தான்.

ஒரு இளைஞன் ஒரு இளைஞி கைய புடிச்சு இழுக்கத்தான் செய்வான்

ஒரு இளைஞன் ஒரு இளைஞி கைய புடிச்சு இழுக்கத்தான் செய்வான்

இதுவும் வின்னர் படம் தான்

MOST READ: ஆணுக்கோ பெண்ணுக்கோ கள்ளத்தொடர்பு இருப்பதை எந்தெந்த அறிகுறிகள் வெச்சு கண்டுபிடிக்கலாம்?

நானும் ரௌடி தான்

நானும் ரௌடி தான்

சுந்தர்.சி நடித்த தலைநகரம் படத்தில் கோட் சூட் போட்டுக் கொண்டு அந்த ஏரியாவின் ரௌடியாக பார்ம் ஆக வேண்டும் என்று சுற்றிக் கொண்டிருக்கும் வடிவேல் டீ கடையில் புாய் பஞ்சாயத்து செய்து ரௌடிகளிடமே நானும் ரௌடிதான் என்று பீலா விடும் டயலாக் தான் இது.

பாடி ஸ்டிராங்கு பேஸ்மெண்ட் வீக்கு

பாடி ஸ்டிராங்கு பேஸ்மெண்ட் வீக்கு

ஓங்கி ஒரு அடி வாங்கியதும் உச்சா போயிடுவார் நம்ம ஆளு. அப்ப தான் இந்த பாடி ஸ்டிராங்கு ஆனா பேஸ்மெண்ட் வீ்க் என்று அழுதுகொண்டே சொல்வார்.

 பீ கேர்ஃபுல் என்னய சொன்னேன்

பீ கேர்ஃபுல் என்னய சொன்னேன்

தலைநகரம் படத்தில் பீ கேர்ஃபுல் என்று சொல்லுவார். உடனே சுந்தர்.சி முறைத்துப் பார்த்ததும் என்னயச் சொன்னேன் என்று சொல்லி சமாளிப்பார்.

MOST READ: ஆண்களுக்கு செக்ஸில் எத்தனை வயதுக்குப் பின் திருப்தி இருக்காது? என்ன செஞ்சா பிரச்னை தீரும்?

அழகுல மயங்குறது இதுதானா?

அழகுல மயங்குறது இதுதானா?

தலைநகரம் படத்தில் சுந்தர்.சி உசுப்பேற்றி விட, உன் மாமா மாமா என்று ஹீரோயினைச் சுற்றிக் கொண்டு வருவார். அப்போது ஹீரோயினின் அருகில் போய் தன்னுடைய கொடூர முகத்தைக் காட்டியதும் இவர் மயங்கி விழுந்து விடுவார். உடனே அதையும் தனக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு, ணு அழகுல மயங்குறது இதுதானா? என்று பேசுவார்.

ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி

ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி

எதாவது ஒரு விஷயத்தை செய்து சொதப்பற மாதிரி இருக்கிற சமயத்துல வடிவேலுவோட இந்த ரிஸ்க் எல்லாம் ரஸ்க் சாப்பிடற மாதிரி என்ற டயலாக்கை சொல்லாதவர்கள் யார் இருக்க முடியும்?

வேணாம் எனக்கு கோவம் வராது

வேணாம் எனக்கு கோவம் வராது

இதுவும் வின்னர் படத்தில் வருகின்ற ஒரு காமெடி தான். அந்த படம் முழுக்க வடிவேலு தான் நிறைந்திருப்பார். ஏன் அவர் இல்லாத ஒரு பிரேம் கூட இந்த படத்தில் இல்லை. அதேபோல் படம் முழுக்க பஞ்ச் டயலாக் தான்.

MOST READ: வரதட்சணைக்காக ஒரு மாசம் பட்டினி போட்டே கொடூரமாக கொன்ற மாமியாரும் கணவரும்...

இன்னும் சில

இன்னும் சில

இது மட்டுமின்றி, இன்னும் பேமஸான வடிவேலு டயலாக்குகள் ஏராளமான கெட்டப்களும் இருக்கின்றன.

வடபோச்சு

என்ன கைய புடிச்சு இழுத்தியா

ஏராளமான மறுபடியும் மொதல்ல இருந்தா

என்னய வெச்சு காமெடி கீமெடி பண்ணலயே

அது போன மாசம்

இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தியே ஆள ரணகளமாக்கிட்டாங்க

இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது

சண்டைல கிழியாத சட்டை எங்க இருகு்கு

நீ ஆணிய புடுங்க வேண்டாம்

என் அக்கா ஒரு சூப்பர் பிகர்

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வவ்வ்வ்

இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Comedy Actor Vadivelu Famous Getups And Dialogues

Vadivelu is an Indian film actor, comedian and playback singer. Since the 1990s, he has performed in supporting and lead roles as a comedian in Tamil films where he is renowned for his slapstick comedies. His dialogues have become a part of Tamil lexicon.
Story first published: Monday, April 8, 2019, 14:53 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more