உங்கள் பாடி லாங்குவேஜ் - நடத்தையை பத்தி, நீங்க பிறந்த தேதி என்ன சொல்லுதுனு உங்களுக்கு தெரியுமா?

நம் உறவுகள், நண்பர்கள் என பலர் நம் நடத்தையை பற்றி அவர்களுடைய கருத்தை கூறியிருந்தாலும், உண்மையில் நீங்கள் யார் என்று உங்களுக்கு மட்டுமே தெரியும். மேலும் பலர் நம்முடைய நடத்தையின் நன்மை-தீமைகள் குறித்து

ஒவ்வொருவரும் பேசும் பொழுது வஞ்சத்தை மனதில் வைத்துக் கொண்டு, மரியாதையான, பண்பான வார்த்தைகளை வெளியே பயன்படுத்தினாலும், நாம் வெளிப்படுத்தும் உடல் மொழிகள் அதாவது பாடி லாங்குவேஜ் அல்லது நடத்தை, நாம் என்ன நினைக்கிறோம் என்பதை முன் நிற்போருக்கு தெளிவாய் காட்டி விடுகிறது. மனிதர்கள் செய்யும் செயல்கள், வெளிப்படுத்தும் வார்த்தைகள், அவர்தம் உடல்மொழிகள் என அனைத்தும் மனிதர்களின் மனதில் ஓடும் எண்ண ஓட்டங்கள் மற்றும் சிந்தனைகளை குறித்து கண்ணாடியில் தோன்றும் பிம்பம் போல, மனதின் நிலையை மற்றவர் அறிய உணர்த்திவிடுகின்றன.

Your Birth number unravels your body language - udal mozhi in tamil

நம் உறவுகள், நண்பர்கள் என பலர் நம் நடத்தையை பற்றி அவர்களுடைய கருத்தை கூறியிருந்தாலும், உண்மையில் நீங்கள் யார் என்று உங்களுக்கு மட்டுமே தெரியும். மேலும் பலர் நம்முடைய நடத்தையின் நன்மை-தீமைகள் குறித்து கூறினாலும், நம் பிறந்த நாள் நம்முடைய நடத்தையை பற்றி என்ன கூறுகிறது என்று இந்த பதிப்பில் படித்தறிவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எண்களும் நடவடிக்கைகளும்

எண்களும் நடவடிக்கைகளும்

நாம் பிறந்த நாட்களின் அடிப்படையிலேயே நம்முடைய பிற்கால வாழ்க்கை அமைகிறது; பிறந்த நாளை ஒட்டியே ஜாதக - ஜோசியங்கள் கணிக்கப்பட்டு எதிர்காலம் குறித்து விவரிக்கப்படுகிறது. ஒரு நிமிடத்தில் பலவித பாடி லாங்குவேஜ்களை பேசும்போது, செயல்களை செய்யும் பொழுது என பல நேரங்களில் வெளிப்படுத்துகிறோம்.

அவ்வாறு வெளிப்படுத்தும் பாடி லாங்குவேஜ்களை கொண்டு, எப்படிப்பட்ட குணம் கொண்டவர் என்று மற்றவர்களால் அறியப்படுகிறோம் என்று ஒருநாளும் நாம் சிந்தித்து இருக்க மாட்டோம். பிறந்த நாட்களை ஒருசில தொகுப்புகளாக பிரித்து, அந்தந்த நாட்களில் பிறந்தவர்கள் எவ்வித குணாதிசயம் கொண்டிருப்பர், எப்படிப்பட்ட குணம் கொண்டவர்களாக மற்றவர்களால் அறியப்படுவர் என்று அடுத்தடுத்த பத்திகளில் படித்தறியுங்கள்.

தொகுப்பு - 1

தொகுப்பு - 1

எந்தவொரு மாதத்தின் 1, 10, 19, 28 எனும் தேதிகளில் பிறந்த நபர்கள் அல்லது உங்கள் பெயரின் கூடுதல் 1 என்று இருந்தால், நீங்கள் நேருக்கு நேராக கண் பார்த்து பேசும் பழக்கம் உள்ளவர்களாக அல்லது அப்பழக்கத்தை விரும்புபவர்களாக விளங்குவீர்கள். வசதியற்ற அல்லது பிடிக்காத சூழலில் இருக்க நேர்ந்தால், அடிக்கடி கண்களை மூடிக்கொள்ளும் பழக்கம் இருக்கும். பதற்றம், மனஅழுத்தம் போன்ற உணர்வுகள் உங்களில் ஏற்பட்டால், கைகளை பிசைந்து கொண்டு நிற்பது அல்லது மடியில் அதாவது உங்கள் கால்களின் தொடை மீது கைகளை வைத்துக் கொண்டு இருப்பது போன்ற செயல்கள் உங்கள் பாடி லாங்குவேஜ்களாக வெளிப்படும். என்ன கூறியது உண்மை தானே?

தொகுப்பு - 2

தொகுப்பு - 2

நீங்கள் பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றிருந்து அல்லது உங்கள் பெயரின் கூடுதல் 2 என்று இருந்தால், புதிய நபர்களை அல்லது பொதுவான சந்திப்புகள் நடைபெறும் பொழுது, கைகுலுக்கி பேச்சை தொடங்குவது உங்களுக்கு வழக்கமான அல்லது பிடித்தமான விஷயமாக இருக்கும். பயந்த மற்றும் சந்தேகம் கொண்ட தருணங்களில் கையைக் கொண்டு வாய் பொத்தி நிற்பது போன்ற செயல்களை புரிவீர்; அதுவே நீங்கள் மனஅழுத்ததில் இருந்தால், கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு இருப்பீர். என்ன ரைட்டா?

தொகுப்பு - 3

தொகுப்பு - 3

3,12, 21, 30 எனும் பிறந்த தேதிகளை கொண்ட நபர்கள் அல்லது பெயரின் கூடுதலை 3 என்று கொண்டவர்கள் பேச்சு வார்த்தையின் பொழுது, உரையாடலின் பொழுது அடிக்கடி உதட்டைக் கடித்துக் கொண்டு இருப்பவராக விளங்குவீர். மேலும் உங்களுக்கு பிடிக்காத, இன்டெரெஸ்ட் இல்லாத பேச்சு வார்த்தையின் பொழுது அடிக்கடி காதுகளை தேய்த்துக் கொள்வீர். இந்த குணம் உங்களிடம் உள்ளது தானே?

தொகுப்பு - 4

தொகுப்பு - 4

உங்கள் பிறந்த தேதி 4, 13, 22, 31 போன்றவைகளில் ஒன்றாக இருந்து அல்லது உங்கள் பெயரின் கூடுதல் 4 என்று இருந்தால், மற்றவர்களை, புதிய நபர்களை சந்திக்கும் பொழுது ஒருவித இடைவெளியை மேற்கொள்வீர், இடைவெளியுடனேயே மற்றவர்களுடன் பழகுவீர்; நீங்கள் சந்தித்த நபர்களிடம் இருந்து பாதுகாப்பு உணர்வை பெறும் வரை அல்லது அந்நபர்களுடன் பாதுகாப்பாக உணரும் வரையில் நீங்கள் மேற்கொள்ளும் இடைவெளி அப்படியே வெற்றிடமாகவே இருக்கும்.

கால் சட்டையின் பைக்கட்டுகளில் அடிக்கடி கைகளை நுழைத்துக் கொண்டு செயல்படும் நபராக, மற்றவர்களுடன் உங்கள் விஷயங்களை பகிர அல்லது பேச விரும்பாத நபராக திகழ்வீர்.

தொகுப்பு - 5

தொகுப்பு - 5

5, 14, 23 தேதிகளில் பிறந்து அல்லது பெயரின் கூடுதல் 5 ஆகக் கொண்ட நபர்கள் அடிக்கடி உள்ளங்கைகளை தேய்த்துக் கொண்டே, பதற்ற உணர்வு கொண்டவர்களாகவே இருப்பர்; இந்த செயலை மற்றவர்களுடன் உரையாடும் பொழுதும் அடிக்கடி செய்வீர். மேலும் கைகளின் விரல்களை ஆர்ச் போன்று குவித்து பிரிப்பது, கைகளை அவ்வாறு செய்வது, கையின் விரல்களை ஒன்றோடொன்று தொட்டு மலைபோல் செய்து கொண்டு இருப்பது உங்களின் வாடிக்கையான நடத்தையாக இருக்கும்.

தொகுப்பு - 6

தொகுப்பு - 6

6, 15, 24 எனும் தேதிகளில் பிறந்த அல்லது பெயரின் கூடுதலை 6 எனக் கொண்ட மக்கள், பேசும் பொழுதும் உரையாடலின் பொழுதும் பக்கத்தில் எந்த ஒரு பொருள் இருந்தாலும் அதை பிடித்துக் கொண்டு, பைக்குள் கையை விட்டுக்கொண்டு அல்லது கையில் ஏதேனும் பொருளை பிடித்துக் கொண்டுதான் எந்த செயலையும் செய்வீர்; முக்கியமாக உரையாடுவீர். அது உங்களுக்கு பாதுகாப்பு உணர்வை தருவதாக, பய உணர்வை போக்குவதாக உணர்வீர். கோபமாக அல்லது பாதுகாப்பின்றி உணர்ந்தால், அடிக்கடி நகங்களை கடித்துக் கொண்டு நிற்பீர். என்ன சரியா?

தொகுப்பு - 7

தொகுப்பு - 7

உங்கள் பிறந்த தேதி 7, 16, 25 என்று இருந்தால் அல்லது பெயரின் கூடுதல் 7 என்று இருந்தால், மற்றவர் மீதுள்ள நம்பிக்கையை காட்ட கைகுலுக்கும் போது, ஒரு கையால் கைகளை குலுக்கி, இன்னொரு கையால் குலுக்கிய கைகளை மூடி உங்கள் நம்பிக்கையை மற்றவர்க்கு தெரிவிப்பீர். மேலும் பாதுகாப்பு உணர்வு தோன்றினால் அல்லது பாதுகாப்பு உணர்வு ஏற்படும் நபர்களிடம் மட்டும் உங்கள் உள்ளங்கைகளை காண்பிப்பீர்.

தொகுப்பு - 8

தொகுப்பு - 8

பிறந்த தேதி 8, 17, 26 என்று இருந்து அல்லது பெயரின் கூடுதல் 8 என்று இருந்தால், பேசும் பொழுது அடிக்கடி கட்டை விரலை உயர்திக் காட்டும் குணாதிசயம் கொண்டிருப்பீர்; மேலும் அவ்வாறு புரிவது நிலைமை அல்லது பேச்சு வார்த்தை உங்கள் கட்டுக்குள் இருப்பதாய் தோன்றும். மேலும் உங்களை நீங்களே கட்டுக்குள் கொண்டுவர ஒரு கையின் மணிக்கட்டை மற்ற கையால் பிடித்து உங்களை நீங்களே நிலை நிறுத்துவீர்.

தொகுப்பு - 9

தொகுப்பு - 9

9, 18, 27 எனும் தேதிகளில் பிறந்து அல்லது பெயரின் கூடுதல் 9 என்று இருந்தால், மற்றவர்களை வேலை ஏவும் பொழுது அல்லது மற்றவர்க்கு கட்டளை பிறப்பிக்கும் பொழுது, உங்கள் ஆணையை கேட்பவர்கள் நாடியை தாழ்த்தி இருக்கும் வண்ணம் உங்கள் கட்டளை அல்லது பேச்சை வெளிப்படுத்துவீர். மேலும் உங்களுக்கு பிடிக்காத பேச்சு வார்த்தையில் அடிக்கடி தோள்பட்டையை குலுக்கி நிராதரவை வெளிப்படுத்துபவராக திகழ்வீர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, July 30, 2018, 14:50 [IST]
Desktop Bottom Promotion