Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
திடீரென ட்விட்டரில் தங்கள் உள்ளாடை படங்களை பதிவிட்டு வரும் பெண்கள். ஏன்?
திடீரென ட்விட்டரில் தங்கள் உள்ளாடை படங்களை பதிவிட்டு வரும் பெண்கள். ஏன்?

ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால், அதற்கு அவள் உடுத்தும் உடை தான் காரணம் என்று நம் நாட்டில் மட்டும் தான் கூவிக் கொண்டு வருகிறார்கள் என்று பார்த்தால். இல்லை, இல்லை... உலகெங்கிலும் இப்படியான கீழ்த்தரமான பார்வை இருக்க தான் செய்கிறது என்று சமீபத்தில் அயர்லாந்து பெண் வழக்கறிஞர் ஒருவர் நிரூபித்திருக்கிறார்.
இதில் ஒரு கொடுமை என்னவெனில், டிஃபன்ஸ் வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் அந்த பெண், கற்பழிப்புக்கு ஆளான ஒரு பெண்ணை எதிர்த்து வாதாடும் போது, கற்பழிப்புக்கு காரணம் அந்த பெண் (பாதிக்கப்பட்ட பெண்) அணிந்திருந்த உள்ளாடை தான் என்று நீதிமன்றத்தில் வாதாடி இருக்கிறார்.
இந்த வாதம் குறித்த தகவல்கள் வெளிவர, அயர்லாந்து பெண்கள் வெகுண்டெழுந்து போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். மேலும், ட்விட்டரில் தங்கள் உள்ளாடை படங்களை பலர் பகிர்ந்தும் போராட்டத்தின் ஒரு பகுதியாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
கற்பழிப்பு!
27 வயது மிக்க ஒரு ஆண், 17 வயது மிக்க ஒரு இளம் பெண்ணை கற்பழித்துள்ளான். அவனுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு வழக்காட வந்த பெண் வக்கறிஞர் ஒருவர், கற்பழிப்புக்கு ஆளான அந்த 17 வயது பெண் உடுத்தி இருந்த கவர்ச்சியான உள்ளாடை தான் கற்பழிப்பு சம்பவத்திற்கு காரணம் என்று வாதாடி இருக்கிறார்.
நீதிமன்றத்தில்!
நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருந்த போது குற்றவாளி சார்பாக வாதாட வந்த வழக்கறிஞர், கற்பழிப்புக்கு காரணம் அந்த பெண்ணின் உள்ளாடை மற்றும் அது கவர்ச்சியாக இருந்தது தான் காரணம் என்று கூறி, அந்த உள்ளாடையை நீதி மன்றத்திலும் எடுத்து காட்டி வாதம் செய்திருக்கிறார். இதுவே, அயர்லாந்து பெண்கள் மத்தியில் பெருங்கோபம் உண்டாக காரணமானது.
பழி!
இந்த வாதத்தை அறிந்த அயர்லாந்து மக்கள் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகவும், அந்த பெண் வழக்கறிஞர்க்கு எதிராகவும் போராட்டக் களத்தில் குதித்துள்ளனர். இன்னும் எத்தனை காலத்திற்கு தான் கற்பழிப்பு சம்பவங்களுக்கு பெண்கள் மீதே பழி போடுவீர்கள். இதற்கு சட்டமும் ஒரு வகையில் பணிந்தே கிடைக்கிறது என்று பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
ஹேஷ்டாக்!
மேலும், போராட்டக் காலத்தில் குதித்திருக்கும் ஐரோப்பிய பெண்கள் #thisisnotconsent என்ற ஹேஷ்டாக்குடன் தங்கள் உள்ளாடைகளின் படங்களை ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் பதிவிட்டு தங்களுடைய எதிர்ப்பை வலிவாக வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அடுத்ததாக!
உலகில் #MeToo பெரும் விஸ்வரூபம் எடுத்து இன்னும் அடங்காத நிலையில், அடுத்ததாக #thisisnotconsent பெரும் போராட்டக் களத்தை சந்தித்துள்ளது. பாலியல் வன்புணர்வு, கற்பழிப்பு, தவறான முறையில் தீண்டல், voyeurism என பெண்களுக்கு எதிராக நடக்கும் பல குற்றங்களுக்கு, அவர்கள் உடுத்தும் உடை தான் காரணம், அது தான் குற்ற சம்பவத்தில் ஈடுபட தூண்டுகிறது என பழி போடுவது காலம், காலமாக நடந்துக் கொண்டே தான் இருக்கிறது.
உனக்கு என்ன?
பெண்கள் உடை உடுத்துவது அவர்கள் சுதந்திரம். இதில் யாருக்கும் தலையிட உரிமை இல்லை. பெண்கள் உடை உடுத்துவது கியூட்டாக இருக்கிறது கவர்ச்சியாக இருக்கிறது, செக்ஸியாக இருக்கிறது என்று கூறி எல்லைமீற இங்கே யாருக்கும் அனுமதி இல்லை.
உலகெங்கிலும்!
அயர்லாந்தில் நடந்த ஒரு நீதிமன்ற வாதம், மற்றும் அதனால் அயர்லாந்து பெண்கள் வெகுண்டெழுந்து போராட்டக் களத்தில் குதிக்க காரணமானது. இப்போது, அயர்லாந்து பெண்களுக்கு ஆதரவாக உலக நாடுகளை சேர்ந்த பெண்கள் தங்கள் ஆதரவை நேரடியாகவும், ஆன்லைன், சமூக தளங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications
