For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நோ பிரா டே'ன்னா என்ன? அன்னிக்கி என்ன பண்ணுவாங்க...? #NoBraDay

நோ பிரா டே'ன்னா என்ன? அன்னிக்கி என்ன பண்ணுவாங்க...? #NoBraDay

By John
|

நோ பிரா டே என்பது, ஏதோ அமெரிக்காவில் சப்வேவில் ஆண்டுக்கு ஒரு நாள் பேண்ட் அணியாமல் உல்லாசமாக திரிவது போன்ற கொண்டாட்ட தினமல்ல. இது மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாள். ஒவ்வொரு ஆண்டும் ஐம்பதாயிரம் பிரிட்ஸ் (Brits) பெண்கள் மார்பக புற்றுநோயினால் பாதிக்கப்படுகிறார்களாம்.

What is No BRA Day

ஐரோப்பியாவில் மார்பக புற்றுநோய் ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. எனவே, பெண்கள் மத்தியில் இதுக்குறித்த விழிப்புணர்வு மற்றும் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பது போன்ற விழிப்புணர்வினை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இந்த நோ பிரா டே அனுசரிக்கப்படுகிறது.

ஆண்டுக்கு, ஆண்டு இந்த நோ பிரா டேவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று பிரபலமாக அறியப்பட்டு வருகிறது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அக்டோபர் 13

அக்டோபர் 13

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 13 நாள் நோ பிரா டே கொண்டாட படுகிறது. அக்டோபர் மாதத்தை மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரித்து வருகிறார்கள். எனவே, இந்த மாதத்தின் நடுவான 13ம் தினத்தில் இந்த நோ பிரா நாள் கொண்டாடப்படுகிறது.

நன்கொடை!

நன்கொடை!

ஐரோப்பியாவில் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு உதவ மற்றும் சிகிச்சைக்காக நன்கொடைகள் பெருமளவில் திரட்டப்படுகிறது. அந்த வகையில் இந்த நோ பிரா டேவும் உதவி, நன்கொடை திரட்ட ஒரு நல்ல கருவியாக இருந்து உதவுகிறது.

50,000

50,000

ஒவ்வொரு ஆண்டும் பிரிட்ஸ்ல் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். தங்கள் வாழ்வின் ஏதோ ஒரு வயதில் / பருவத்தில் எட்டில் ஒரு பெண் பிரிட்ஸ்ல் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்.

எதற்கு?

எதற்கு?

மார்பக புற்றுநோய்க்கும் நோ பிரா டேவிற்கும் என்ன சம்மந்தம்? இதை ஏன் கொண்டாடுகிறார்கள். இந்த நோ பிரா டே இயக்கம் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது. சமூக தளங்களில் முக்கியமாக பெண்கள் மத்தியில் இந்த நோ பிரா டே விழிப்புணர்வு பிராச்சாரம் கொண்டு போய் சேர்க்கப்படுகிறது.

நோக்கம்!

நோக்கம்!

இந்த நோ பிரா டே விழிப்புணர்வு பிரச்சாரத்தின் நோக்கமே, பெண்களை மார்பக பரிசோதனைக்கு கொண்டுவர செய்வது தான். நிறைய பெண்கள் மார்பகபுற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள கூச்சப்படுகிறார்கள். மார்பக புற்றுநோய் இருக்கிறதா என்பதை ஸ்க்ரீனிங் டெஸ்ட் மற்றும் சில அறிகுறிகளை வைத்து தான் கண்டறிய முடியும்.

பர்பிள்!

பர்பிள்!

பிரா அணியாமல் வர விரும்பாத பெண்களும், ஆண்களும் கூட இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் கலந்துக் கொள்ள வரவேற்க படுகிறார்கள். அக்டோபர் 13ம் தேதி பர்பிள் நிறத்திலான ஏதேனும் ஒரு உடையை அணிந்து கொண்டு இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் பங்கெடுத்துக் கொள்ளலாம்.

பரிசோதனை!

பரிசோதனை!

மார்பக புற்றுநோய் இருக்கிறதா என்று கண்டறிய மாமோகிராம் ஸ்க்ரீனிங் (mammogram screening) பர்சிசொதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த தினத்தில் பெண்களை இந்த பரிசோதனை செய்துக் கொள்ள அறிவுறுத்தியும், உத்வேகப்படுத்தியும் நிகழ்சிகள், பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், மார்பக புற்றுநோயினை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே கண்டறிந்துவிடலாம் என்றும் கூறுகிறார்கள்.

நன்கொடை!

நன்கொடை!

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் வெறுமென பங்கெடுத்துக் கொள்வது மட்டுமின்றி. பிறர் மார்பக புற்று நோயில் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களுக்கு உதவும் வகையில் நன்கொடை வழங்கியும், பிறரை நன்கொடை வழங்க உத்வேகப்படுத்தியும் நிதி திரட்டுகிறார்கள். இதற்காக நிறைய நிகழ்ச்சிகள் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் நடத்தப்படுகிறது.

வேறு என்ன?

வேறு என்ன?

நோ பிரா டே டொராண்டோ, கனடா போன்ற பகுதிகளில் வெகுவாக கொண்டாடப்படுவதை காண இயல்கிறது. பிரா என்பது உடுத்தும் உள்ளாடை மட்டுமல்ல. Breast Reconstruction Awareness Day என்பதையும் இது குறிக்கிறது. பெண்கள் மத்தியில் மார்பக புற்றுநோய் சிகிச்சையின் போது, முலை நீக்கம் ஆகி இருந்தால், பிறகு அவர்களது மார்பினை மறுஉருவம் பெற செய்தல் குறித்து விழிப்புணர்வும் இவர்கள் நடத்துகிறார்கள்.

நிகழ்சிகள்!

நிகழ்சிகள்!

கடந்த 2014ம் ஆண்டு இந்த நோ பிரா டே உலகில் முப்பது நாடுகளில் கொண்டாடப்பட்டது என்று அறியப்படுகிறது. இந்த நோ பிரா டேவில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களிடம் கேள்வி, பதில் மற்றும் சிறப்பு உரை, பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் மற்றும் அதில் இருந்து மீண்டு வந்த உயிர் பிழைத்து பிறருக்கு உத்வேகம் அளிக்கும் நபர்கள் போன்றவர்கள் பங்கெடுத்துப் பேசிகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What is No BRA Day

Do you know What is No BRA Day? It is BRA (Breast Reconstruction Awareness) Day. The movement started in 2011 and largely takes place on social media, where women use the hashtag #nobraday to campaign.
Desktop Bottom Promotion