For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  டூ-வீலர் ஓட்டிக் கொண்டிருந்த பெண் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து.... பட்டப் பகலில் கொடூரம்!

  By Staff
  |

  இந்த சம்பவம் பத்து நாட்களுக்கு முன்னர் இந்தூரில் நடந்துள்ளது. ஆகார்ஷி ஷர்மா எனும் இளம்பெண் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆகார்ஷி தனது ஆக்டிவா டூ-வீலரில் ஒரு பரபரப்பான சாலையில் சென்றுக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அவர் பின் வேறொரு வாகனத்தில் வந்த இரு ஆண்கள், அவரை கண்டு... இதுதான் ஆடையா... மீது எங்கே என்று கேட்டு... அவரது ஸ்கர்ட்டை பிடித்து இழுத்துள்ளனர்.

  Two Men Molested a Girl While She Driving a Two Wheeler on Road!

  எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த அசம்பாவித செயலால் நிலை தடுமாறிப் போன ஆகார்ஷி ஷர்மா சாலையில் செல்ல, செல்ல தனது டூ-வீலரில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். ஆகார்ஷியின் பின்னே வந்துக் கொண்டிருந்த அவரது தோழி, தோழர்கள் இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரை அருகில் இருந்து ஒரு காபி ஷாப்பிற்கு அழைத்து சென்று அமைதிப் படுத்தினர்.

  இந்தியா நிஜமாகவே பெண்களுக்கு உகந்த பாதுகாப்பான நாடுதானா? அல்லது இதுப் போன்ற சில கேடுகெட்ட பிறவிகளால் சீர்கெட்டு வருகிறதா? என்ற சந்தேக கேள்விகளை எழ இந்த சம்பவம் காரணமாக இருக்கிறது.

  ஒருபுறம் கற்பழிப்புகள் அதிகரித்து வர, மறுபுறம் இப்படியான சம்பவங்களாலும் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள்.

  தனக்கு நேர்ந்த கொடுமையை ஆகார்ஷி ஷர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  பரபரப்பான சாலை...

  இந்த சம்பவம் நடந்தது இந்தூரின் ஒரு பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் ஒரு சாலையில். மக்கள் நிற்கவும், என்ன நடக்கிறது என்று திரும்பிப் பார்க்கவும் கூட யோசிக்க முடியாத அவசர கதியில் அந்த சாலையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சம்பவம் நடந்த போது, யாருமே அந்த இருவரை பிடித்து நிறுத்த முயற்சிக்கவில்லை. எனது (ஆகார்ஷி ஷர்மா) ஸ்கர்ட்டை பிடித்து இழுத்துவிட்டு அவர்கள் தப்பித்து ஓடிவிட்டார்கள். என்னால் அவர்களது வண்டி எண்ணை கவனிக்க முடியவில்லை. இதுநாள் வரை நான் இப்படி உதவியற்ற நிலையை உணர்ததே இல்லை. நான் எதையும் சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும் வகையிலான பெண்ணும் கிடையாது. அந்த கில்லாடிகள் எளிதாக தப்பித்து ஓடிவிட்டார்கள். என்னால் எதையும் செய்ய முடியவில்லை.

  காபி ஷாப்!

  என் பின்னாடி வந்துக் கொண்டிருந்த நண்பர்கள் என்னை ஒரு காபி ஷாப்பிற்கு அழைத்து சென்றனர். என்னால் முடிந்த வரை அந்த சம்பவத்தை மறக்க நினைத்தேன். நான் பலவீனமான பெண் என்பதால் அல்ல, அந்த முப்பது நிமிடங்களில் நான் என்ன செய்வது என்ற தெளிவான நிலையில் இல்லை. நான் உணர்ச்சியற்ற நிலையில் இருந்தேன். என்னால் எதையும் பேசக் கூட முடியவில்லை.

  என் விருப்பம்...

  நான் என்ன உடை உடுத்த வேண்டும் என்பது எனது விருப்பம். நான் ஸ்கர்ட் அணிந்திருக்கிறேன் என்பதற்காக என்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தலாம் என்ற உரிமையை அந்த இரண்டு இளைஞர்களுக்கு யார் கொடுத்தார்கள். இந்த சம்பவம் முடிந்து நான் சாலையில் விழுந்துக் கிடந்த போது ஒரு நடுவயது ஆண் என்னிடம் வந்து, நீ இப்படியான உடை அணிந்திருந்த காரணத்தால் தான் இது நடந்தது என்று கூறினார். நான் இதுவரை இப்படி எரிச்சலோ, அவமதிப்போ அடைந்ததே இல்லை.

  ஒருவேளை தனியாக இருந்திருந்தால்...

  நான் எனக்கு நேர்ந்த இந்த கொடுமையான சம்பவத்தை இன்ஸ்டாகிராமில் லைவில் வந்து பதிவிடலாம் என்று கருதினேன். ஒருவேளை நினைத்துப் பாருங்கள். நான் அப்படியான பிஸியான சாலையில் செல்லாமல், ஒரு ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் சென்றிருந்தால் என்ன நடந்திருக்கும். ஒருவேளை அவர்கள் என்னை நிறுத்தி, எனது ஆடையை இழுத்து மானபங்கம் செய்திருப்பார்கள் அல்லவா?

  பல பெண்கள்...

  இப்படியான சூழலை, தர்ம சங்கடமான நிகழ்வை பல பெண்கள் கடந்து வருகிறார்கள். ஆனால், அவர்களில் பெரும்பாலானோர் இதுக்குறித்து பேச தயக்கம் கொள்கிறார்கள். ஏன்? சங்கடப்படுகிறார்கள். ஆம்! நாம் இப்படி வாய் திறக்காமல் இருப்பதால் தான், அவர்களை போன்ற இளைஞர்கள் தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தைரியம் கொண்டிருக்கிறார்கள்.

  சி.சி.டி.வி

  நான் அதே இடத்திற்கு மீண்டும் சென்று சோதனை செய்து பார்த்தேன். ஆனால், அந்த இடத்தில் சிசிடிவி எதுவும் இல்லாமல் போனது எனது துரதிர்ஷ்டவசமாக போனது. நான் இதுக்குறித்து நாளை (ஏப்ரல் 24) போலீஸில் புகார் அளிக்கவிருக்கிறேன். போலீஸால் அவர்களை கண்டுபிடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ஆனால், நான் இதை செய்யவில்லை என்றால்... நான் தோற்றுப் போவேனோ என்று கருதுகிறேன்.

  என்ன நடக்குது இந்த நாட்டுல...

  என்ன நடக்குது இந்த நாட்டுல...

  நான்கு மாதமே ஆன பிறந்த குழந்தையில் இருந்து பதின் வயதை கூட நெருங்காத இளம் சிறுமிகள் வரை வயது வேறுபாடு இன்றி பல பெண்கள் நம் நாட்டில் கற்பழிப்பிற்கு ஆளாகிறார்கள். ஆண்டுக்கு நாற்பதாயிரம் கற்பழிப்புகள் இந்தியாவில் நடப்பதாக சர்வே கூறுகிறது. இதுப்போக எண்ணற்ற கற்பழிப்பு வழக்குகள் மானம், கௌரவம் என்ற காரணத்தால் மூடி மறைக்கப்படுகின்றன. மற்றொரு புறம், சாதி பெயர் சொல்லி கற்பழித்து அதை ஊடக வெளிச்சதிற்கே வராமல் தடுத்துவிடுகிறார்கள்.

  இன்னும் எத்தனை நாட்களுக்கு?

  இன்னும் எத்தனை நாட்களுக்கு?

  இது மட்டும் தானா என்று பார்த்தால்... வட இந்தியாவில் வரவர பெண்களை சாலையில் வைத்து தங்கள் செய்கையாலும், பார்வையாலும், வார்த்தைகளாலும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கும் சம்பவங்கள் நாளுக்கு, நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

  இந்த நாடு பெண்களுக்கான நாடு இல்லையா? இந்திய பெண்களின் பாதுகாப்பு எங்கே போனது. எப்போது ஒரு பெண் நடு இரவில் தனியாக செல்கிறாளோ அப்போது தான் முழு சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர்.

  இன்றைய நிலையில் பட்டப்பகலில் ஒரு பெண் தனியாக சென்று வருவதே கடினமாக இருக்கிறதே? இதற்கும் அவர்களது ஆடை தான் காரணம் என்பீர்களா? நான்கு மாத குழந்தை என்ன ஆடை அணிந்திருந்தது என்பதற்காக கற்பழித்தார்கள்?

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Two Men Molested a Girl While She Driving a Two Wheeler on Road!

  Two Men Molested a Girl While She Driving a Two Wheeler on Road!
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more