TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
இப்போ இருக்குற சிஸ்டம் சரியில்லை என்பதை சாட்டையடியாக பிரதிபலிக்கும் புகைப்படத் தொகுப்பு!
அரசியல், அறிவு, பெற்றோர், பிள்ளை வளர்ப்பு, காதல், வாழ்வியல், அந்தஸ்து, மூதாதையர், வருங்காலத்தினர் என பல வகைகளில் பல மாற்றங்கள் நாம் கண்டுள்ளோம். அதில் நேர்மறை தாக்கங்களை காட்டிலும் எதிர்வினை தாக்கங்கள் தான் அதிகமாக இருக்கிறது.
நாம் இது வரை செய்த தவறுகள், நம் முன்னோர்கள் செய்தவை, நாம் செய்ய தவறியவை என பலவற்றை ஒற்றை படத்தில் சாட்டையடி பதிவு போல எடுத்துரைக்கும் படங்களின் தொகுப்பு தான் இங்கே நாம் காணவுள்ளோம்...
தலைவன்!
மேலாளர், மேல் அதிகாரி, அணி தலைவரில் துவங்கி அரசியல் தலைவர்கள் வரை நாம் யாரையும் ஒரு பாதியை கண்டு எடைப் போட்டுவிடக் கூடாது, நம்மளில் ஒருவராக பிரபலிக்கும் அவர்கள், நம்மையே கழற்றி எரிய, வேரோடு பிடிங்க காத்திருக்கலாம். எனவே, முகத்தை மட்டுமே காணாதீர், புறத்தையும் பார்க்க வேண்டியது இன்று கட்டாயமாக இருக்கிறது. ஏனெனில், இந்த உலகம் ஏமாறுபவர்களை தான் ஏமாளி என்கிறது, ஏமாற்றுபவனை கெட்டிக்காரன் என்கிறது.
பிச்சை!
நம் ஊரில் ஒரு பழமொழி இருக்கிறது, அதாவது பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்பார்கள். இதை சிலர் அவர் கைகளில் இருக்கும் பாத்திரம் அறிந்து என்றும் பொருள் கொள்வதுண்டு. அப்படியே எடுத்துக் கொண்டாலும் அவன் கையில் இருக்கும் பாத்திரத்தை வைத்து அவன் நிஜமாலே பிச்சைக் காரனா, அல்ல பிச்சை எடுப்பது போல நடிப்பவனா என்பதை அறிந்துக் கொள்ள இயலும். ஆனால், உண்மை பொருளானது, அவனது குணாதிய, பாத்திரத்தை அறிந்து பொருள், அறிவு, உணவு எது அவனுக்கு தேவையோ அதை பிச்சை இட வேண்டும். ஆனால், இன்று உதவுவதை கூட செல்ஃபீ எடுத்து வெளிப்படுத்துக் கொள்கிறார்கள். உபயம் போர்டு வைத்து உதவுவோருக்கு பிறந்தவர்கள் செல்ஃபீ எடுத்து பிரபலம் தேடுவது ஒன்றும் வியக்கத்தக்கது அல்ல.
அறிவு!
நாம் அடுத்த சந்ததியினருக்கு பணம் சேர்ப்பதில் காட்டிய ஆர்வத்தில் பாதியாவது அறிவு சேர்ப்பதில் காட்டியிருந்தால் இன்று இந்த தலைமுறை இன்னும் பன்மடந்து நல்லப்படியாக வளர்ந்திருக்கும். பாசம், உறவு, காதல், மனிதம் என பலவற்றை நாம் சேகரிக்க மறந்துவிட்டோம். அதன் விளைவுகளே இன்று சமூகத்தில் நடக்கும் பல உறவுகள் சார்ந்த கொடுமைகளுக்கு கருவாக அமைந்துள்ளது.
சிஸ்டம்!
இதுதான் நமது சிஸ்டம். இதுதான் சரி, இதை படித்தால் தான் நீ புத்திசாலி, இந்த விளையாட்டில் நீ கில்லாடியாக இருந்தால் தான் கோடிகள் கிடைக்கும் இல்லையேல் தெருக்கோடி தான் என ஒரு வரையறை வரைந்து வைத்துவிட்டோம். அவனிடம் வேறு நல்ல திறமை இருந்தாலும், அதை செல்லாக்காசாக்கி விடுகிறோம்.சிஸ்டம் என்பது ஃபிரமாக இருக்கக் கூடாது, அது க்லேவாக (களிமண்) இருக்க வேண்டும்.
தேர்வு!
நமது சந்தோஷம் , மகிழ்ச்சி, துக்கம், வெற்றி, தோல்வி என அனைத்திற்கும் நாம் தான் காரணம், வாழ்க்கையில் நாம் எந்த பக்கம் பயணிக்கிறோம், பயணிக்கும் வழியில் எந்த திசையில் நமது பார்வையை செலுத்துகிறோம் என்பதில் தான் நமது வாழ்க்கை சிறப்பாக அமைகிறதா? சோர்வாக அமைகிறதா? என்பது நிலை பெறுகிறது. எனவே, தேர்வை சரியாக தேர்வு செய்யுங்கள்.
பொய்!
இந்த சமூகத்தில் எனது அந்தஸ்து, எனது தகுதி என இல்லாத மாயையை கட்டிக் கொண்டு அதை காத்திடவும், மற்றவர்களை நம்ப வைக்கவும் பல பொய்கள் கூறிவருகிறோம். பாத்ரூமை தவிர வேறு எந்த இடத்திலும் அதிகப்படியான மக்கள் உண்மையாக இருப்பதில்லை. உண்மைகள் தான் நம்மை சரியாக உருவமாக்கும். பொய்கள் என்றுமே கானல் நீர் தான்.
ஒற்றுமை!
ஒற்றுமை ஒன்று இருந்தால் போதும், இன்று இந்த நாட்டில் தண்ணீர் பிரச்சனையில் இருந்து பலவற்றுக்கு மனிதர்கள் அடித்துக் கொண்டிருக்க அவசியமே இருக்காது. ஒற்றுமை மட்டும் இருந்திருந்தால் நம் உலகில் உலகப் போர்களே உருவாகி இருக்காது. ஒற்றுமை தான் சமூகத்தின் பலம். அந்த அஸ்திவாரம் தான் இப்போது ஆட்டம்க் கண்டுக் கொண்டிருக்கிறது.
பிரச்சனை!
பக்கத்து வீட்டுக் காரனுக்கு தானே பிரச்சனை, தஞ்சாவூர்ல இருக்க விவசாயி தான் கஷ்டப்படுறான், எங்கயோ இருக்க சிரியாவுல தான போர்னு நாம் அடுத்த அதே நிலை நமக்கும் வரலாம் என்பதை மறந்து, மற்றவர்கள் துயரப்படும் உதவாமல் வாய் மூடி இருப்பது தான் பெரிய தவறு. அதனால் ஏற்படும் தாக்கத்தை நாம் அனுபவித்தாக வேண்டும்.
மன அழுத்தம்!
சென்ற தலைமுறை நரைமுடி முளைத்த பின்னும் அன்பும், காதலும் மட்டுமே அதிகம் கொண்டு, மன அழுத்தம் என்றால் என்ன என்றே தெரியாமல் வாழ்ந்து, மடிந்தனர். ஆனால், இன்று நம்மால் மொபைல் பேட்டரி டவுனனால் கூட தாங்கி கொள்ள முடிவதில்லை.. ஒரு ஃபேஸ்புக் பதிவிற்கு நூறு லைக் வராவிட்டால் மன அழுத்தம். தனக்கு பிடித்த அணி விளையாட்டில் தோல்வி அடைந்துவிட்டால், தனக்கு பிடித்த நடிகரின் படம் வசூல் செய்யாவிட்டால், அதை ஒருவன் கேலி செய்துவிட்டால் அவ்வளவு மன அழுத்தம். தயாரிப்பாளரை காட்டிலும் அதிகம் மன அழுத்தம் கொள்பவர்கள் இவர்களாக தான் இருக்கிறார்கள்.
பாதை!
நமக்கான பாதை இதுதான் என்று தேர்வு செய்துவிட்டால், அதன் பிறகு வேறொருவரின் பாதையில் நாம் கவனம் செலுத்தக் கூடாது. நாம் செய்யும் பெரிய தவறே, பயணிக்கும் போது எதிரே போகும் வாகனங்களின் மீது கவனம் செலுத்துவது தான். அட அந்த கார் நல்லா இருக்கே, அத வாங்கி இருக்கலாமே என்று எண்ணி, இன்று, இந்த நொடியில் உங்களை சொகுசாய் அழைத்து சென்று கொண்டிருக்கும் காரை நினைக்க மறந்துவிடுவோம். பிறகு விபத்தில் மாட்டிக் கொண்டு புலம்புவோம். உங்கள் பாதைக்கு, உங்கள் பாதையில் உங்களுக்கு எதுவெல்லாம் காத்திருக்கிறதோ, அவை எல்லாம் நிச்சயம் கிடைத்தே தீரும். மற்றவர் பாதையில் பயணிக்க நினைக்க வேண்டாம், அது நீங்கள் சென்றடைய வேண்டிய இடத்திற்கு கூட்டி செல்லாது.
பணம்?
நிறைய படங்களில் நடித்துக் கொண்டே இருந்ததால், எனது குழந்தைகள் வளர்ந்ததை என்னால் பார்க்க முடியவில்லை, அவர்களுடன் நான் நிறைய நேரம் செலவழிக்க முடியவில்லை என்று கூறி தான் மூன்றாவதாக ஒரு மகன் பெற்றெடுத்தார் ஷாரூக்கான். வேலை, பணம் எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும். ஆனால், அதைவிட முக்கியமானது வாழ்க்கையின் சின்ன சின்ன தருணங்கள் அவை மீண்டும் நமக்கு கிடைக்காது. ஏனெனில் அது காலம் மற்றும் நேரம் சார்ந்தது. ஒருமுறை இழந்தால், இழந்தது தான்.
நல்லவன்? கெட்டவன்?
நம் சமூகத்தில் நடக்கும் மற்றுமொரு பெரிய குற்றம் இது. பிளாஸ்டிக் டப்பாவில் உணவு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு கேடு. ஆனால், அதை அறிந்து கூட்டத்தில் ஒருவன் மட்டும் எவர்சில்வர் அல்லது தூக்கு டப்பாவில் சாப்பாடு சாப்பிடுகிறான் எனில், அவனை ஏளனமாக பார்ப்போம். அடச்சீ இதுலயா இவன் சாப்பிடறான் என கேவலமாக காண்போம். ஆனால், உண்மையில் தவறு செய்பவர்கள் நாமாக தான் இருப்போம். இது சாப்பாடு விஷயத்தில் மட்டுமல்ல, வாழ்வியலின் பல விஷயங்களுக்கு பருந்தும்.
எதிர்காலம்...
இந்நாள் கூடிய சீக்கிரம் வரும். நாம் இல்லை எனிலும் நமது குழந்தைகள் அல்லது பேரன்கள் இப்படியான வாழ்க்கையை தான் வாழ போகிறார்கள். நமது அப்பா, தாத்தா யாரும் நீரை வடிக்கட்டி குடிக்கவில்லை. நாம் தான் நீரையும், இப்போது காற்றையும் ஃபில்டர் செய்து உட்கொண்டு வருகிறோம். அடுத்த தலைமுறைக்கு நாம் விட்டு செல்லும் சாபம் இந்த உலகம் மற்றும் சுற்றுப்புற சூழல்.
தவறு!
மீண்டும் அதே கதை தான்... நமது அப்பா, தாத்தா நமக்காக மரம் நட்டு சென்றனர். அதை கொண்டு நாமும், நமது குழந்தைகளும் சந்தோஷமாக இருக்கிறோம். நன்றி கூட தெரிவிக்கிறோம். ஆனால், அவர்கள் செய்த செயலை தான் நாமும் செய்ய மறந்துவிட்டோம். அவர்கள் மரம் வளர்த்தனர் நாம் மரங்களை வெட்டிக் கொண்டு இருக்கிறோம்.