சொந்த மருமகளை சமையல் அறையில் வைத்து மானபங்கப்படுத்திய மாமனார் - வீடியோ!

Posted By: Staff
Subscribe to Boldsky

நிச்சயம் இந்த உலகம் பெண்களுக்கானது அல்ல. இது பெண்களுக்கு பாதுகாப்பான உலகம் அல்ல. ஆண்களை வலிமையாக அமைத்தது பெண்களை பாதுகாக்க, பலாத்காரம் செய்வதற்கு அல்ல என்று திரைப்படத்தில் வசனமாக வரும் போது நம் முகத்தில் ஓங்கி அறைவது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?

சகோதரி, காதலி, அம்மா, மனைவி, மகள் ஏன், பாட்டியாக என எந்த தோற்றத்தில், உறவத்தில் என்ன உடை உடுத்தி இருந்தாலும் கூட எப்படியாவது அவர்களை துச்சாதனன் போல துயிலுரித்திட வேண்டும் என்ற எண்ணம் கொண்ட ஆண்கள் கூட்டம் இங்கே உலகம் முழுக்க பரவி இருக்கிறது. சிலர் மனதளவில் துச்சாதனன், சிலர் செயல் வடிவத்தில் துச்சாதனன்.

வெளி ஆண்களால் மட்டும் தான் ஒரு பெண் பாதிக்கப்படுகிறாளா? என்றால்.. இல்லை. தனது சொந்த் பந்தங்களாலும் மன வேதனைக்கு உள்ளாகிறாள். மாமனார், சகோதரன், மைத்துனன் என பல்வேறு உறவு வேடங்களில் திரியும் ஆண்களும் கூட தன் குடும்பத்தை சார்ந்தவள் அவள் என்ற உணர்வின்றி தங்கள் பார்வையாலும், சில சமயம் செயலாலுமே கூட துணிந்து அவளை மானபங்கப் படுத்துகிறார்கள்.

அப்படியாக ஜம்சேத்பூரில் தனது சொந்த மாமனாரால் மானபங்கத்திற்கு ஆளாகி வந்த மருமகள், ஒரு எல்லையில் வெகுண்டேழுந்து அவரது செயலை வீடியோ எடுத்து சமூக தளங்களில் பகிர்ந்துள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஜம்சேத்பூர்!

ஜம்சேத்பூர்!

இந்த நிகழ்வை காணும் போது மாமனார் - மருமகள் உறவென்பது கூட அச்சத்திற்குரியது தான் என்ற எண்ணம் எழுகிறது. ஜம்சேத்பூரை சேர்ந்த மாமனார் ஒருவர் தனது சொந்த மருமகளை பாலியல் ரீதியாக மானபங்கப்படுத்திய விஷயம் தற்போது தெரியவந்துள்ளது.

தவறான எண்ணம்!

தவறான எண்ணம்!

பாதிக்கப்பட்ட அந்த பெண் (மருமகள்) நீண்ட காலமாக தனது மாமனார் என்னை தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வந்தார் என்றும். அவர் தன்னைப் பலமுறை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார் என்றும் தெரிவிததுளாளர். மேலும், தன்னிடம் ஆபாசமான முறையில் அவர் பலமுறை பேசியுள்ளார் என்றும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

முன்னரே!

முன்னரே!

மாமனார் இப்படி தன்னிடம் ஆபாசமாக நடந்துக் கொள்கிறார் என்பதை இதற்கு முன்னரே பலமுறை தனது உறவினரிடம் கூறியுள்ளார் இந்த பெண்மணி. ஆனால், அவர்கள் அந்த காமுகனை கண்டிக்காமல், இந்த அபலைப் பெண்ணை கண்டித்து அனுப்பியுள்ளனர். இதை அட்வான்டேஜாக எடுத்துக் கொண்ட அந்த காமுகன் தனது மருமகளை மீண்டும் மீண்டும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளான்.

பெற்றோரிடம்!

பெற்றோரிடம்!

புகுந்த வீட்டில் யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பதால், தனது பெற்றோரிடம் சென்று முறையிட்டுள்ளார் அந்த அப்பாவி பெண்மணி. அவர்கள், புகந்த வீட்டில் இருந்து வெளியே வந்தால் தவறு, சமூகம் தவறாக பேசும். அட்ஜஸ்ட் செய்துக் கொள் என்று கூறியுள்ளனர். மேலும், நேரம் வரும் போது எல்லாம் மாறிவிடும் என்று ஆறுதல் கூறி அனுப்பியுள்ளனர்.

ஹோலி!

ஹோலி!

தனது வீட்டுக்கு சென்ற அந்த மருமகள். ஹோலி பண்டிகை முடித்து மீண்டும் புகுந்த வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த காமுக மாமனார் மீண்டும் தனது மருமகளை தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளார். ஒருக்கட்டதில் இனி யாரையும் நம்பி பயனில்லை என்று முடிவு செய்த அந்த பெண், இதற்கான ஆதாரம் திரட்ட முடிவு செய்தார்.

புகார்

புகார்

தான் சமையல் அறையில் சமைத்துக் கொண்டிருக்கும் போது, தனது மாமனார் தன்னிடம் தவறாக நடந்துக் கொள்வதை தைரியமாக வீடியோ எடுத்த அந்த பெண்மணி, அதை தனது பதிவு செய்தார். அந்த வீடியோவை தனது பெற்றோருக்கு அனுப்பினார்.

அந்த வீடியோவை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

எதிர்ப்பு!

எதிர்ப்பு!

ஆரம்பத்தில், பாலியல் ரீதியாக துன்புறுத்துவதை எதிர்த்து பேசியதற்கு, நான் உன் தானே வீட்டு செலவுகளுக்கு பணம் தருகிறேன். நீ என்னை திருப்திப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார் அந்த காமுக மாமனார்.

இப்போது காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு, நான் என் மருமகளை பாசமாக விரும்புகிறேன். அன்பாக கட்டியணைப்பது தவறில்லையே என்று பதில் கூறியுள்ளார்.

வீடியோ!

மாமனார் - மருமகள் உறவு என்பது இன்னொரு அப்பா - மகள் உறவு போன்றது. வெட்கமே இல்லாமல், மாட்டிக் கொண்ட பிறகு அன்பாக கட்டிப்பிடித்தேன் என்று கூறும் இது போன்ற காமுகர்களால் தான். சமூகத்தில் உறவுகள் மத்தியிலான பிணைப்பு குறைந்துக் கொண்டே போகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Daughter in Law Captured Video of Her Father in Law Who Sexually Abusing for Long Time!

Daughter in Law Captured Video of Her Father in Law Who Sexually Abusing for Long Time!