Latest Updates
-
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரர்கள் ஒரே நேரத்தில் பல வேலைகளை சரியாக செய்யும் திறமைசாலிகளாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
எச்சரிக்கை! உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப அசால்ட்டா இருக்காதீங்க.. -
ஹிரோஷிமா-நாகசாகியில் வெடித்த அணுகுண்டில் எத்தனை பேர் இறந்தார்கள்? உயிர் பிழைத்தவர்கள் நிலை என்னவானது தெரியுமா? -
18 ஆண்டுகளுக்கு பின் சிம்ம ராசியில் இணையும் சூரியன்-கேது: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது -
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
பணத்துக்கு பஞ்சமே இல்லாத ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மே மாதம் எப்படி இருக்கப்போகிறது?..
மற்றவர் ஆதிக்கத்தை சிறிதும் பொருப்படுத்தாமல் சுய ஈடுபாட்டுடன் செயல்படும் ரிஷப ராசி அன்பர்களே.
உங்கள் பஞ்ச பூதம் நிலமும் மற்றும் ராசி கோள் வெள்ளியும் இணைந்து உங்கள் ராசியை ஆளுகிறது. இயற்கையாகவே நீங்கள் நிலத்தை போல் பொறுமையும் பெரிய கனவுகள் ஏதும் இல்லாமல் காணப்படுவீர்கள். உங்கள் ராசியின் பலன்களால் உங்களுக்கு மிகப்பெரிய அனுகூலங்கள் கிட்டும்.

அதே நேரத்தில் நீங்கள் அகங்காரம், பேராசை, மந்தமான மன நிலை மற்றும் பிடிவாத குணத்துடன் காணப்படுவீர்கள். எனவே சில நேரங்களில் இது குறித்து இறைவனிடம் பிரார்த்தனையும் மேற்கொள்வீர்கள். அதனால் தான் இந்த மாதம் உங்கள் ராசி நாதன் உங்களுக்கு எந்த மாதிரியான அணுகூலன்களை கொடுக்கப் போகிறார் என்பதை தொழில் ரீதியாக, உடல் நலம், பண வரவு மற்றும் குடும்ப நிலை, அதிர்ஷ்ட எண், தேதி மற்றும் நிறங்கள் இவற்றின் அடிப்படையில் உங்களுக்கு நாங்கள் கூறப் போகிறோம். இது உங்களுக்கு வரப் போகிற காலத்தை நன்கு புரிந்து கொண்டு வெற்றி காண உதவும்.
உடல் நலம்
இந்த மாதத்தில் நீங்கள் வயிறு மற்றும் தோல் சம்பந்தமான உடல் நல பாதிப்பை சந்திக்க கூடும். வழக்கமான வீட்டு வைத்தியங்கள் பலன் தராது. உடல் நலத்திற்கென்று நிறைய பணங்கள் விரயமாகும். எனவே உங்கள் உடல் நலத்திற்காக கொஞ்சம் பணத்தை சேர்த்து வைத்து கொள்வது நல்லது. அது உங்களுக்கு நன்மை அளிக்கும்.
தொழில்
இந்த மாதம் உங்களுக்கு தொழில் ரீதியாக முன்னேற்றம் தரப் போவதில்லை. குறைந்த வேலைப் பளு இருந்தாலும் உங்கள் லட்சியத்தை அடைய முடியாமல் தொழிலில் சிரமப்படுவீர்கள். மனதிற்கும் திருப்தி ஏற்படாது. தொழில் ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொண்டாலும் அது உங்களுக்கு பலனளிக்காது. அதுவே நீங்கள் வட திசையில் பயணத்தை மேற்கொண்டால் ஓரளவு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. இருப்பினும் தொழில் முதலீட்டில் ஆபத்து இருப்பதால் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
பொருளாதாரம்
பொருளாதார ரீதியாக எந்த முன்னேற்றமும் இந்த மாதத்தில் ஏற்படாது. நீங்கள் என்ன தான் கடின உழைப்பையும், வெளியூர் பயணத்தையும் மேற்கொண்டாலும் லாபம் சரி வரக் கிடைக்காமல் தவிப்பீர்கள். தொழிலில் முதலீடு செய்தல், புதிய முதலீடு தொடக்கம் போன்றவற்றை சிறுது காலம் தள்ளிப் போடுதல் நல்லது. ஏனெனில் இது மூதலீட்டிற்கான சரியான நேரம் கிடையாது. நல்ல நேரம் வரும் வரை காத்திருந்து செயல்படுங்கள். லாபம் கிட்டும்.
குடும்ப உறவுகள்
குடும்பத்தில் அமைதி நிலவும். மே 16 ஆம் தேதிக்கு பிறகு கல்யாணமாகதவர்களுக்கு காதல் கைகூடும். இந்த மாதம் முழுவதும் குடும்பத்தில் குதூகலம் நீடிக்கும். மே 1 முதல் 5 ஆம் தேதி வரை உங்கள் காதல் துணையிடம் இருந்து நிறைய ஆச்சரியமூட்டும் பரிசுகளும் அளவு கடந்த அன்பும் கிடைக்கும்.
அதிர்ஷ்டம்
அதிர்ஷ்டமான எண்கள் :5,35 50,57 மற்றும் 82
அதிர்ஷ்டமான நாட்கள் :7,8, 16,17 18,25 மற்றும் 26.
அதிர்ஷ்டமான
நிறங்கள் :ஆப்பிள் பச்சை, குங்குமச் சிவப்பு
மிதுனம் ராசி அன்பர்களே! இந்த மாத மே 2018 ராசி பலனை கூடிய விரைவில் எங்கள் இணையதளத்தில் கண்டு அறியலாம். வணக்கம்.



Click it and Unblock the Notifications