கணவர் ஹோமோசெக்ஸ் விருப்பமுள்ளவர் என்று மனைவிக்கு தெரிந்தால்? WonderWomen #004

Posted By:
Subscribe to Boldsky

நம் வீட்டு சுட்டிக் குழந்தைக்கு மூன்று வயதாகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது அந்த குழந்தை என்ன சொல்லும், என்ன செய்யும் என்று நினைத்துப் பாருங்கள்.

தொடர்ந்து உங்களது கற்பனைக் காட்சிகளை விரித்து யோசியுங்கள். மூன்று வயதாகிறது என்றால் மொபைலை வாங்கிக் கொண்டு கேம்ஸ் விளையாடும் என்று நினைக்காதீர்கள் ஏனென்றால் இந்த சம்பவம் நடப்பது 1932.

அந்த காலத்தில் என்றால்..... ஒரு குழந்தை என்ன செய்துவிட முடியும். சிறிய குழந்தை என்பதால் பொம்மை கேட்டு அழலாம், அப்பாவோடு வெளியில் செல்ல வேண்டும் என்று அடம்பிடிக்கலாம். பிடித்த திண்பண்டங்கள் கேட்டு அழலாம். அவ்வளவு தானே என்று நினைக்கிறீர்களா தொடர்ந்து படியுங்கள்.

Life story of human computer sagunthala devi

இந்தியாவின் பெருமையை உலகிற்கே எடுத்துரைத்த ஒரு ஜாம்பவன், கணினியுடன் போட்டிப் போட்டு விஞ்சும் திறன் படைத்த சகுந்தலா தேவிப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளப்போகிறீர்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குடும்பம் :

குடும்பம் :

நவம்பர் 4,1929 ஆம் ஆண்டு பெங்களூரில் சகுந்தலா தேவி பிறந்தார். மிகவும் வறுமையான குடும்பம். பார்ப்பனர்கள் என்றாலும் சகுந்தலா தேவியின் அப்பா தங்களது குலத் தொழிலை செய்யாமல் ஒரு சர்க்கஸ் கூடாரத்தில் பணியாற்றினார்.

அங்கே மேஜிக் செய்து காண்பிப்பார்.

கல்வி :

கல்வி :

சாப்பாட்டிற்கே வழியில்லாத போது கல்வி எல்லாம் எங்கிருந்து கிடைத்து விடப் போகிறது. சகுந்தலா தேவியை படிக்க வைக்க முடியவில்லை. அவ்வப்போது தனது மகளுடன் கார்ட் கேம் விளையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் சகுந்தலா தேவியின் அப்பா.

தொடர்ந்து எல்லா போட்டிகளிலும் சகுந்தலாவே வெற்றிப் பெற்று வந்தார். என்ன இது, தொடர்ந்து மகளே ஜெயிக்கிறாளே என்று ஒரு பக்கம் சந்தோசம் இருந்தாலும் இன்னொரு பக்கம் அது எப்படி என்று கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டார்.

இது தான் லாஜிக் :

இது தான் லாஜிக் :

இவராக கார்ட் எண்களை மாற்றிக் கொடுப்பது, புதிய கார்டை சேர்ப்பது, பின்னர் வேண்டாம் என்று பின் வாங்குவது என என்னென்னவோ செய்தார், ஆனாலும் போட்டியின் இறுதியில் சகுந்தலா தான் வெற்றிப் பெற்றார்.

சில மாதங்களுக்கு பிறகு தான் சகுந்தாலாவின் அப்பா ஒரு உண்மையை கண்டுபிடித்தார். அது என்ன தெரியுமா? சகுந்தலா கார்டில் இருக்கும் எண்களை உடனே மனப்பாடம் செய்கிறார். வெற்றி பெற எந்த எண் வேண்டும், கூடுதலாக நமக்கு வர வேண்டிய எண் என்ன கணக்கிட்டு அதற்கேற்ப விளையாடுகிறார் என்பதை கண்டுபிடித்துவிட்டார்.

திறமை :

திறமை :

மகளின் இந்த அசாத்திய திறமையை கண்டுபிடித்த பிறகு, அவருக்கு சில அடிப்படை கணக்குகளை கற்றுக் கொடுத்தார். பின் மகளின் கணக்குத் திறமையை வீதி வீதியாக மக்கள் முன்னிலையில் செய்ய வைக்க ஆரம்பித்தார்.

சகுந்தலா தேவிக்கு ஆறு வயதான போது மைசூர் பல்கலைகழகத்தில் தன்னுடைய திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார்.

சுற்றுப் பயணம் :

சுற்றுப் பயணம் :

அதன் பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஒஸ்மானியா பல்கலைக்கழகம் என தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழகங்களுக்குச் சென்றார், 1944 ஆம் ஆண்டு தந்தையுடன் லண்டன் பயணமானார்.

அங்கே பல்வேறு கல்விக்கூடங்களில் தன் திறமையை வெளிப்படுத்தினார்.

விடை தவறு :

விடை தவறு :

1950 ஆம் ஆண்டு அக்டோபர் ஐந்தாம் நாள் சகுந்தலா தேவியை பிபிசியிலிருந்து நேர்காணல் எடுத்துக் கொண்டிருந்தார்கள். மிகவும் கடினமான ஒரு கணக்குப் புதிர் ஒன்று சகுந்தலாவிற்கு கொடுக்கப்பட்டது. நொடிப்பொழுதில் அதனை தீர்த்து விடையை கொடுத்தார்.

ஆனால் நேர்காணல் செய்த நபர் தயாரித்து வைத்திருந்த விடையும், சகுந்தலா தேவி கூறிய விடையும் பொருத்தமாகவில்லை.

Image Courtesy

மனித கணினி :

மனித கணினி :

என் விடை தான் சரியானது என்று ஊர்ஜிதமாக கூறினார் சகுந்தலா தேவி. நேர்காணல் செய்த நபரும், அந்த கேள்வியை தயாரித்துக் கொடுத்த நபரும் மீண்டுமொருமறை அந்த கணக்கை கால்குலேட்டர் உதவியுடன் சரி பார்த்தார்கள். சகுந்தலா சொன்னது தான் சரியான விடை என்று இறுதியில் கண்டுபிடித்தார்கள்.

அவ்வளவு தான் இந்த விஷயம் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. சகுந்தலா தேவியை ஹியூமன் கம்ப்யூட்டர் என்று அழைக்க ஆரம்பித்தனர் மக்கள்.

Image Courtesy

23 ரூட் :

23 ரூட் :

அதன் பின்னர் 1977 ஆம் ஆண்டு டல்லாஸ் பல்கலைக்கழகத்திற்கு சென்ற போது அங்கே 23ர்ட் ரூட் நம்பர் என்ன என்று கேட்கப்பட்டது. அதன் விடை 201 டிஜிட்களில் வரும் .

ஐம்பதே நொடிகளில் விடையை எழுதி அசத்தினார் சகுந்தலா. இந்த கேள்வியை கேட்ட ஆசிரியர் போர்டில் எழுதி தீர்த்து விடையை கண்டுபிடிக்க நான்கு நிமிடங்கள் ஆனது.

கணினியால் இந்த விடையை கொண்டு ஒரு ஒரு நிமிடம் ஆனது. ஆனால் சகுந்தலா ஒரு நிமிடத்திற்கும் குறைவாக ஐம்பது நொடிகளில் விடையை கண்டுபிடித்து விட்டார்.

Image Courtesy

 28 நொடிகள் போதும் :

28 நொடிகள் போதும் :

1980 ஆம் ஆண்டு 7686369774870 மற்றும் 2465099745779 என இந்த எண்களையும் மல்டிப்ளை செய்ய வேண்டும் என்றார்கள். 28 நொடிகளில் அதன் சரியான விடையை கொடுத்தார் சகுந்தலா.

இவர் சொன்ன, 18947668177995426462773730 விடை தான் சரியானது. இதைத் தொடர்ந்து இவரது சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது.

Image Courtesy

எழுத்தாளர் :

எழுத்தாளர் :

இவர் கணக்குப் புதிர் மட்டுமல்ல எழுத்தாளரும் கூட இவர் ஹோமோசெக்ஸ் குறித்து எழுதிய The World of Homosexuals என்ற புத்தகம் ஹோமோ செக்ஸ் குறித்து முதன் முதலில் இந்தியாவில் பேசப்பட வழி வகுத்தது.

இந்த புத்தகத்திற்கு காரணம், தன் கணவர் ஹோமோசெக்ஸ் விருப்பமுள்ளவர் என்பதனால் எழுதத் தூண்டியது என்றார் சகுந்தலா தேவி.

Image Courtesy

கல்வி உதவி :

கல்வி உதவி :

தன் பெயரில் ஒரு தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்து வசதி வாய்ப்பற்ற குழந்தைகள் படிக்க வழி வகை செய்தார். அதோடு உலகம் முழுவதும் கணக்குப் புதிர்களில் சிறந்து விளங்கிய குழந்தைகளுக்கு சிறப்பு பயிற்சியும் அளித்தார்.

தொடர்ந்து கணக்குப் புதிர்கள் தொடர்பான பல்வேறு புத்தகங்களை வெளியிட்டார்.

Image Courtesy

 சாதனையாளர் :

சாதனையாளர் :

1969 ஆம் ஆண்டு பிலிப்பெய்ன்ஸ் பல்கலைக்கழகம் 'Most Distinguished Woman of the Year' என்ற விருது வழங்கியது. அதன் பின்னர் 1988 ஆம் ஆண்டு ராமானுஜன் மேத்தமெட்டிகல் ஜீனியஸ் என்ற விருது வாசிங்டன் டிசியில் பெற்றார்.

இந்தியாவின் பெருமையை உலகிற்கே வெளிச்சம் போட்டி காட்டிய சகுந்தலா தேவி 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் நாள் உடல் நலக் குறைவினால் காலமானார்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: insync, life, wonder women
English summary

Life story of human computer sagunthala devi

Life story of human computer sagunthala devi
Subscribe Newsletter