Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
கல்லூரி மாணவி முன் சுய இன்பம் கண்ட ஸ்டாப் - ஹாஸ்டலில் பரபரப்பு!
கல்லூரி மாணவி முன் சுய இன்பம் கண்ட ஸ்டாப் - ஹாஸ்டலில் பரபரப்பு!
சொந்த ஊரில் இருந்து பெற்றோர் பெண்களை இப்போது தான் வெளியூர்களுக்கு அனுப்பி அவர்கள் விரும்புவதை படிக்க வைத்து வருகிறார்கள். இப்படியான பெற்றோர் தங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு என்று கருதுவதே படிக்கும் கல்லூரி நிர்வாகமும், தங்கி இருக்கும் ஹாஸ்டலையும் தான்.

ஆனால், வேலியே ஆடுகளை மேய்ந்தால் என்ன செய்வது என்பது போல.. பாதுகாப்பு அளிக்க வேண்டிய ஹாஸ்டல் வார்டனே மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துக் கொண்டால் என்ன செய்வது.
காஞ்சிபுரத்தின் பிரபல கல்வி நிறுவனத்தில், ஹாஸ்டல் வார்டன் ஒருவர் கல்லூரி மாணவி முன் சுய இன்பம் கண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆயிரம் மாணவிகள்!
ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று இரவு காஞ்சிபுரம் எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் கல்வி நிறுவனத்தில் போராட்டம் நடத்தியதாக தெரியவருகிறது. இந்த கல்வி நிறுவனத்தில் ஹாஸ்டலில் தங்கி படித்து வந்த ஒரு மாணவியிடம் ஹாஸ்டல் ஸ்டாப் ஒருவர் தவறாக நடந்துக் கொண்டதால் மாணவியர் போராட்டத்தில் குதித்தனர்.
வார்டன்!
இந்த கல்வி நிறுவனத்தின் ஹாஸ்டலில் வார்டனாக பணிபுரிந்து வந்த நபர் ஒருவர், ஹாஸ்டல் பெண் லிபிடில் மேல் தளத்திற்கு சென்றுக் கொண்டிருந்த போது, அவர் முன்னிலையில் லிப்டினுள்ளேயே சுய இன்பம் கண்டிருக்கிறார்.
லிப்டுக்குள்ளே!
நான்காம் தளத்தில் கீழே இறங்க அந்த பெண் லிப்டில் பட்டன் அழுத்தி இருக்கிறார். லிப்டினும் நுழைந்த ஹாஸ்டல் வார்டன் ஆறாம் தளத்தில் இறங்க பட்டனை அழுத்தி இருக்கிறார். ஆனால், எட்டாம் தளம் செல்லும் வரையில் அந்த பெண்ணை வெளியேற விடாமல், அவரை தடுத்து நிறுத்தி சுய இன்பம் கண்டார் அந்த வார்டன். பிறகு மாணவி கத்தி, கூச்சலிட்டதை அடுத்து அவரை லிபிடில் இருந்து வெளியேற விட்டதாக, அந்த பெண் மாணவி என்.டி.டி.வி செய்திகளில் கூறி இருக்கிறார்.
உடை தான் காரணம்!
இந்த சம்பவத்தையொட்டி கல்லூரி நிறுவனம், இதற்கு காரணம் அந்த பெண் மாணவி உடுத்தி இருந்த முறையற்ற உடை தான் காரணம் என்று கூறி இருக்கின்றனர். மாணவிகள், மேனேஜ்மென்ட் தங்கள் புகாரை சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், இப்படியான சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை அல்ல. இதற்கு முன் ஒரு ஆடவர் ஸ்டாப் எங்கள் அறைக்குள் சிறுநீர் கழித்தார், என பெண் மாணவியர் தலைவி கூறி இருக்கிறார்.
ஜஸ்டிஸ் ஃபார் வுமன்!
மேலும், ஜஸ்டிஸ் ஃபார் வுமன் என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தி குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை ஊடகங்களில் பகிர்ந்ததற்கு நன்றி தெரிவித்தும், எங்கள் நிலைமையை உடனே எடுத்துரைத்ததற்கு நன்றி தெரிவித்தும் அவர்கள் ட்வீட் செய்துள்ளனர்.
பிடிப்பட்டார்!
மாணவியை தடுத்து நிறுத்தி, அவர் முன் சுய இன்பம் கண்டு தகாத முறையில் நடந்துக் கொண்ட அந்த ஆண் வார்டனை மாணவியரின் சிசிடிவி மூலம் கண்டுப்பிடித்ததாகவும், பல்கலைகழகம் என்ன முடிவு எடுக்கும் என்று இன்னும் தெளிவாக தெரியவில்லை என்றும் ட்வீட்டில் கூறி இருக்கின்றனர்.
ஆதரவில்லை!
அந்த ட்வீட்டில், பல்கலைகழகத்தின் துணை வேந்தர், மாணவிகள் இந்த பிரச்சனையை ஊதி பெரிசுப் படுத்துகிறார்கள் என்று கூறியதாகவும், கல்லூரி சார்பாக தங்களுக்கு எந்த ஆதரவும் அளிக்கவில்லை என்றும் தகவல் பகிரப்பட்டுள்ளது.
மாணவி
இப்படி ஒரு சம்பவம் நடந்து உடன் புகார் அளித்தோம், ஆனால், அவர்கள் நீங்கள் உடுத்தும் உடை தான் காரணம். குட்டை உடைகள் உடுத்துவதால் தான் இப்படியான சம்பவங்கள் நடக்கின்றன என்று எங்கள் மீதே திருப்பி குற்றம் சாட்டினர் என்று ஒரு மாணவி நியூஸ் 18 செய்திகளுக்கு அளித்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
மறுப்பு!
எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் துணை வேந்தர் சஞ்சீவ் சஞ்சேதி, நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க முடியாது. மாணவிகள் அளித்த புகார் மேல் நிர்வாகம் முடிவு எடுக்கும். மாணவர்கள் எங்களுடன் பேசி வருகிறார்கள். நாங்கள் இந்த விஷயத்தை குறித்து தீர்வு கண்டு வருகிறோம். இதற்கு விசாரணை நடத்தப்படும் என்று பி.டி.ஐக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

சிசிடிவி!
மாணவி தன் முன் லிப்டில் சுய இன்பம் கண்ட வார்டனை சிசிடிவி ஃபுடேஜ் பார்த்து அடையாளம் காண்பித்துள்ளார். ஆனால், அதிகாரிகள் மாணவியிடம் இதை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாகும். அமைதியாக இருக்கும்படி கூறியதாகவும் மாணவிகள் தெரிவித்து உள்ளனர்.

நடவடிக்கை?!
மாணவிகள் போராட்டத்தில் குதித்த காரணத்தால், உடனே அவர்களை ஆசுவாசப் படுத்த போலீஸ் அங்கே விரைந்தது. நிர்வாகம் இந்த சம்பவம் குறித்து தகுந்த விசாரணை மற்றும் முடிவு எடுக்கப்படும் என்று கூறிய பிறகே மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர்.



Click it and Unblock the Notifications
