Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
இரு பெண்கள் முன் சுய இன்பம் கண்ட ஸ்கூல் வாத்தியார்... டெல்லியில் பரபரப்பு!
இரு பெண்கள் முன் சுய இன்பம் கண்ட டெல்லி வாத்தியார், போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொஞ்சம் யோசித்து பாருங்கள்... நீங்கள் தனியாக வீட்டில் இருக்கிறீர்கள். உங்கள் வீட்டு மாடி பால்கனியில் அமர்ந்து தேநீர் அல்லது காபி அருந்திக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் வீட்டு கேபிள் கனக்ஷன் குறித்து விசாரிக்க வெளியே இருந்து ஒருவர் அழைக்கிறார்.
நீங்கள் வெளியே சென்று பார்க்கும் போது, அங்கிருக்கும் ஒரு ஆண், தனது ஆண்குறியை வெளிப்படுத்தி, உங்கள் முன் சுய இன்பம் கண்டால்... உங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக. ஒரு ஆணுக்கே அதிர்ச்சியாக இருக்கும் எனில் அதுவே ஒரு பெண் என்றால்...?
இப்படியான ஒரு நிகழ்வு தான் டெல்லியின் வசந்த் குன்ச் எனும் இடத்தில் நடந்துள்ளது கடந்த ஏப்ரல் 15ம் நாள் அன்று. இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று கொண்டிருந்த அதே தருணத்தில் ஒரு பெண்கள் மிகவும் தர்பசங்கடமான சூழலில் சிக்கி, அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

யார் அவர்?
வசந்த் குன்ச் என்ற பகுதியில் அந்த ஆண், ஒரு பெண்களின் முன் இப்படியான வக்கிர செயலில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. அந்நபர் ஏற்கனவே இப்படியான சம்பவங்களில் ஈடுபட்டு 14 மாத சிறை தண்டனைக்கு பிறகு சென்ற மாதம் தான் விடுதலை ஆகி வெளிவந்துள்ளார் என்று போலீஸ் குறிப்புகள் மூலம் அறியப்பட்டுள்ளது.

என்ன நடந்தது?
கேபிள் கனக்ஷன் குறித்து சரிபார்க்க வேண்டும் என்று வெளியே அழைத்த அந்த நபர், அந்த வீட்டில் இருந்து பெண் முன்னே அரைமணிநேரமாக சுய இன்பம் கண்டுள்ளார். அவர் இரு பெண்களின் முன்னிலையில் இப்படியான வக்கிர செயலில் ஈடுபட்டுள்ளார். அதில் ஒரு பெண் போலீஸில் புகார் அளித்த பிறகே அந்த நபர் குறித்த தகவல்கள் அறியப்பட்டுள்ளது.

சிசிடிவி
புகாருக்கு பிறகு அந்த பகுதியில் இருந்த சிசிடிவிகளை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது தான் சவுஹன் எனும் அந்த நபர், அந்த ஏரியாவை சுற்றி வந்ததும். ஒருசில வீடுகளை வேவு பார்த்து, பிறகு பால்கனியில் ஒரு பெண் அமர்ந்திருப்பதை கண்டு நோட்டமிட்டு, அவரை வெளியே அழைத்து அவர் முன் சுய இன்பம் கண்டதும் தெரியவந்தது.

கேபிள் கனக்ஷன்!
யாரோ ஒருவர் தங்கள் வீட்டு கேபிள் கனக்ஷன் சரி பார்க்க அழைப்பது போன்ற சப்தம் கேட்டு வெளியே வந்துள்ளார் பால்கனியில் இருந்த அந்த பெண். அப்போது அவருக்கு சவுஹன் சுய இன்பம் கண்டுக் கொண்டிருப்பது அறியவில்லை. ஆனால், அந்த பெண் கீழே வருவதற்கு முன்னரே, அவரது சகோதரி மற்றும் தோழி அந்நபர் குரல் கேட்டு வெளியே வந்து பார்த்துள்ளனர். அவர்கள் இருவரை பார்த்ததில் இருந்தே அந்த நபர் சுய இன்பம் காண துவங்கியுள்ளார் என்று அந்த வீட்டு பெண்மணி பேட்டியில் கூறியுள்ளார்.

குடி போதை!
சவுஹன் எனும் அந்த நபர் இது போன்ற தவறுகளில் ஈடுபடுவது இதுவே முதல் முறை அல்ல. இவர் ஏற்கனவே இப்படியான வழக்குகளில் சிக்கியவர் தான். சந்தீப் சவுஹன் என்பது இவரது முழு பெயர். இரு பெண்கள் அளித்த புகாரின் பெயரில் இவர் மீது போலீஸார் முதலில் வழக்கு பதிவு செய்தனர்.
குடி போதையில் பெண்கள் முன் சுய இன்பம் காணும் பழக்கம் சவுஹனுக்கு இருப்பதாக தெரியவந்துள்ளது.

மற்றொரு வீடு...
சிசிடிவி பதிவின் மூலம் மற்றுமொரு தகவலும் அறிய வந்தது. பால்கனி வீட்டு பெண்மணியை தொடர்ந்து சவுஹன் வேறொரு பெண்ணையும் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அவர் வேலை முடிந்து அலுவலக வாகனத்தில் வந்த அந்த தெருவில் இறங்கி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.
அந்த பெண்ணை பின்தொடர்ந்து சென்ற சவுஹன் சுய இன்பம் கண்டுக் கொண்டே பின் தொடர்ந்துள்ளார். அதை கண்ட அப்பெண் வேகமாக தனது வீட்டுக்குள் ஓடி கதவை சாத்திக் கொண்டார். அப்போதும், சவுஹன் நகராமல், வீட்டுக்குள் நோட்டம் விட்டுக் கொண்டே தெருவில் நின்று சுய இன்பம் கண்டதாக தெரியவருகிறது.

வழக்குகள்!
இப்படியாக சுய இன்பம் காணும் வழக்குகள் மட்டுமின்றி, திருட்டு, சங்கிலி பறிப்பு, பாலியல் துன்புறுத்தல் என சந்தீப் சவுஹன் மீது 20 பல்வேறு வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. பல வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு 14 மாதங்கள் சிறை தண்டனை பெற்ற சந்தீப் சவுஹன் ஒரு மாதத்திற்கு முன்னர் தான் விடுதலையாகி வெளிவந்துள்ளான்.

வாத்தியார்!
தென் டெல்லி பகுதியில் இருக்கும் இருபதுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் இவன் taekwondo எனப்படும் தற்காப்பு கலை கற்றுக் கொடுக்கும் வாத்தியாராக இருக்கிறான். இவனுக்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ளனர். போலீஸ் இப்போது, இத்தனை குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ள இவனுக்கு எப்படி இத்தனை பள்ளிகளில் வேலை கிடைத்தது என்று விசாரித்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications